20/10/2020

Clover field paradox அறிவியல் விரும்பிகளுக்கான மற்றுமொரு படம்...

 


கதை படி ஒரு ஸ்பேஸ் ஷிப் குழு ஒன்று space இல் ஆய்வு ஒன்று செய்கிறது.

அதாவது பூமியில் energy sorce தீர்ந்து வரும் நிலையில் free energy பெற துகள் முடக்கி (particle accelator ) கொண்டு ஆற்றலை பெற முயற்சிக்கிறது.

பூமியில் நாம் வைத்துள்ள மிக பெரிய ஆய்வு கூடம் அல்லது ஆய்வு கருவி எது என்றால் அது hadron collieder எனும் துகள் முடக்கி தான்.

கிட்ட தட்ட 20 கிமி சுற்றளவு கொண்ட பிரமாண்ட ஆய்வு கருவி அது (படத்தில் அல்ல நிஜத்தில்) அந்த collider இன் மினி வடிவம் ஒன்றை அந்த ஸ்பேஸ் ஷிப் இல் வைத்து இருக்கிறார்கள் அதை வைத்து தான் இந்த ஆய்வு செய்கிறார்கள்.

பல முறை தோல்விக்கு பின் வெற்றிகரமாக அது ஆற்றலை உமிழ்கிறது...

அப்படினு.. நினைத்து சந்தோஷ படுவதற்குள் அந்த கருவி over load ஆகி துகள் களை ஆற்றல்களை வெடித்து சித்தறடிக்கிறது.

அந்த கருவி மிக ஆற்றல் வாய்ந்த ஒன்று எந்தளவு என்றால் அது space time யை யே கிழித்து ரியாலிட்டி யை மாற்றி வேற வேற டைம் லைன்களை இணைத்து மல்டி வெர்ஸ என்று சொல்ல கூடிய பல பரிமாணம் கொண்ட வெவ்வேறு இணை பிரபஞ்சம் அல்லது இணை உலகங்களை ஒன்றாக்கி குழப்பம் விளைவித்து விடுகிறது.

விளைவு ? இங்கே செத்தவன் அங்கே உயிரோடு இருக்கான் அங்கே இருந்து ஒருத்தி இங்க வரா... இன்னோரு டைம் லைன்ல உலக போர் அரம்பிக்குது..

இன்னோரு டைம் லைன்ல மான்ஸ்டர் விலங்குகள் எல்லாம் கிளம்புது...

ஏற்கனவே வந்த clover field படங்களின் தொடர்ச்சியாகவும் அதில் நடந்த நிகழ்வுகளுக்கு லாஜிக் சொல்லும் படியாகவும் இருக்கிறது இந்த பார்ட்.

ஆனாலும் பல பரிமாண கலப்பு ..வேற வேற டைம் லைன் இணைப்பு..

மல்டி வெர்ஸ்... ஸ்பேஸ் டைம் ல ஓட்டை னு செம விஷயங்களை கையில் எடுத்து உள்ள இந்த படம் இன்னும் நிறைய விதமாக அதை அறிவியல் கற்பனை காட்சிகள் கொண்டு பிரமாண்டமாக கொடுத்து இருக்கலாமோ என்று படுகிறது.

சாதாரணமான ஆக்ஸன் சண்டைகள் காட்சி அமைப்புகளுக்கு  இவ்வளவு அறிவியல் பின்புலம் கொண்ட கதை எதற்கு என்ற கேள்வி வருகிறதே..

சரி இனி வரும் clover field பாகங்கள் அதை பூர்த்தி செய்கிறதா என்று பார்ப்போம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.