22/10/2020

சமஸ்கிருதத்தை ஒரு மொழி என்று சொல்வதே ஒரு நகைச்சுவை...

அது  ஒரு குழுவுக்குறி. அது (தமிழர்களும் ) ஒரு குழு தமக்குள் பேசிக்கொள்வதற்காக ஏற்படுத்திக் கொண்ட ஒரு பரிபாஷை. அது ஒரு மொழியாய் இருந்திருந்தால், அதுவும் செம்மொழியாய் இருந்திருந்தால் அது தமக்கென எழுத்து வரிவடிவத்தை உருவாக்கிக் கொண்டிருந்திருக்கும். ஆனால் அப்படி ஒரு எழுத்து வடிவத்தை சம்ஸ்கிருதம் உண்டாக்கி கொண்டிருக்கவில்லை. பிற்காலத்தில் அந்த குழுவிடம் இருந்து சமஸ்கிருதத்த்தை பறித்துக்கொண்ட வந்தேறி ஆரிய --  வடுக திராவிட கூட்டம் சமஸ்கிருதத்துக்கு இந்தி எழுத்துக்களை பயன்படுத்திக் கொண்டது. 

இன்றுவரையில் இந்தி எழுத்துக்களால் தான் சமஸ்கிருதம் எழுதப்படுகிறது. சம்ஸ்கிருதத்துக்கு காலமோ, சம்சயமோ எதுவுமில்லை. அதிகாரத்தின் நிழலில் ஒரு தற்குறியைப் போல தன்னை வைத்துக் கொண்டது. 

தமிழுக்கு வெகு நெருக்கமாக தமிழர்களால் உருவாக்கப்பட்ட அந்த பாஷையில் பிற்பாடு சுமேரிய பெர்ஷிய ஈரானிய வார்த்தைகளை  எல்லாம் நுழைத்துக்கொண்டு குருவிக்கார பாஷை  போல மாறி விட்டது.  சமஸ்கிருதம் செத்து விட்டது. அதன் சாவுக்கு அழுத பிராமணன் ஒருவர் கூட  இல்லை. .

குருவிக்காரர்கள் இந்தியாவில் அறுபதினாயிரம் பேர் இருக்கிறார்கள். குருவிக்கார பாஷையை பேசவும் அறுபதினாயிரம் பேர் இருக்கிறார்களில். ஆனால் சமஸ்கிருதம் வெறும் பதினாறாயிரம் பேரால் மட்டுமே இப்போது பேசப்பட்டு வருகிறது அரசு தகவல்களின் படி,. அதுவும் கோவில்களில், அரசு ஆதரவு பெற்ற மடங்களில். இடங்களில். சமஸ்கிருத மொழியில் வந்த கடைசி சஞ்சிகையும் நிறுத்தப்பட்டு விட்டது.

இப்போது சம்ஸ்கிருதத்தில் ஒரு பத்திரிக்கையும் இந்தியாவில் வெளியிடப்படவில்லை. இணையத்தில் ஆறு பத்திரிக்கைகள் வெளியிடப்படுகின்றன. அதில் முதன்மையான பத்திரிக்கை வெறும் பன்னிரண்டு பார்வையாளர்களைக் கொண்டிருக்கிறது. 

இது தான் சம்ஸ்கிருதம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.