1982 சூலை மாதம் கர்நாடகாவில் உள்ள தமிழர் தாய்நிலமான கோலாரில் தமிழ்மொழிக் கல்விக்காகப் போராடி சுட்டுக்கொல்லப்பட்ட நான்கு தமிழர், காணாமல் அடிக்கப்பட்ட 15 தமிழர்.
அறிக்கை: கர்நாடகத்தில் மொழிக் கொள்கை,கன்னடர்களுக்கு கல்வி வேலை வாய்ப்பில்முன்னுரிமை அளிக்க வகை செய்யும் கோகாக் குழுவின் பரிந்துரைகளை அப்போது முதல்வராக இருந்தமறைந்த குண்டுராவ் தலைமையிலானகாங்கிரஸ் கட்சி அரசு 1982-ம்ஆண்டு அமல்படுத்தியது.
இதனால் மொழிச் சிறுபான்மையினருக்குத் தாய்மொழி கல்வி உரிமையைப் பறிக்க அப்போதைய அரசு முயன்றது.
இதை எதிர்த்து தமிழில் கல்வி கற்கஉரிமை கோரி கர்நாடகத்தில் சிறுபான்மைத்தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.
தமிழர்கள்அதிகம் வசிக்கும் கோலார் தங்க வயலில்இந்தப் போராட்டம் மிகவும் தீவிரமாகநடந்தது.
அறவழியில் நடந்த இந்தப் போராட்டத்தை காவல்துறை அத்து மீறி அடக்கமுயன்றது.
போராட்டம் நடத்திய தமிழர்கள்ஓட ஓட விரட்டி அடிக்கப்பட்டனர்.
காவல்துறையின் இந்த அட்டூழியத்தைப் பொறுத்துக் கொண்டு உரிமைக்காக தமிழர்கள்தொடர்ந்து போராடினர்.
இதனால் குண்டுராவ்அரசு தமிழர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி போராட்டத்தை அடக்க உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்துதங்கவயலில் போராட்டம் நடத்திய தமிழர்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் பால்ராஜ், உதயகுமார், மோகன், பரமேஸ்வரன்ஆகியோர் குண்டு பாய்ந்து இறந்தனர்.
பலர்காயம் அடைந்தனர்.
போலீஸாரால் அழைத்துச்செல்லப்பட்ட பலர்இன்று வரை வீடு திரும்பவில்லை.
அவ்வாறு காணாமல் போனவர்கள் மட்டும் 15பேர்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.