நான் ஓரளவு சம்பாதித்து விட்டேன் அல்லது எனக்கென குறிப்பிட்ட நிலம் இருக்கிறது..
அதனால் நான் தற்சார்புடன் வாழப்போகிறேன் என்பது தான் இங்கு பலரின் சுயநலமாக இருக்கிறது..
நீங்கள் மட்டும் இங்கு வாழ்ந்தால் போதுமா..?
சரி, இப்படி வைத்துக்கொள்வோம்..
உங்கள் நிலம் எங்கோ ஒரு மூலையில், ஒருநாள் இந்த வணிகம் உங்களை சுற்றியுள்ள அனைத்து நிலங்களையும் கூறுபோட்டு, இறுதியில் உங்களிடம் வருகிறது..
வருவதற்கு முன் உங்கள் நிலத்தை சுற்றி அனைத்து வசதிகளையும் தன் அதிகாரத்தால் அடைத்து விட்டது..
இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்..?
ஏனெனில் தனிமனித சுயநலமான மனது ஒரு பெரிய அதிகாரம் மிரட்டும் போது, கீழ்படிந்தே போகும்.. அதுபோல் உங்களை சுற்றியிருக்கிற அனைவரும் தங்கள் நிலங்களை விற்று விட்டனர்..
தற்போது உங்களின் மனநிலை..?
“கருத்தியல் இல்லாத தற்சார்பு எப்போதும் தோல்வியே மட்டுமே சந்திக்கும்..”
அதுபோல் தான் தற்போதைய சிலரின் அறிவாளித்தனமான தற்சார்பு பேச்சுகளும், பதிவுகளும்..
ஒருமித்த கருத்தியல் கருத்துக்கள் உடையவர்களிடம் நீங்கள் தற்சார்பை பேசுவீர்களேயானால் அதுதான் தற்சார்பு செயல்படுத்துவதற்கான முதல் புள்ளி...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.