இந்த அரசியல் மாற்றங்கள் இலங்கையில் எந்தவிதமான மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது?
கடந்தமுறை கருணாநிதி முதல்வராகப் பதவியேற்ற போது நாங்கள் அவரை முழுமையாக நம்பினோம். ஆனால், அவர் முதல்வராக இருந்தபோதுதான் ஈழத்தமிழர்களின் போராட்டம் சிதைக்கப்பட்டது.
ஈழ மக்களுக்கு ஆதரவாக தமிழக மக்கள் எழுப்பிய கோபத்தை, எழுச்சியை, போராட்டத்தை கருணாநிதி முடக்கினார்.
எங்களுடைய பின்னடைவிற்கு இலங்கை அரசு, இந்திய அரசோடு கருணாநிதியும் ஒரு காரணமாக நிற்கிறார்.
கருணாநிதி பதவியேற்றபோது உலகத் தலைவர், தமிழினத் தலைவர் என்றெல்லாம் நாங்கள் விளித்திருந்தோம்.
ஆனால், இப்போது அவர் தமிழ்நாட்டிற்கே தலைவராக இருக்கத் தகுதியற்றவர் என்று நாங்கள் உணர்கிறோம்.
- தீபச்செல்வன்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.