09/10/2020

திராவிடம் என்பது...

 


தமிழரல்லாதவர்களின் ஆதிக்கத்திற்கு வழி வகுக்கும் அரசியல் சொல்...

தமிழனை இளித்த வாயாக மாற்ற தேவை திராவிடம் என்ற சொல்..

திராவிட இயக்கத்தின் தமிழ் நாட்டில் ஆட்சிக்கு வந்த பின் சாதனைகள்...


கீழ வெண்மணிப் படுகொலை,

குறிஞ்சாக்குளம் படுகொலை,

உஞ்சனை,

மேலவளவு,

கொடியன்குளம்,

தாமிரபரணி,

பரமக்குடி,

என்று எண்ணிலடங்காப் படுகொலைகளும்...

சாதி மற்றும் இன ஒடுக்கு முறைகளும்...

திராவிடத்தின் ஆட்சியில் அரங்கேறிய அலங்கோலங்கள் தானே..

பார்ப்பன எதிர்ப்பு என்ற போர்வையைக் போர்திக்கொண்டு வந்த திராவிட இயக்கங்கள்..

தமிழரல்லாத தெலுங்கு, கன்னட, மலையாள ஆதிக்கத்தைத் தானே தமிழ்நாட்டில் காலூன்ற வைத்திருக்கிறது..

தமிழ் தமிழ் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த திராவிட இயக்கங்களின் அரை நூற்றாண்டுகால ஆடசிக்குப் பிறகும் தமிழ் எங்கே இருக்கிறது?

பெயர்ப்பலககையில் இருக்கிறதா?

ஆட்சி மொழியாக இருக்கிறதா?

வழக்குமன்ற மொழியாக இருக்கிறதா?

பள்ளியில் பயிற்று மொழியாக இருக்கிறதா?

இந்தி எதிர்ப்பு என்ற போர்வையில் ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் ஆங்கிலத்துக்குத் தாரை வார்த்தது தானே திராவிட இயக்கங்களின் சாதனை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.