05/08/2018

பாண்டிய மன்னனின் அயல்நாட்டு உறவு...


சிங்கள அரசனுக்கும் பாண்டியனுக்கும் நடந்த யுத்தம்...

குதிரைகளும் ராவுத்தர்களும் - 3...

இப்படிப்பட்ட பதிவுகளை இப்போது எழுதக்காரணம் கிருஸ்துவ ஆலயங்களை உடைப்பதும் முஸ்லீம் கிருஸ்தவர்களை வேரறுக்க வேண்டும் என வரலாற்றை மறந்து கலவரம் செய்ய நினைக்கும் இந்துத்துவா வெறியர்களுக்காகவே எழுதுகிறேன். .

நாட்டுடமையாக்கப்பட்ட நூலான கிருத்துவ பெரியார்களின் தமிழுக்கு செய்த தொண்டு என்ற நூலை வாசியுங்கள். கிருஸ்தவ மக்கள் தமிழகத்தில் எப்படி வாழ்ந்தார்கள் என்று தெரியும். .

அதே போன்ற ஒரு ஒற்றுமை
பதிவுதான் இது. .

ராவுத்தர் இனத்தையும் குதிரைகளையும் ஏற்கனவே பார்த்தோம் அல்லவா

அதில் இன்னமும் பல விஷயங்கள் உள்ளது அவைகளை இப்போது பார்ப்போம்.

பாரசீகத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட குதிரைகள் தமிழகத்தில் பாண்டிய நாட்டின் துறைமுகங்களான
பெரியப்பட்டினம் மற்றும்
தேவிபட்டினம் ஆகிய கடற்துறைகளில் கரை இறக்கப்பட்டன. இதனை கண்காணிக்க பாண்டிய மன்னன் தனி அமைச்சகம் ஒன்றை உருவாக்கினார் அதான் வணிகத்துறை.

இத்த வணிகத்தில் கிஸ்ராவில் இருந்து குதிரைகளை தமிழகத்திற்கு அனுப்பும் ஜமாலுதீன் (கிஸ்ரா பகுதி தலைவர்) (இவர் பற்றிய மேலு‌ம் தகவல் பதிவின் இறுதியில் வரும் ) என்பவர் மாறவர்மன் குலசேக பாண்டியனின் பெரும் மதிப்பிற்குரிய மனிதராக இருந்தார்.

இவர் தமது உறவினரான ஜக்கியுதீன் என்பவரை பாண்டிய நாட்டிற்கு குதிரைகளை எடுத்துச்செல்லும் வணிக பொருப்பாளராக ஆக்கினார்.

மூவாயிரம் மைல் தொலைவில் உள்ள குதிரைகளை லாவகமாக அதற்கு எந்த உயிரிழப்புகள் ஏற்படாமல் கொண்டு வரும் இவரை பாண்டிய மன்னன் மாறவர்மன் தமது நட்பு நாட்டு நண்பரான ஜமாலுதீனிடம் பேசிவிட்டு ஜமாலுதீனின் உறவினரான ஜக்கியுதீனை பாண்டிய நாட்டின் வணிகத்துறை அமைச்சராக ஆக்கினார்.

பொதுவாக யானைகளுடன் மல்லுகட்டிய நமக்கு அயல்நாட்டு குதிரைகள் புதியது.

அதனால் கவனிப்பார் அற்று வருடத்திற்கு நூற்றுக்கணக்கான குதிரைகள் இறந்து போய்விடும்.

இந்த பிரச்சினையை தீர்க்க ஜக்கியுதீன் நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து குதிரைகளின் தன்மையை ஏற்கனவே அரிந்த ஜக்கியுதீன் அவைகளை பிரித்தார் .

காத்தீப், லஹ்ஷா,பாஹ்ரைன், ஹீர்மூஸ்,
குல்கத்து , ஆகிய பிரதேச குதிரைகளின் தட்பவெப்ப நிலை உணவு போன்றவைகளை மாற்றினார்.

மற்றும்..

தமிழக தட்பவெப்ப நிலைக்கு குதிரைகளை ஏற்றுக்கொள்ளும் பொருட்டு உணவை மாற்றினார்.

அதன் விவரம் இது.

அதாவது பாண்டிய மன்னன் தமது குதிரைப்படைக்கு ஜக்கியுதீனை அமைச்சராக ஆக்கி அவர் குதிரைக்கு கொடுத்த உணவு.

இதில் நமக்கு ஒரு பயன் உள்ளது.

யாராவது உடல் கொழுக்க இதை செய்து பாருங்கள்.

பார்லி தானியத்தை வறுத்து தயிருடன் கலந்து குதிரைக்கு  கொடுத்தனர்
பின்னர் சூடான பசும்பாலும் கொடுத்தனர்.

நாற்பது நாட்களுக்கு கட்டிப்போட்டு இப்படி கொடுத்து குதிரைகளை கொழுக்க செய்தார் .

பின்னர் பயிற்சி.

அதாவது பயிற்சி பெற உடல் வலிமை வேண்டுமென்பதற்காக முதலில் குதிரைக்கு உணவை கொடுப்பது பின்னர் பயிற்சி கொடுப்பது.

இப்படியாக இருந்தது பாண்டிய மன்னனின் வாணிப அமைச்சகம்,

அடுத்து ஏற்கனவே நான் கூறிய ஜமாலுதீனும் பாண்டிய நாட்டிற்கு வந்து பாண்டியனுடன் நட்பு பாராட்டினார்.

நட்பின் விளைவாக ஜமாலுதீன் தமிழத்திலையே தங்கினார்.

(குழப்பிக்கொள்ள  வேண்டாம் ஜமாலுதீன் வேறு ஜக்கியுதீன் வேறு )

பின்னர் ஜமாலுதீன் பாண்டிய மன்னரால் சக்ரவர்த்தி என்று பாராட்டுபெற்றார் எதனால்?

தமிழ் அரசனுக்கும்
சிங்கள அரசனுக்கும்
நடந்தேறியது உக்கிரமான சண்டை அதில் ஜமாலுதீன் என்ன செய்தார்?

சிங்கள மக்கள் கடும் கோபம் வரும் செயலை செய்தார் ஜமாலுதீன்
அப்படி என்னதான் செய்தார்..

பேசுவோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.