09/10/2020

உங்கள் வாழ்க்கையை கொண்டாட்டமாக மாற்றுங்கள்...

 


உண்மையான கொண்டாட்டம் உங்கள் வாழ்க்கையிலிருந்து, உங்கள் வாழ்க்கைக்குள் வர வேண்டும்.

மேலும், உண்மையான கொண்டாட்டம் நாள்காட்டியைப் பொறுத்து அமைவதில்லை.

அதாவது ஜனவரி முதல் தேதியில் நீங்கள் கொண்டாடுவீர்கள் என அமையாது. இது விசித்திரமானது...

வருடம் முழுவதும் நீங்கள் துயரத்தில் ஆழ்ந்து இருப்பீர்கள்,  ஜனவரி முதலாம் நாள் நீங்கள் சட்டென துயரத்திலிருந்து விடுபட்டு நடனமாடுவீர்கள்.

அன்று உங்கள் துயரம் போலியானதாக இருக்க வேண்டும் அல்லது ஜனவரி முதல் தேதி போலியானதாக இருக்க வேண்டும்.

இரண்டுமே உண்மையாக இருக்க முடியாது.

மேலும், ஐனவரி முதல் தேதி கடந்து சென்ற பின்னர், நீங்கள் உங்கள் கருங்குழிக்குத் திரும்ப செல்கிறீர்கள்.

ஒவ்வொருவரும் தமது துயரத்திற்குள், ஒவ்வொருவரும் தமது கவலைக்குள் செல்கிறீர்கள்.

வாழ்க்கை ஒரு தொடர்ந்த கொண்டாட்டமாக அமைய வேண்டும். முழு வருடமும் ஒரு தீபங்களின் திருநாளாக இருக்க வேண்டும்.

அப்போதுதான் உங்களால் வளரமுடியும், மலரமுடியும்.

சிறிய விஷயங்களை கொண்டாட்டமாக மாற்றுங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.