22/10/2020

அன்பு சக்தியும் நீங்களும்...

 


1. அனைத்திற்கும் ஓர் அதிர்வு அலைவரிசை உள்ளது. நீங்கள் எந்த உணர்வைக் கொண்டிருக்கிறீர்களோ , அந்த உணர்வு தான் இருக்கும் இதே அதிர்வு அலைவரிசையில் உள்ள அனைத்தையும் உங்கள் வாழ்விற்குள் கொண்டு வருகிறது.

2. வாழ்க்கை உங்களுக்குத் செயல்விடை அளித்துக் கொண்டிருக்கிறது. வாழ்க்கை உங்களுடன் தகவல் பரிமாறிக் கொண்டிருக்கிறது. அடையாளங்கள் , எண்ணங்கள் , நபர்கள், பொருட்கள் என்று நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு சூழலும் , ஒவ்வொரு நிகழ்வும் உங்களுடைய அலைவரிசையில் உள்ளன.

3. நீங்கள் தொடர்ந்து மகிழ்ச்சியாக இருக்கும் போது, மகிழ்ச்சியான மக்கள், மகிழ்ச்சியான நிகழ்வுகளால் மட்டுமே உங்கள் வாழ்விற்குள் நுழைய முடியும்.

4. வாழ்வைப் பொறுத்தவரை எந்தவொரு விபத்தும் தற்செயலாக நிகழ்வும் ஏற்படுவது கிடையாது. அனைத்தும் இணக்கமானவை உள்ளது. இது வாழ்வின் எளிமையான இயற்பியல் மற்றும் பிரபஞ்சத்தின் செயல்பாடு ஆகும்.

5. நீங்கள் நேசிக்கும் ஏதோ ஒரு பொருளை நினைத்துக் கொள்ளுங்கள். ஆடை உங்கள் அன்பின் ஆற்றலின் அடையாளாச் சின்னமாக வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் அடையாளாச் சின்னத்தைப் பார்க்கும் போது அல்லது கேட்கும் போதோ, அன்பின் ஆற்றல் உங்களுடன் இருப்பதை நீங்கள் அறிவீர்கள்.

6. ஒரு விஷயத்தில் ஈடுபடுவதற்கு முன் , அன்பின் ஆற்றலை உங்களுக்கு முன்னதாக அங்கு அனுப்புங்கள். உங்களுடைய நாளில் ஒவ்வொரு விஷயமும் சிறப்பாக நடப்பதாகக் கற்பனை செய்யுங்கள். எந்தவொரு காரியத்தைச் செய்வதற்கு முன்னும் உங்களால் முடிந்த அளவுக்கு உங்களுக்குள் அன்பை உணருங்கள்.

7. ஒவ்வொரு நாளும் கேள்விகள் கேளுங்கள். நீங்கள் ஒரு கேள்வி கேட்கும் போது , ஒரு கேள்வியைக் கொடுக்கிறீர்கள். அதற்கான விடையை நீங்கள் பெற்றுத்தான் ஆக வேண்டும்.

8. உங்கள் வாழ்வில் எந்தவொரு விஷயத்திலும் உங்களுக்கு உதவுவதற்கு அன்பின் ஆற்றலை உங்கள் தனிப்பட்ட உதவியாளராகவும் , பணத்தை நிர்வாகிக்கும் மேலாளராகவும் , தனிப்பட்ட முறையில் உங்கள் உடலுக்குப் பயிற்சியளிப்பவராகவும் , உறவுகள் குறித்து ஆலோசனை வழங்கும் ஆலோசனையாளாராகவும் இருக்கும்.

9. உங்கள் மனம் ஏகப்பட்ட விபரங்களால் ஆட்கொள்ளப்பட்டிருந்தால், அந்தச் சிறிய விபரங்கள் உங்கள் வாழ்வை எளிமையாக்கிக் கொள்ளுங்கள் . சிறு விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காதீர்கள் . அது என்ன பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்திவிடப் போகிறது.

10. அன்பின் ஆற்றலுக்கு நேரெதிரானது என்று எதுவும் கிடையாது. அன்பைத் தவிர வாழ்வில் வேறு எந்த சக்தியும் இல்லை. உலகில் நீங்கள் காணும் எதிர்மறையான விஷயங்கள் அனைத்தும் அன்பின் பற்றாக்குறையினால் உருவானவையே.

உற்சாகம் உங்களுடன் எப்போதும் இருக்கட்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.