கூடங்குளம் அணு உலைகளை ஆதரித்த முற்போக்கு விஞ்ஞானிகள், அறிவியல் ஆலோசகர்கள் மற்றும் சில அரசியல் கட்சிகள் அனைவருக்கும் ஒரு பந்தயம்...
கடந்த 20 ஆண்டுகளில், கூடங்குளம் அணு உலைகளைப் போல் உலகத்தில் வேறு ஏதாவது உலைகள் இவ்வளவு மோசமாக செயல்பட்டிருக்கின்றனவா என்று சொல்ல முடியுமா?
தமிழ்நாட்டில் வாழக்கூடிய மக்கள், அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள், ஊடகங்கள் என அனைவருக்கும் இந்த தகவல் தெரிந்திருந்தாலும், மீண்டும் தெரிவிக்கிறோம்..
கூடங்குளம் அணு உலைகள் பழுதடைந்து பிரச்சனைகளுக்கு உள்ளாவதுபோல், கடந்த 20 ஆண்டுகளில் உலகத்தில் எந்த அணு உலைகளிலும் நடந்ததில்லை.
அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவர் திரு. கோபாலகிருஷ்ணன் சொன்னதைப்போல, "கூடங்குளம் அணு உலைகள் மொத்த தென்னிந்தியாவிற்கும் ஆபத்தானவை".
(கூடுதல் தகவலாக, கடந்த 5 மாதங்களாக பராமரிப்பு பணிகள் நடைபெற்று, 10 நாட்களுக்கு முன்னர் மின்னுற்பத்தியை துவக்கிய கூடங்குளம் 2வது உலை இன்று காலை "வால்வு பழுதடைந்ததால்" நின்றது. மேலும், முதல் உலை நேற்றுமுதல் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்டது.)
என்ன செய்யப்போகிறோம் ?
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.