22/10/2020

தெலுங்கர் திமுக கட்சியே... தமிழர்களுக்கு காவிரி நீர் பிரச்சனை யை உண்டாக்கியது...

 


வரலாற்றின் அடிப்படையில் கி.பி.1146 – 1163 ஆண்டுகளில் மைசூரை ஆண்ட போசள மன்னன் மைசூரில் அணை கட்டி காவிரியை தடுத்தான். காவிரியை தடுக்காமல் ஓடவிடுமாறு ஓலை அனுப்பினான் இரண்டாம் ராஜராஜன். தண்ணீர் தர மறுத்த போது படையெடுத்துப்போய் போய் அணையை உடைத்தான்.

பின்னர் பதினேழாம் நூற்றாண்டில் மைசூரை ஆண்ட தேவ மகாராயர் காவிரியின் குறுக்கே அணை எழுப்பி சோழ நாட்டிற்குத் தண்ணீர் வராமல் தடுத்தார். அப்போது இராணிமங்கம்மாள் மைசூர் அணையை உடைக்கப் படையோடு போனார். படை அங்கு போய்ச் சேருவதற்குள் பெரு மழையில் அணை உடைந்து காவிரி தானகாவே வர தாழ் நிலமான தமிழகம் செழித்தது.

சுதந்திரத்திற்கு முன்பு காவிரி நீரைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக சென்னை மாகாண அரசுக்கும், மைசூர் அரசுக்கும் 1892 ஆம் ஆண்டில் ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டது. "சென்னை அரசின் முன் அனுமதியின்றி மைசூர் அரசு புதிய அணை அல்லது பாசன விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது.” ‘கர்நடாகம் தனது பாசனப் பரப்பை அதிகரிக்கக் கூடாது என்றும் அந்த ஒப்பந்தம் கூறுகிறது.

1911 செப்டம்பரில் மைசூர் அரசு கவிரியில் ஒரு அணை கட்ட தொடங்கியது. இதனால் இரு அரசுகளுக்கும் இடையே 1913-ல் பிரச்சினை ஏற்பட்டது. பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு, 18.2.1924-ல் புதிய ஒப்பந்தம் ஏற்பட்டு கர்நாடகத்தில் கிருஷ்ண ராஜ சாகர் அணையும் (44.827 டி.எம்.சி.) தமிழகத்தில் மேட்டூர் அணையும் (93.50 டி.எம்.சி.) கட்டப்பட்டது.

1974 - இல் 1924 ஒப்பந்தம் முடிவடைந்ததை தொடர்ந்து கர்நாடகம் தன்னிச்சையாக 1924-ம் ஆண்டு ஒப்பந்தத்தைக் கடைப்பிடிப்பதைக் கைவிட்டு காவிரி நீரைத் தடுத்து, தனது அணைகளில் தேக்கிக் கொண்டு, மழைக் காலத்தில் உபரி வெள்ள நீரை மட்டுமே திறந்து விட்டது.

1974ல் முடியும் நிலையில் ஒப்பந்தமே காலாவதி ஆகிவிட்டதாக கூறியதோடு, மைசூர் சமஸ்தானத்துடன் செய்துக் கொண்ட ஒப்பந்தம் எங்களை கட்டுப்படுத்த முடியாது என்று கூறி காவிரியின் உபநதிகளான ஹேமாவதி, ஹாரங்கி, கபினி பகுதிகளில் அனுமதியின்றி அணைகளைக் கட்டி காவிரி தண்ணீர் முழுவதையும் அடைத்துக் கொண்டு காவிரி ஒரு பல மாநில நதி என்பதை மறந்து இயற்கை வழங்கும் நீரை தனியுடைமையாக்கியது கர்நாடகம்.

இதன் மூலம் காவிரி சிக்கல் விசுவரூபம் எடுக்க ஆரம்பித்தது. தமிழக அரசு 1971 ம் ஆண்டு உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது, சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தல் 1971ல் வந்தது.  அச்சமயத்தில் தி.மு.க.-காங்கிரஸ் தேர்தல் கூட்டணி ஏற்பட்டவுடன், தன் மீது சர்க்காரியா கமிஷன் கொடுத்த பரிந்துரையை வைத்து இந்திரா காந்தி வழக்குத் தொடுத்து விடுவாரோ என்ற அச்சத்தின் காரணமாக உச்ச நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்த வழக்கை வாபஸ் பெற்றார் கருணாநிதி.

தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி பிளவு பட்ட போது, காமராஜர் அணியில் இருந்த நிஜலிங்கப்பாவை வீழ்த்தி, தனது ஆதரவாளர் தேவராஜ் அர்ஸை முதல்வராக்கத் திட்டமிட்ட இந்திரா காந்தி, தி.மு.க.வுடன் கூட்டுச் சேர்ந்து காவிரிச் சிக்கலை கர்நாடகத்திலும் அரசியலாக்கி விட்டார். இதற்கு உறுதுணையாக இருந்தவர் திமுக தெலுங்கர் கருணாநிதி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.