31/10/2020

பூனை களும் சகுணம் உண்மைகளும்...

 


மன்னர்கள் காலத்தில் போருக்குப் படை திரட்டிச் செல்லும் வழியில் பூனையைப் பார்த்தால், இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது. அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும் போர்க்களத்திற்கு சென்றிருப்பார்கள். அங்கே சிறுவர்கள், வயதானவர்கள், பெண்கள் மட்டுமே இருப்பார்கள்.

ஆகவே இந்த வழியாகச் சென்றால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக, அவர்கள் வந்த திசையை மாற்றி வேறு திசையில் செல்வார்களாம்.

மேலும் அக்காலத்தில் போக்குவரத்துக்குப் பெரும்பாலும் குதிரையைப் பயன்படுத்தினர்.

பூனையைப் பார்த்தால் குடியிருப்புகள் இருக்கும் என உணர்ந்து, யாரும் அடிபட்டுவிடக் கூடாது என்பதற்காகக் குதிரையில் மெதுவாகச் செல்வார்களாம்.

அதனால்தான் பூனை குறுக்கே போனால் அந்த வழியாகச் செல்லக்கூடாது என்றார்கள்.

நம் முன்னோர்கள் சொல்லி வைத்த இதுபோன்ற பல விஷயங்களைக் காரணம் தெரியாமலேயே இன்று வரை கடைபிடிக்கிறோம்.

பல விஷயங்கள் மூட நம்பிக்கைகளாகவும் திரிக்கப்பட்டுவிட்டது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.