31/10/2020

திராவிடர்கள் எனும் தெலுங்கு பிராமணர்கள்...

பிராமணர்களை ஞானத்தாய்னு உருட்டுவதை எதிர்ப்பதற்கு இதுவும் காரணம், விசயநகர, தெலுங்கு பாளையக்கார நாயக்கர் ஆட்சியில் வகைதொகையில்லாமல் வடுக பிராமணர்களை தமிழ்நாட்டில் குடியேற்றினர்..

பிராமணர்னு சொன்னா இவ்வடுக பிராமணர்களுக்கு வலிக்கும்னு பார்ப்பான்னு உருட்டிய சூத்திர ஈ.வெ.  ராமசாமி நாயுடு, ஐயர், அய்யர் என வகைப்படுத்தியதின் பின்னனிக்கு இதுவும் ஒன்று

வடுக மன்னராட்சி காலத்தில் தமிழ்நாட்டிலிருந்த கோயில்களில் ஓதிக்கொண்டிருந்த தமிழ் பிராமணர்களை, ஓதுவார்களை, வள்ளுவ, பண்டாரங்களை விரட்டியடிச்சிட்டு வடுக பிராமணர்களை உள்நுழைத்து கோயில்களை கைப்பற்றினர்..

நிலைமை இப்படியிருக்க பிரஞ்சு, டச்சு காலனி ஆதிக்கத்தின் பிடியில் தமிழர் மண் சென்றவுடன் கோயில்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்டவர்கள் வெள்ளைக்காரனை நயந்து அரசு வேலைகளை கைப்பற்றினர்..

இப்பதான் ஈ.வெ.ராமசாமி நாயுடுவை கொண்டுவந்து அரசியலில் களமிறக்கி பிராமணர் பிராமணரில்லாதோர் அரசியலை பேசவிடுகின்றனர், செர்மனி, இத்தாலி எசமானர்களின் எடுபுடியாக அறிவியல், பகுத்தறிவு என்று தமிழரை மழுங்கடிக்கும் வேலையை செய்ய அச்சு இயந்திரத்தையும் இறக்குமதி செய்தனர்,

கோயில்களை இந்து அறநிலைத்துறையிடம் ஒப்படைத்து வடுக பிராமணர்களை நிரந்தரமாக்கி அறங்காவல் துறையையும் தெலுங்கர் வசமாக்கினர், இன்றுவரை இந்நிலைதான் தொடருகிறது, தற்போது திமுக இந்துக்களுக்கு, பிராமணர்களுக்கு எதிரான கட்சி என்கின்றனர்..

ஆனால் இனிவரும் தேர்தலில் வடுக பிராமணர்களோ, வடுக இந்துக்களோ திமுகவுக்குதான் வாக்களிப்பனர், அவர்களுக்கு தெரியும் இவர்கள் அடிப்பது நம்மையல்ல, நமக்கு வலிக்காது என்று, அதைவிட ஜெயலலிதா மறைவுக்குப்பின் அதிமுக தமிழர் கைவசம் போனதால் நமக்கு எவ்வகையிலும் பயனில்லை என்பதை உணர்ந்தே வைத்துள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.