05/10/2020

தமிழிசைச் சிறப்பு...

 


இசை பலவகை. அதில் தமிழிசை ஒருவகை.

இரண்டெழுத்துள்ள இச்சொல் பொருள் அமைதியுடையது.

சுதி, பாட்டு, பண், பாடுவோர் உள்ளம், கேட்போர் உள்ளம் ஆகிய அனைத்தும் இசைந்தால் தான் அதற்கு இசை என்று பெயர். இல்லையேல் அது ‘இரைச்சல் என்றாகி விடும்’. இசைக்கு ‘புகழ்’ என்றும் பெயர் உண்டு. ‘ஈதல் இசைப்பட வாழ்தல்’ என்ற சொற்றொடரும் இதனை மெய்பிக்கும்.

இசையென்னும் எச்சம் பெறாவிடின் வசையென்ப வையத்தார்க் கொல்லாம் என்பதும் , வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா யாக்கைப் பொறுத்த நிலம் என்பதும், வசைய்யொழிய வாழ்வாரே வாழாதவர் என்பதும் வள்ளுவர் வாக்கு.

இதிலிருந்து வசைக்கு எதிர்மறை இசை என்பதை நன்கறியலாம்.

அக்காலத்து மன்னர்களை பாணரும் புலவரும் இசையின் மூலமே புகழ்ந்ததால், இப்பொருள் வந்தது போலும். (தமிழின் சிறப்பு கி.ஆ.பெ. விசுவநாதம்).

இறைவனையே இசைமயமாகக் கண்டவர்கள் தமிழ் மக்கள்.

ஏழிசையாய் இசைப்பயனாய் இருப்பவனே இறைவன் என்று குறிப்பிட்டனர். இறைவனை இசைக் கொண்டு பாடியே வணங்கினர்.

இம்முறையில் பண்ணோடு கூடிய பக்தி பாடல்கள் பல தமில் மொழியில் உள்ளன. இவற்றுள் தேவாரம், திருவாசகம், நாலாயிரப்பிரபந்தம், திருப்புகழ் முதலியவை குறிப்பிடத்தக்கவை.

தமிழிசைத் தோன்றிய காலம், தமிழ் மொழி தோன்றிய காலமே. தமிழ் மக்களின் எண்ணம், சொல், செயல், வாழ்வு அனைத்தும் இசைக் கலந்தவையாகவே காட்சியளிக்கின்றன.

அவை, தாலாட்டு இசை, சோறூட்ட இசை, திருமண இசை, ஒப்பாரி இசை மற்றும் இன்னும் பல.

இசை என்பது வாய்யினால் பாடுவது மட்டுமல்ல... கருவியினால் இசைப்பதும் இசையே ஆகும்...

அவை தோல் கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி என மூவகைப்படும்.

இவற்றை விழா நாட்களிலும் இசைத்து முழக்குவது மட்டுமல்ல பிற நாட்களிலும் இசைத்து முழக்குவதுண்டு.

மணப்பறை, பிணப்பறை, போர்பறை, விழாப்பறை என்ற சொற்கள் இவற்றை பெய்பிக்கின்றன...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.