தூத்துக்குடி மாவட்டம் சேர்வைக்காரன் மடம் அருகே உள்ள சிவஞானபுரத்தில் தனிநபர் ஆக்கிரமிப்பில் குளம் இருப்பதால் குளத்து நீரை நம்பி இருக்கும் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்படுவதாக கூறி , தனிநபர் ஆக்கிரமிப்பில் உள்ள குளத்தை மீட்டுத் தர வலியுறுத்தி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில்:-
சிவஞானபுரம் பகுதியில் மருதாணி குட்டம் என்ற குளம் உள்ளது. இந்த குளத்து நீரை எங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் விவசாயத்திற்காகவும், இதர வீட்டு தேவைகளுக்காகவும் பயன்படுத்திக்கொள்ளலாம் என கடந்த காலங்களில் நடந்த கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் இயற்றியிருந்தோம். ஆனால் தற்போது தனியார் ஒருவரின் நலனுக்காக இந்த குளத்தில் இருந்து பம்பு செட்டுகள் மூலம் நீர் உறிஞ்சி வியாபார ரீதியாக வெளியே எடுத்து செல்லப்படுகிறது. இதனை தடுக்க வலியுறுத்தி பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை.
இந்த குளத்து நீரை நம்பி மஞ்சள் விவசாயிகள் மற்றும் ஏனைய சிறு குறு விவசாயிகளும் தங்களது வாழ்வாதாரத்தை அமைத்துள்ளதால், மாவட்ட ஆட்சியர் எங்கள் மனுவின் கீழ் நடவடிக்கை எடுத்து தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்து குளத்தினை மீட்டுத்தர வேண்டும் என கூறினர்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.