23/11/2018

இது வரை இந்தியத்திடம் இருந்து எந்த ஒரு அதிர்ச்சியோ, உதவியோ வரவில்லை.. வரலாறு காணாத பல ஆயிரம் கோடி.. புயல் சேதத்திற்கு...


இதுவே நாம் ஒரு டோல்கேட்டை அடிச்சி நொறுக்கிறுந்தால், இன்னேரம் ஒட்டு மொத்த இந்திய ஊடகமும் அதிகாரமும் அலறியிருக்கும்.

GST உட்பட எல்லா வரிப்பணமும், ரயில் கட்டணம் எல்லாம் நேரடியாக டில்லிக்கு சென்றடைகிறது...

ஆனால் நாம் எந்த ஒரு உதவிக்கும் மாநில அரசை தொங்க வேண்டியுள்ளது.. விடுமுறைக்கு ஊருக்கு செல்வதற்கு கூட கழிவறையிலயும், படிகளிலயும் ரயிலில் தொங்க வேண்டியுள்ளது..

பறிக்கப்படும் வரிப்பணம் டில்லியில் இருந்து பெரிய வங்கிகளுக்கு போகிறது, பின்னடைவான மாநிலங்கள் என்ற பெயரில் பல மாநிலங்களுக்கு பணம் செல்கிறது.. அவர்கள் பெருமுதலாளிகளுக்கு கொடுத்து, வெளி நாடுக்கு பத்திரமாக அனுப்பி வைக்கிறார்கள், நலிவடைந்த மாநிலங்கள் என்ற பெயரில் அந்த மாநிலங்களின் விவசாய கடன் முதற்கண்டு எல்லாமே தள்ளுபடி செய்யப்படுகிறது.

இந்தியாவிலேயே 100% கட்டணம் எடுத்து ரயில் வருமானத்தில் முதல் இடத்தில் இருக்கும் தமிழ் நாட்டுக்கு இதுவரை இரட்டை தண்டவாளம் கூட போட படவில்லை.. ஆனால் புல்லட் ரயில், ராஜஸ்தானி போன்ற வண்டிகள் எல்லாம் பயணக்கட்டணமே எடுக்காமல் பயனிக்கும் வட மானிலங்களில் ஓடுகிறது!. அப்படியே தமிழ் நாட்டுக்கு வந்தாலும் சென்னையோட வந்து விட்டு, வட மாநில தொழிலாளர்களை இறக்கி விட்டுட்டு சென்றுவிடும்..

இது எப்படி ஒரு நாட்டுக்கு வளர்ச்சியை கொடுக்கும்? ஒரு வீட்டின் ஒருவன் உழைத்து, உழைக்காத ஊதாரியாக திரியும் உடன் பிறப்பவர்களுக்கு சோறு போட்டு, அவனால் அந்த வீடு முன்னெறிவிடும் நினைப்பது முட்டாள்தனமே..

இந்திய ஒன்றியம் வல்லரசு ஆக வேண்டுமா? அதற்கு அதிகார பரவலாக்கம் செய்யப்பட வேணும்... அந்தந்த மாவட்ட வரி அந்த மாவட்டத்திற்கே. மாநிலங்கள் 5-10% வேண்டுமானல் வசூலிக்கப்படும் வரியில் தொகுப்பு நிதியான மத்திய நிதிக்கு கொடுக்கப்பட வேண்டும். அந்த நிதி, ராணுவம், வெளியுறவுக்கு, மட்டுமே பயன்படுத்த வேண்டும்..

இது புரியாமல, இந்தியா இந்தியா என்று கத்தி ஒரு புண்ணியமும, கடைசியில் அழிய போவது உழைக்கிற அந்த ஒரு மகனும் தான்...

- தமிழ் தேசியவாதிகள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.