11/07/2018

விருது வாங்கலையோ விருது...


மைய அரசின் பல்கலைக் கழக மானியக்குழுவின்கீழ், தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் என 20 நிறுவனங்களைத் தேர்வு செய்யுமாறு ஒரு குழு அமைக்கப்பட்டது. அரசு நிறுவனங்கள் 10, தனியார் நிறுவனங்கள் 10 தேர்வு செய்யுமாறு கூறப்பட்டது.

குழுவுக்குத் தலைமை வகித்தவர் தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த கோபாலசுவாமி. எங்களால் தரமான 20 நிறுவனங்களை தன்னால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றுகூறியிருக்கிறார் ஐயா கோபாலசுவாமி.  அந்தக் குழு 6 நிறுவனங்களை மட்டுமே தேர்வு செய்தது.

இந்திய அரசின் மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை, அந்த ஆறு நிறுவனங்களை தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் ('Institute of Eminence) என அறிவித்தது. இவ்வாறு அறிவிக்கப்பட்ட அரசு நிறுவனங்களுக்கு அடுத்த ஐந்தாண்டுகளில் 1000 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்படுமாம்.

தேர்வு செய்யப்பட்ட ஆறு நிறுவனங்கள் எவை ?

• அரசு நிறுவனங்கள் - ஐஐடி-மும்பை, ஐஐடி-தில்லி, ஐஐஎஸ்சி-பெங்களூர் – இவை மூன்றும் நிஜமாகவே புகழ்பெற்ற, பெயர்பெற்ற நிறுவனங்கள்.

• தனியார் நிறுவனங்கள் - மணிபால் பல்கலைக்கழகம், பிட்ஸ் பிலானி – இவையும் புகழ் பெற்றவை.

தனியார் நிறுவனங்களில் மூன்றாவது எது தெரியுமோ?

ஜியோ இன்ஸ்டிட்யூட்.

என்னாது.... இப்படியொரு நிறுவனமா? அது எங்கே இருக்கு என்று அதிர்ச்சி அடைகிறீர்களா?

கவலை வேண்டாம்.

இந்தச் செய்தியை அறிந்த எல்லாருமே அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். நீங்களும் அவர்களுடன் சேர்ந்து அதிர்ச்சி அடையலாம்.

ஜியோ இன்ஸ்டிட்யூட் ரிலையன்ஸ்க்கு சொந்தமானது என்று சொல்லப்பட்டிருப்பது தவிர அது எங்கே இருக்கிறது உள்பட வேறெந்த செய்தியும் யாருக்கும் தெரியாது.

(நாட்டுக்கே பெருமை சேர்க்கும் அப்படியொரு நிறுவனத்தை அறிந்தவர்கள் அதன் வலைதள இணைப்பை கமென்ட்டில் இடலாம்.)

அப் கீ பார் – அம்பானி-அதானி சர்க்கார்

பி.கு. - பத்தர்கள் வழக்கம்போல அப்படிக்கா போய்விடவும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.