12/11/2020

தென் கிழக்காசியாவில் தமிழர்களின் சுவடுகள்...

வனவாசகம் என்ற ஒரு நாடு உண்டு. அதை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?

தமிழர்கள் மலைநாடு என்று அன்போடு அழைக்கப்படும் மலேசியா நாட்டின் தொடர்பு வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்டது என்றும். அறியபட்ட சரித்திர குறிப்புக்களின் வழி இந்தியர்களின் தொடர்பு 5000 ஆண்டுகள் முற்பட்டது எனவும், இராமாயாண மகாபாரதம் நடைப்பெற்ற காலத்தில் தென் கிழக்கு ஆசியா, (ஜா)வா, மலாயா ஆகியவை இந்தியாவோடு இனைந்த பகுதி என்று அறிகிறோம்.

தமிழர் தம் பண்பாட்டில் மதம் இயற்கையாக இடம் பெற்றுள்ளது. நாகரித்தின் தொடக்க காலங்களில் மானுடச் சமூகத்தின் வளர்ச்சியில் மதம் ஆற்றல் மிக்க பங்களிப்பை நிகழ்த்தியிருக்கிறது. உண்மையில் தென்கிழக்கு ஆசிய மக்கள் முதலில் இந்து சமயத்தைத்தான் தழுவினர். அதனால்தான் அவர்களின் பழக்கவழக்கங்களிலும் பண்பாடுகளிலும் மொழிகளிலும் இந்து சமயத்தின் தாக்கம் இன்றும் உணரப்பட்டு வருகிறது.

பாரதம் நடைப்பெற்றக் காலத்தில் மலேசியாவுக்கு “பார்த்தன் திக்கு” விஜயம் செய்துள்ளார். பாண்டவர்களின் சிறந்த பார்த்தன் திக்கு யெளவன தீபத்தையும் (ஜாவா) சு(ஸ்)வர்ண தீபத்தையும் (மலேசியா) கண்டு வெற்றிக் கொடி நாட்டியதாய் பாரதம் கூறுகிறது.

பாண்டவர் தலைவர் தருமபுத்திரர் இராச(ஜ) சூய யாகமொன்றை இந்திரப்பிரச(ஸ்)தத்தில் ( இந்தியா) நடத்தினார். இந்த வைபவத்திற்கு பல நாட்டின் மன்னருக்கு அழைப்புக்கள் கிடைத்தன. அன்றைய மலேசியா மன்னர்களும் கலந்து கொண்டனர். சகாதேவன் அன்றைய மலேசியாவின் பகுதிகளுக்கு கண்காணிப்பாளனாக இருந்து அடிக்கடி வங்க வாயிலாக வந்து சென்றுள்ளார். பாண்டவர்கள் யாவாத்தீவில் ஒரு காலத்தில் நாட்டாண்மைக் கொண்டார்கள் என வியாச முனிவர் குறிப்பிட்டுள்ளார்.

கி.மு 274-232 அசோக சக்கரவத்தி பவுத்த சமயப் போதகர்களை பொன்னாடு என்று போற்றப்பட்ட சுவர்ண பூமிக்கு அனுப்பி வைத்தார். சு(ஸ்)வர்ணம் என்றால் தங்கம் என்று பொருள். அந்த காலத்தில் மலேசியாவில் தங்கம் அதிகம் கிடைத்த காரணத்தால் பொன்னாடு என்று அழைக்கப்பட்டன. கி.மு 200ல் மலேசியாவை “இந்திர பாரத பூரா” என்று அழைக்கப்பட்டது. இந்திர என்றால் தங்கம் , பாரத் என்றால் நாடாகும்.

தமிழ் இலக்கியங்களில் கடாரம் என்று கூறப்படும் பழமைமிக்க ஒரு நாடு மலேசியாவில் இன்று கெடா என்று அழைக்கப்படும் மாநிலம் ஆகும்.கடா அல்லது கயிடா என்பது யானைகளை கன்னி வைத்து பிடிக்கும் இடம் என்று கூறப்படுகிறது. ஆனால் கெடா என்ற வார்த்தை அந்த அர்த்தத்தில் உருவான ஒரு பொருளாக இருக்காது என்பது சிலரின் வாதம்.

பழந்தமிழ் கல்வெட்டுக்கள் கெடாவை கடாரம் அல்லது கழகம் என்று கூறுகின்றது. கடாரம் என்பதின் பொருள் என்னவென்றால் அகன்ற பாணை அல்லது கருமை நிறம் என்று சில சரித்திர ஆராச்சியாளார்கள் கூறுவதுண்டு. அரபியரும் பார்சிகாரர்களும் வட மலேசிய தீபகற்பத்தை கிலா, கலா அல்லது குவலா என்று அழைத்ததுண்டு.

3000 ஆண்டுக்குமுன், இந்திய வேந்தர்கள் கடல் கடந்து கடாரம் வந்த பொழுது அங்கே தவளைகள் சண்டையிட்டுக் கொண்டிருந்தனவாம் அதனால் தான் கடாரத்தை “காத்தா” என்று அழைத்தனர். காத்தா என்றால் மலாய் மொழியில் தவளை என்று பொருள். மலாய்க் காரர்களின் வாய் மொழி கதைகளில் சொல்லப்படும் சில காதல் புனைவு கதைகளிலும் வரலாற்று தகவல்ளிலும் லங்காசுக என்ற ஒரு பண்டைய அரசாங்கம் கெடாவில் இருந்ததகவும் அதன் பண்டைய எச்சங்கள் இன்னும் இருபதாகவும் கூறுகின்றனார்.

பண்டைய இந்திய நாட்டு வியபாரிகள் கெடாவை காத்தாரை என்று அழைத்தாக சரித்திர ஆசிரியர்கள் கூறுகின்றனர். கடாரம் அல்லது கெடா அன்றைய இந்திய வியபாரிகளுக்கு மலை நாட்டின் அடையாள மார்க்கமாகவும் இளைப்பாறி தனது கடற்பயணத்தை கிழக்கு ஆசியாவுக்கு தொடரும் தளமாகவும் விளங்கி உள்ளது. ஆறாம் நூற்றாண்டில் லங்காசுக என்ற அரசாங்கதின் மைய இடமாகவும் லெம்ப பூஜாங் என்று சொல்லபடுகின்ற பழைய வரலாற்று சின்னம் இந்தியர்களின் கலச்சார படை எடுப்புக்கும் நாகரிக அடையாள சின்னமாக திகழ்கிறது.

தமிழர்கள் கி.பி முதல் நூற்றாண்டிலும் அதற்கு முன்பும் தலைச்சிறந்த மாலுமிகளாகவும் படைவீரர்களாகவும் வர்த்தகர்களாகவும் திகழ்ந்தார்கள். வர்த்தக சம்மந்தமாக இந்திய தமிழ் மாலுமிகள் கடல் கடந்து மலேசியாவுக்கு வந்தவர்கள், நாளாடைவில் இங்கு குடியிருப்புக்களையும் அரச அமைப்பையும் எற்படுத்தி சமயம் கலைக் விவசாயம் பண்பாட்டுக் கூறுகளையும் எழுப்பி இருக்கின்றார்கள். காடுகளிலும் குகைகளில் வாழ்ந்த சுதேசிகளுக்கு விவசாயத்தையும் நாகரீகத்தையும் கற்றுக் கொடுத்திருக்கின்றார்கள் நம் தமிழர்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.