29/10/2020

3ஆம் உலக யுத்தம் நாஸ்ட்ரடாமஸ் புகைப்பட குறிப்புக்கள்...

 


இந்த படத்தை பாருங்கள். ஒரு கட்டிடம் எரிவது போன்று வரையப்பட்டுள்ளது.

இது தான் 2001.09.11 அன்று அமெரிக்க இரட்டை கோபுரத்துக்கு நடந்த விபரீதத்தை விளக்குவதற்காக… நாஸ்ட்ரடாமஸால் வரையப்பட்ட படம் என கருதப்படுகிறது.

இது தொடர்பான அவரது குறிப்பிலும்… ஒரு புதிய நகரத்தை… விண்னிலிருந்து வரும் இயந்திர பறவைகள் தாக்கியழிக்கும்.. எனும் பொருள் பட எழுதியுள்ளாராம்.

அந்த புதிய நகரம் எனும் வார்த்தை நியுஜோர்க் கை குறிப்பதாக கருதப்படுகிறது. இயந்திர பறவைகள் என்பது… விமானம். (நாஸ்ட்ரடாமஸ் காலம் 1600).

ஆனால்… இன்னொரு குறிப்பில்..  விண்ணிலிருந்து வரும் நெருப்பு கற்கல் புதிய நகரை நிலை குழைய செய்யும்… எனும் பொருள் பட கூறியுள்ளார்.

அதுவும் இதே சம்பவத்தை குறிப்பதாக இருக்கலாம். அல்லது… 3ம் உலக யுத்தத்தின் போது நடக்க இருக்கும் அணுகுண்டு தாக்குதல்களை குறிப்பதாகவும் இருக்கலாம்.

அடுத்த படத்தை பாருங்கள்… பாம்பு இரத்தம் அல்லது விசம் கக்குவது போல்… வரையப்பட்டுள்ளது..

இது 3ம் உலக யுத்தத்தை குறிக்கும் படம் என கருதப்படுகிறது. இங்கு இந்த 3 இரத்த துளிகளும், 3 தனிப்பட்ட மனிதர்களை குறிக்கும் என… ஆய்வாளர்கள் கருதுகின்றனர்..

முதல் துளி… ஜூலி கிறிஸ்.. இரண்டாம் துளி… ஹிட்லர்..  மூன்றாம் துளியாக… பெரும்பாலும்… பில்லேடன் , கடாஃபி, முல்லா உமர், முகமட் அஹ்மதிநெஜாட்… இருக்கலாம் என்று ஒரு நீண்ட பட்டியலை ஆய்வாளர்கள் கூறினார்கள் / கூறிவருகிறார்கள்..

ஆனால், இதில் பில்லேடன் , கடாஃபி ஏற்கனவே இறந்து விட்டார்கள்… முல்லா உமர் தலைமறைவாகவுள்ளார்.

அதை அடுத்து அஹ்மதிநெஜாட் மற்றும் வடகொரிய அதிபர்கள் இந்த 3 ஆம் துளிகளாக இருக்கலாம் என கருதப்படுகிறார்கள்.

( நாஸ்ட்ரடாமஸின் குறிப்புகளில் ஒரே ஒரு குறிப்பில் மட்டும் தான் தெளிவாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அது லூஜி பாஸ்டர் உடையது )..

இந்த படத்தில்… 3 துளிகள் காட்டப்பட்டு உள்ள போதும். அவரின் குறிப்புகளின் படி… 7 உலக யுத்தம் நடை பெறும் என்பது திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளதாம்.

அதனால்… இப்படத்துக்கு வேற அரத்தமும் இருக்கலாம் என கருதப்படுகிறது..

எனது கருத்தின் படி… முதல் 3 ம் மட்டும் தான் தனிப்பட்ட மனிதர்களின் முக்கிய பங்களிப்பால் ஏற்பட்ட, ஏற்படபோகும்… யுத்தம் என்பதை குறிப்பதாக இருக்கலாம்.

இன்னொரு முக்கிய மான விடையம்…

3ம் உலக யுத்தம் அடுத்தடுத்த நாடுகளின் மூலமே ஏற்படும் என கூறப்பட்டுள்ளது…

இந்தியா - சீனா… வடகொரியா - தென் கொரியா… இலங்கை – ஈழம்...

இலங்கை மற்றும் ஈழத்தை நான் குறிப்பிட்டிருப்பதற்கு வலுவான ஒரு காரணம் இருக்கிறது..

அது என்ன என்பதை பின்னர் ஆராயலாம். தமிழரை குறிப்பிட்டாரா அல்லது பிரித்தானியர்களை குறிப்பிட்டாரா என்பது தீர்மானிக்க முடியாத ஒன்று..

காலம் ஒழுங்காக கூறமுடியவில்லை… 2012 தொடக்கம் 2023 வரைக்கும் இடையில் நடைபெறும் என கருதப்படுகிறது..

மூன்றால் உலக யுத்தத்தின் பின்னர் நாடுகளின் நிலை என்னவாகும் என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்…

முக்கியமாக இந்தியா என்னவாகும் என்பதை பார்க்கலாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.