09/10/2020

வெல்வெட் ஷாம்பு உரிமையாளர் ராஜ்குமார் காலமானார்...

 


ஷாம்பு வர்த்தகத்தில் சாஷே பாக்கெட்டின் மூலம் புரட்சி ஏற்படுத்தி, உலகத்தின் பார்வையை தனது பக்கம் திருப்பிய டாக்டர் சி.கே.ராஜ்குமார் காலமானார். அவருக்கு வயது 68.

கெவின் கேர் நிறுவன தலைவர் சி.கே. ரங்கநாதனின் சகோதரரும், சுஜாதா பயோ டெக் ஆய்வகத்தை நிறுவியவருமான சி.கே.ராஜ்குமார். இவர் 1980ம் ஆண்டுகளில் வெல்வெட் ஷாம்பு நிறுவனத்தை துவங்கி சிறுசிறு பாக்கெட்களில் அடைத்து ஷாம்பு விற்பனை செய்ய துவங்கினார். அதன் மூலம் வியாபாரத்தை பெருக்கினார்.

ஷாம்பு வர்த்தகத்தில் சாஷே பாக்கெட்டின் மூலம் புரட்சி ஏற்படுத்தி, உலகத்தின் பார்வையை தனது பக்கம் திருப்பியவர். வெல்வெட் ஷாம்பு, நிவாரன் 90, மெமரி பிளஸ் ஆகியவை அவரது நிறுவனத்தின் தயாரிப்புகளாகும். ஷாம்பு மற்றும் இருமல் மருந்தை சாஷே பாக்கெட்களில் அடைத்து, சாமான்ய மனிதரும் எளிதில் வாங்கும் விலையில் விற்பனை செய்தார். இவரின் தயாரிப்புகள் பெரும்பாலும், அவரது சொந்த ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதாகும்.

கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மோசமாக இருந்தது. அவரை காப்பாற்ற டாக்டர்கள் தீவிர முயற்சி செய்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலமானார். அவருக்கு மனைவி, 2 மகள்கள் மற்றம் ஒரு மகன் உள்ளனர். கடலூர் மாவட்டத்தில் பிறந்த ராஜ்குமாருடன் பிறந்தவர்கள் 5 பேர் ஆவார்கள். கீழ்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பை முடித்தார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.