கேள்வி: நீங்கள் கெட்ட ஆவிகள் மிகவும் கீழான நிலையிலும்..
நல்லது மேலான நிலையலும் இந்த காற்று மண்டலத்தில் உலவுவதாக சொல்கிறீர்கள்.
இந்த கீழான ஆவி பயந்த சுபாவம் உள்ளவர்களிடம் புகும் என்றும், மேலான ஆவி பிறர் உடலில் புகாது என்றும் கூறுகிறார்கள்..
இதை சற்று விளக்க முடியுமா?
ஒரு ஆத்மா (ஆசைகளோடு கலந்த உயிர்தன்மை) ஒரு உடலிலிருந்து பிரிந்த பிறகு காற்று மண்டலத்தில் மூன்று நிலைகளில் உலவுகிறது.
1, மிகவும் கீழான நிலையில் பெருத்த ஆவலுடன் கூடிய மிகவும் கீழான ஆத்மா.
2, அடுத்த நிலை நடுத்தன்மையில் உள்ள நல்லதும் கெட்டதும் கலந்த சாதரான ஆவிகள்.
3, அடுத்து மேலான நிலையில் உள்ள ஞானம் அடைய கூடிய ஆவிகள்.
மேலான மற்றும் கீழான நிலையில் உள்ள ஆவிகளுக்கு தகுந்த தாய், தகப்பன் கிடைப்பது கஷ்டம்,
ஏனென்றால் மிக மிக கெட்டவர்களும் மிக மிக நல்லவர்களும் இந்த உலகத்தில் கிடைப்பது கஷ்டம்
ஆனால் நல்லதும் கெட்டதும் கலந்த ஆவிக்கு சீக்கிரம் கர்ப்பபை கிடைத்து விடும்
பெரும்பாலும் மேலான ஆவிகள் பிறருடைய உடலில் புகாது, அவை விரும்பினால் தனக்கு தாய், தகப்பனாரை தானே தேர்ந்தெடுத்து கொள்ள முடியும், ஆனால் மற்ற நிலையில் அவற்றினால் முடியாது.
ஆனால் சில மேலான ஆவிகள் ஒருசில காரணம் கருதி ஒரு தகுந்த பிறர் உடலில் புகுந்து விடலாம்.
ஏனென்றால் அவற்றுக்கு மறுபிறப்பு எடுத்து குழந்தை பருவம், வாலிபப்பருவம் , என்று காலத்தை கடந்து செல்ல விரும்புவது இல்லை
சீக்கிரமே மக்களுக்கு சேவை செய்ய நினைக்கும் அந்த மேலான ஆவிகள் ஒரு சிலரிடம் புகுந்து மக்களை நல்வழிபடுத்த முயலும்.
உதாரணமாக : வேதம் எழுதியவர்கள் இதை கடவுளே வந்து அருளினார் என்று சொன்னதாக கூறபடுகிறது.
கடவுள் வந்து நேரடியாக எதுவும் சொல்ல மாட்டார்.
இந்த நல்ல ஆத்மாக்கள் அவர்களது மனதை ஆக்கிரமித்து காலத்துக்கு ஏற்றவாறு அறிவுரைகள், கொள்கை, கோட்பாடுகளை அறிவிக்கும். அப்பொழுது அவர்கள் அறியாமலேயே அவர்கள் எழுதுவார்கள்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.