10/12/2018

புயல் பாதுகாப்பு கட்டிடங்கள் - தமிழகம் முற்றிலும் புறக்கணிப்பு...


மத்திய அரசு இதுவரை கட்டியுள்ள மொத்த புயல் பாதுகாப்பு கட்டிடங்கள் = 567..

இதில் தமிழகத்தில் கட்டப்பட்டவை = 0.

ஆம். இது உண்மை.

ஒரிசா = 312
ஆந்திரா = 218
குஜராத் = 22
மேற்கு வங்கம் = 15

என பிற மாநிலங்களில் கட்டப்பட்டவையுடன் ஒப்பிடும் போது தமிழகத்தைத் திட்டமிட்டு புறக்கணித்திருப்பது புரிகிறது.

இதுமட்டுமல்ல.

இரண்டாம் கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள கட்டிடங்கள் 353.

மாநில வாரியாக கீழ் வருமாறு...

மேற்கு வங்கம் = 150
குஜராத் = 112
கோவா = 40
கேரளா = 27
கர்நாடகா = 11
மகாராஷ்டிரா = 13
தமிழகம் = 0

தகவல்களுக்கு நன்றி...
விகடன் செய்தி 02.12.2018...

மேற்கண்ட இரு பட்டியல்களில் புயலையே பார்க்காத மாநிலங்கள் கூட  உண்டு.

பிற மாநிலங்களை விட வரி என்கிற பெயரில் அதிகம் கொள்ளை போவது தமிழக பொருளாதாரம்.

ஆனால் தமிழகத்தை மட்டும் தவிர்த்து விட்டு நடுவணரசு உலக வங்கியின் நிதியுதவியுடன் பாதுகாப்பு கட்டிடங்கள் கட்டி அதற்கு சாலைகளும் போட்டு தருகிறது.

நீலம், வர்தா, ஒகி, கஜா என வரிசையாக புயல் தாக்குவதோ தமிழகத்தை.

ஆனால் பாதுகாப்பாக இருப்பது மற்ற மாநிலங்கள்.

தமிழர்களின் உயிருக்கே இங்கு மதிப்பில்லை.

இது திட்டமிட்ட இனப்படுகொலை அன்றி வேறென்ன?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.