பெங்களூருவில் தொடர்ச்சியாகப் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரை 42,500 ரூபாய் அபராதம் செலுத்துமாறு காவல்துறையினர் கேட்டநிலையில், வண்டியை போலீஸாரிடமே விட்டுச் சென்றார் அந்த இளைஞர்.
பெங்களூரு, மடிவாலா போக்குவரத்து போலீஸார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஹெல்மெட் அணியாமல் டூவீலரில் அந்த வழியே வந்த அருண்குமார் என்பவரை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர்.
அருண்குமாரின் டூவீலர் நம்பரை காவல்துறையின் `ஸ்பாட் பைன்’ (spot fine) இயந்திரத்தில் சோதித்து பார்த்தபோது, கடந்த இரண்டு வருடங்களாக அவர் ஹெல்மெட் அணியாமல் பயணித்தது, போக்குவரத்து சிக்னல்களை மீறியது, அதிவேகமாக வாகனம் ஓட்டியது என போக்குவரத்து விதிகளை மீறியதான 75 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்துள்ளது. நேற்று, பிடிபட்டபோது பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளையும் சேர்த்து, மொத்தம் 77 வழக்குகள் அருண்குமார் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, அருண்குமாரிடம் 2 மீட்டர் நீளத்துக்கு 42,500 ரூபாய் அபராதத்திற்காண ரசீதை, போக்குவரத்து காவல்துறை அதிகாரி கொடுத்துள்ளார்.
ரசீதைப் பெற்றுக்கொண்ட அருண்குமார், தனது டூவீலரின் மதிப்பு 30,000-த்துக்கும் குறைவே என்று போலீஸாரிடம் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து, தனது டூவீலரை போலீஸாரிடமே விட்டுவிட்டு அருண்குமார் சென்றுவிட்டதாகத் தெரிகிறது. அபராதம் செலுத்த மறுத்ததைத் தொடர்ந்து, போக்குவரத்து போலீஸார் வாகனத்தை பறிமுதல் செய்தனர்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.