02/04/2019

ஒரு அடிப்படையான விஷயத்தை நினைவில் கொள்...


நீ செய்வது எதுவாக இருந்தாலும் அதை விரும்பி செய், அதில் அங்கீகாரம் தேடாதே. அது பிச்சையெடுப்பதைப் போன்றது. ஏன் ஒருவர் அங்கீகாரம் தேட வேண்டும் ஏன் ஒருவர் அடையாளம் காணப்படுவதில் இவ்வளவு ஆர்வமாக உள்ளார்.

உன்னுள் ஆழ்ந்து பார் நீ செய்வதை நீ விரும்பாமல் இருக்கலாம், நாம் தவறான வழியில் போகிறோமோ என்ற பயம் உனக்கு இருக்கலாம், எல்லோரும் பாராட்டப்படுவதன் மூலம் நீ நாம் சரிதான் என்ற உணர்வைப் பெறலாம். அங்கீகாரம் நீ சரியான இலக்கை நோக்கி தான் போய் கொண்டிருக்கிறாய் என்ற நம்பிக்கையை கொடுக்கலாம்.

இது உன்னுடைய உணர்வுதான். இதற்கும் வெளி உலகுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மேலும் ஏன் அடுத்தவர்களை சார்ந்திருக்க வேண்டும் எல்லா விஷயங்களுக்கும் அடுத்தவர்களை சார்ந்திருக்கையில், நீயே சார்ந்தவனாகி விடுகிறாய்

நான் நோபல் பரிசை ஏற்றுக் கொள்ள மாட்டேன். அதற்கு பதிலாக இந்த உலகத்திலுள்ள எல்லா நாடுகளிலிருந்தும், எல்லா மதங்களிலிருந்தும் வரும் கண்டனத்தை நான் பெரிதாக மதிக்கிறேன். நோபல் பரிசை நான் ஏற்றுக் கொண்டால் நான் சார்ந்து இருப்பவனாகி விடுகிறேன். நான் என்னை மதிக்கவில்லை, பதிலாக நோபள் பரிசை மதிக்கிறேன் என்றாகி விடும். இப்போது நான் என்னை மதிக்கிறேன் வேறு எதற்க்கும் நான் மதிப்பளிக்கவில்லை. இந்த வழியில் நீ தனித்துவமானவனாக இருக்கலாம். இப்படி தன்னுடைய வழியில் முழுமையான சுதந்திரத்தில் வாழ்வது, உன்னுடைய சொந்த காலில் நிற்பது, தன்னுடைய சொந்த முயற்சியில் இருப்பது ஒரு மனிதனை உண்மையான நிலை பெற்றவனாகவும் வேரூன்றியவனாகவும் மாற்றும். அதுதான் ஒரு மனிதன் மலர்தலின் ஆரம்பம்.

தன்னைப் பற்றிய உணர்வு சிறிதளவாவது இருக்கும் மனிதன் தனது அன்பில், தனது சொந்த முயற்சியில், மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி சிறிதளவு கூட கவலைப்படாமல் வாழ்வான். உனது வேலை எந்த அளவு மதிப்பு வாய்ந்ததோ அந்த அளவு குறைவாகத்தான் உனக்கு மரியாதை கிடைக்கும். மேலும் உனது வேலை மிகுந்த புத்திகூர்மை கொண்ட வேலையாக இருக்கும் பட்சத்தில் உனது வாழ்நாளில் உனக்கு மதிப்பு கிடைக்காது. நீ கண்டனம் செய்யப் படுவாய். இரண்டு மூன்று நூற்றாண்டுகள் கடந்த பிறகு உனக்கு சிலை வடிக்கப்படும். நீ எழுதிய புத்தகங்கள் மதிக்கப்படும். ஒரு உண்மையான அறிவாளியை புரிந்து கொள்ள இந்த சாதாரண மனித குலத்திற்கு மூன்று நூற்றாண்டுகள் தேவைப்படும். இந்த இடைவெளி மிகப் பெரியது. முட்டாள்களால் மதிக்கப்பட நீ அவர்களது கோட்பாட்டிற்க்குள் அடங்க வேண்டும், அவர்களது எதிர்பார்ப்பின்படி இருக்க வேண்டும். இந்த நோய் பிடித்த மனித குலம் மதிக்க வேண்டுமானால் நீ அவர்களை விட நோய் பிடித்தவனாக இருக்க வேண்டும். அப்போது அவர்கள் உன்னை மதிப்பார்கள். ஆனால் அதனால் நீ பெறுவது என்ன நீ உனது ஆன்மாவை இழக்கிறாய், நீ எதையும் பெறுவதில்லை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.