23/11/2018

அரசு நிலத்தை வழங்குவதில் தவறேதும் இல்லை...


40 ஆண்டாக வசிக்கும் வீட்டுக்கு பட்டா கேட்டு முன்னாள் ராணுவ வீரர் மனு : சீருடை அணிந்து தள்ளாத வயதிலும் வந்தார்.

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் நேற்று நடந்தது. இதில் போளூர் அடுத்த மண்டகொளத்தூர் கிராமத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவவீரர் பெருமாள்(92) என்பவர் சீருடையில் பதக்கங்கள் அணிந்து கொண்டு, தனது மனைவியுடன் வந்து கலெக்டரிடம் மனு அளித்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது...

ராணுவத்தில் 26 ஆண்டுகள் பணியாற்றி கடந்த 1979ம் ஆண்டு ஓய்வு பெற்றேன். நான் மனைவியுடன் மண்டகொளத்தூர் பகுதியில் கடந்த 40 ஆண்டுகளாக குடிசையில் வசித்து வருகிறேன்.

இந்தநிலையில் தற்போது, நான் குடியிருந்து வரும் பகுதி அரசுக்கு சொந்தமான இடம் எனக்கூறி உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று சேத்துப்பட்டு பிடிஓ கூறி வருகிறார். வயதான காலத்தில் நாங்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் மனவேதனையில் இருந்து வருகிறோம். எனவே நாங்கள் வசித்து வந்த இடத்திற்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளனர். மனுவினை பெற்றுக்கொண்ட கலெக்டர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.