12/11/2020

டிரம்ப் ஹெலிகாப்டர் - விற்பனை செய்ய முடிவு...

 


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தான் பயன்படுத்தும் ஹெலிகாப்டர்களில் ஒன்றை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார்.

ஹெலிகாப்டர் மற்றும் விமானங்கள் மீது தீராத விருப்பம் கொண்ட அவரிடம் 3 ஹெலிகொப்டர்கள் மற்றும் பல்வேறு சொகுசு விமானங்கள் உள்ளன.

அந்த வகையில் ட்ரம்ப் பயன்படுத்திய Sikorsky S-76B என்ற ஹெலிகாப்டரைத்தான் தற்போது ஏல விற்பனைக்கு விட தீர்மானித்துள்ளார்.

இந்த ஹெலிகாப்டர் மூலம் தான் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பயணம் செய்து ட்ரம்ப் பிரச்சாரத்தினை மேற்கொண்டிருந்தார்.

இந்த ஹெலிகாப்டரானது கறுப்பு மற்றும் சிவப்பு வண்ணப் பூச்சுடன் அமெரிக்க விமான போக்குவரத்தின் பதிவெண் கொண்டுள்ளது.

இந் நிலையில் இந்த ஹெலிகாப்டருக்கான விலைப்பட்டியல் இன்னும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.