02/04/2019

பிரபஞ்ச இரகசியம்...


நமக்கு தேவையான அனைத்தையும் இப் பிரபஞ்சத்திடம் இருந்து நாமே பெறலாம்.

இப் பிரபஞ்சம் அனைவருக்கும் சொந்தம்.

இப் பிரபஞ்ச பேராற்றல் நமக்கு தேவையான அனைத்தையும்  கொடுப்பதற்கு தயாராக உள்ளது, நாம் தான் பெறுவதற்கு தயராக இல்லை. தவறு நம் மீது தான்..

அனைவருக்கும் சூரியன். சந்திரன் காற்று என இயற்கைக்கு உட்பட்ட அனைத்தும் சமமாகவே கொடுக்கிறது.

நாம் விரும்பியதை அடைய நமக்கு முழு அதிகாரம் இருக்கிறது.

இதற்காக நாம் யாரும் நம்பி இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

நமக்கு நாமே குரு.. நாம் தான் பில்கேட்ஸ்க்கு ஒரு சூரியன் நமக்கு ஒரு சூரியன் என்று தவறாக புரிந்து கொண்டு இருக்கிறோம்.

நமக்கு ஒரு பிரச்சனை என்றால் நாம் இப் பிரபஞ்சத்திடம் கேட்கும் விதத்தில் தான் தவறு நடக்கிறது.

ஆக மொத்தத்தில் நம்முடைய புரிதல் கோணம் தான் தவறானது.

சரி இப்பொழுது இப் பிரபஞ்ச பேராற்றலை நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தி எப்படி வெற்றி காண்பது என்பதை பார்ப்போம்.

மிக மிக சுலபமான வழி முறையாக உள்ளதே, பலன் அளிக்கு்மா என நினைக்க வேண்டாம். பயன்படுத்தி பாருங்கள்  பலன் நிச்சயம்.

மந்திரம் சொல்ல வேண்டாம. தியானம் செய்ய வேண்டாம். பணம் செலவு செய்ய வேண்டாம் நேரம் ஒதுக்க வேண்டாம்.

நாம் சாதாரணமாக செயல்களில் ஈடு பட்டுக்கொண்டே  இப் பிரபஞ்ச சக்தியிடம் அனைத்தையும் பெறலாம்.

இதற்கு எல்லாம் என்ன செய்ய வேண்டும் மிக சுலபம் நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபருக்கும் மனதார நன்றி மூன்று முறை கூற வேண்டும்.

அவ்வளவு தான் மற்றதை இப்பிரபஞ்சம் நமக்கு தேவையானதை நடத்தி காட்ட தயாராகி விடும்.

இதை நாம் செய்வதற்கு மறந்து விடுவோம் இதையும் விட சுலபமான ஒரு வழி உள்ளது.

அது என்ன வென்றால் தற்காலத்தில் தொலைபேசி இல்லாமல் யாரும் இல்லை ஆகவே ஒவ்வொரு தொலைபேசி அழைப்பு மணி ஒலிக்கும்  போதும் நன்றி என்ற ஒரு மாயாஜால வார்த்தயை கூறிவிட்டு பச்சை நிற வண்ணத்தை தொட்டு பேச தொடங்குங்கள்.

பிறகு உங்கள் வாழ்க்கை முறையை மாற்றி நல்ல ஒரு உயர்ந்த நிலையை அடையவதற்க உண்டான  தொடக்க பாதைக்கு இப்பிரபஞ்சம் பச்சை நிற கொடி அசைத்து காட்டி விடும்..

சரி இது எப்படி சாத்தியம் என்று நீங்கள் கேட்கலாம்.

நமக்கு ஒருவர் பரிசு பொருட்கள் அல்லது உதவி செய்யும் பொழுது நாம் என்ன கூறுகிறோம் நன்றி என்கின்ற வார்த்தையை கூறுகிறோம் அல்லவா அதே போல் தான் இதுவும்.

ஐஸ்டீன் சூத்திர படி எந்த ஒரு நேர் வினைக்கும் சமமான எதிர் வினை உண்டு..

அது போலவே இப்பொழுது இங்கே நமக்கு கொடுப்தற்கு முன்பே நன்றி கூறி விடுகிறோம். இப்பொழுது பிரபஞ்சம் நமக்கு கடமை பட்டு விடுகிறது நமக்கு தேவையை நிறைவு செய்யகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.