11/09/2018

கருப்பு பணம்...


ஒருநாட்டின் அரசு  100 கோடி மதிப்பிலான நூறு ரூபாய் நோட்டுகளை அச்சிடுகிறது. ஆனால் அதை மக்கற் நலத்திட்டங்கள் மூலமாகவே மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும்.

அந்நாட்டின் பொதுப்பணித்துறை அமைச்சர் ஒரு அணைக்கட்டும் திட்டத்தை 100 மதிப்பில் தயாரித்து
அரணிடம் அனுமதிபெறுகிறார்.

மறுபுறம் தனக்கு வேண்டப்பட்டவனிடம் 10 கோடி கமிசன் (ஊழல்) பெற்று கொண்டு அணைக்கட்டும் டெண்டரை கொடுத்து விடுகிறார்

இந்த 10 கோடி ரூபாயும் இப்போது  அவர் கணக்கில் வராத கருப்பு பணமாக உருவெடுக்கிறது.

இந்த பத்துக்கோடிக்கு அந்த அமைச்சர் தங்கநகைகளாக  வாங்குகிறார்.
இந்த பணம் கருப்பு என்பதால் ரசீது போடமுடியாமல் கடைகாரரிடம் கருப்பு பணமாக மாறுகிறது.

நகை கடைக்காரர் , தொழிலதிபர் ஒருவரின்  20 கோடி மதிப்பிலான நிலத்தை  20 கோடிக்கே விலை பேசிகிறார்.

ஆனால் அவரிடம் உள்ள கறுப்பு பணத்தை அழிக்கும் பொருட்டு
10 கோடிக்கு வாங்கியதாக பத்திர பதிவு செய்கிறார்.

தொழிலதிபரிடம்  இப்போது 10 கோடி கறுப்பு பணம் சேர்ந்து விடுகிறது.
அதை வெள்ளையாக மாற்றும் பொருட்டு  சினிமாவில் முதலீடு செய்ய
முடிவெடுக்கிறார். பெரிய ஹீரோவிடம் பேரம் பேசி  15 கோடி சம்பளம் பேசி 5 கோடி மட்டும் கணக்கு காட்டப்படுகிறது.

இப்போது நடிகனிடம் 10 கோடி கருப்பு பணம் சேர்கிறது.

அந்த நடிகன் தன் சொந்த படம் தயாரிக்க இப்பணத்தை பயன்படுத்தி 20 கோடி வசூல் ஆன தன் படம் 30 கோடி வசூல் ஆனதாக கணக்கு காட்டுகிறான்.

இந்த நேரத்தில் அந்நாட்டின் பிரதமர் கறுப்பு பணத்தை அழிக்கிறேன்
என்ற பெயரில் பெரும் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டு மக்கள் அனைவரும் 100 ரூபாய்  நோட்டுகளை வாங்கியில் மாற்றிக்கொள்ளும் படி கோருகிறார்.

மக்களும் தங்களிடம் உள்ள நூறு ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்கிறார்கள்.

இறுதியில்  வங்கிகளில் சேர்ந்த நோட்டுகளின் மதிப்பு அதே நூறு கோடியை வந்தடைகிறது.

ஆனால்  இடைபட்ட நாட்களில்,
நிலமாக,நகையாக,சம்பளமாக,முதலீடாக கறுப்பு பணம் தான் செய்ய
வேண்டிய அனைத்தையும் செய்து முடித்துவிடுகிறது.

இது தான் கறுப்பு பணத்தின் தன்மை
இதுக்கூட அறியாமல் நடவடிக்கை எடுத்த பிரதமரை என்னனு சொல்றது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.