அதற்கு சிறு உதாரணம் கேரளத்தில் ஏற்பட்ட இயற்கை பேரிடர் தான்...
கேரளத்தில் பேரிடர் வந்தபொழுது உங்கள் மனதில் எந்த அளவிற்கு அதன் தாக்கம் இருந்தது(ஏற்படுத்தபட்டது)...
இன்று நம் தமிழகத்தில் கஜா புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உங்கள் மனநிலை எவ்வாறு உள்ளது ஒப்பிட்டு பாருங்கள்...
நம் தமிழகத்தில் பலர் வாழ்வாதரத்தையே இழந்து நிற்கிறார்கள் இதில் யாருக்கும் வருத்தமும் இல்லை... இதனை அனைவரிடத்திலும் கொண்டு செல்ல எந்த ஊடகமும் பிரபலங்களும் சரியான முறையில் செயல்படவில்லை...
இது தான் உளவியல் தாக்குதல்.. கேரளத்தில் ஏற்பட்ட பேரிடரை அரசியலாக்கினர் அதனை ஊடகமும் உங்கள் மனதில் சிறந்த முறையில் விதைத்தது,பிரபலங்கள் அவற்றை ஒவ்வொரு சமூகவலைதளத்திலும் பதிந்து பகிர்ந்து உங்கள் மனதில் ஊடுருவ செய்தனர்...
ஆனால் இங்கு நம் தாய்நிலத்தில் அவ்வாறு ஏதும் நிகழவில்லை...இன்று உங்கள் மனநிலை எவ்வாறு உள்ளது என்று சிந்தனை செய்யுங்கள்...
இது தான் உலக அரங்கின் அரசியல்.. நம் ஒற்றுமை சிதைவதும் வீழ்வதும் தோற்பதும் இங்குதான்... விழித்திடுங்கள் இது மாய உலகம்...
விளம்பரத்தை கொண்டு செயல்படும் மாயத்தோற்றமே அனைத்தும்...
டெல்டாமாவட்டங்களுக்கு கரம கொடுப்போம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.