அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியக்கூடிய அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் பன்டிகை கால போனஸ் வழங்க மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு போனஸ் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிஐடியு மாவட்ட தலைவர் இரா.பேச்சிமுத்து தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் ரசல், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கட்டுமான மாரியப்பன், பொது தொழிலாளர் பெருமாள், உப்பு சங்க தலைவர் பொன்ராஜ், செயலாளர் சங்கரன், பொருளாளர் மணவாளன், சாலை போக்குவரத்து வையணப்பெருமாள், ஆட்டோ முருகன், மின் ஊழியர் மத்திய அமைப்பு அப்பாதுரை, சிபிஎம் மாநகர் செயலாளர் தா.ராஜா, புறநகர் செயலாளர் பா.ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.