20/10/2020

மனம் தான் மனித வாழ்வின் விளைநிலம்...

 


அதை செம்மையாக வைத்துக் கொண்டால் வாழ்வு வளம் பெறும்.

மனதை அடக்க நினைத்தால் அலையும்.

அதை அறிய நினைத்தால் அடங்கும்.

தவறு செய்வதும் மனம் தான்.

இனி தவறு செய்யக் கூடாது என்று தீர்மானிப்பதும் மனம் தான்.

அன்றாடம் மனம் பலவிதமான விஷயங்களில் அலையவிட்டு தடுமாற்றம் பெறுகிறது.

குறிப்பிட்ட நேரம் தியானம் செய்து மனதை தூய்மைப்படுத்தினால் மனநலம் மேம்பாடு அடையும்.

வாழ்வில் இடையிடையே சிக்கல்கள் ஏற்படுவது இயற்கையே.

அதைக் கண்டு மிரள்வது அறிவுடைமை ஆகாது.

அவற்றை எப்படி எதிர்கொள்வது என்று சிந்தித்து தீர்வு காண்பதே சிறந்தது.

கவலைப்படுவதால் மட்டுமே சிக்கலில் இருந்து மீளமுடியாது.

இன்னும் சொல்லப் போனால் கவலையின் போது பிரச்சனை மேலும் பெரிதாகிவிடும்.

தீர்க்க முடியாத துன்பம் என்ற ஒன்று வாழ்வில் கிடையவே கிடையாது.

தீர்க்கும் வழிவகைகளை அறியாமல் தான் நாம் துன்பத்தைக் கண்டு அஞ்சுகிறோம்.

திறக்க முடியாத பூட்டு எதுவுமில்லை அதற்கான சரியான சாவியைத் தேடிப் பிடித்தால் போதும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.