07/11/2020

ஆத்மா...

 


இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொரு உயிருக்கும் ஆத்மா என்பது உண்டு, அப்படிப்பட்ட ஆத்மா பிறக்கும் இடம், காலம் அனைத்தும் பூர்வ புன்னியத்தை அடிப்படையாக கொண்டது.

கடவுள் பாதி மிருகம் பாதி என்பவன் தான் மனிதன், இதில் கடவுள் என்பது ஆத்மா, மிருகம் என்பது மனிதமனம்.

நாம் ஒரு காரியத்தை செய்யும் போது கடவுள் ஆகிய ஆத்மா நமக்கு சரியான திசையை காண்பிக்கும்.

ஆனால் மனிதமனம் ஆன மிருகம் நம்மை தவறான வழியில் நம்மை இழுத்துச் செல்லும்.

அப்படி இழுத்துச் செல்லும் மனம் என்ற மிருகத்தை நம் ஆத்ம பலத்தால் கட்டுப்படுத்தி சரியான திசையில் எடுத்துச் செல்ல வேண்டும்.

மனம் என்ற மிருகத்தை எப்படி ஆத்மாவை வைத்து கட்டுப்படுத்த முடியும்? ஆத்ம பலத்தை எப்படி பெறுவது?

ஆத்ம பலம் பெற குருவின் துணை அல்லது அருள் வேண்டும்.

ஞானம் இரண்டு வகைப்படும் ஒன்று தெய்வீக ஞானம் மற்றொன்று பிரம்ம ஞானம் அல்லது ஆத்ம ஞானம் என்று கூறலாம்.

தெய்வீக ஞானம் நமது கர்ம வினையின் அடிப்படையில் கிடைக்கும் அதாவது நமது பூர்வ புண்ணிய கா்மா சரியாக இருந்தால் தெய்வீக ஞானம் இயற்கையிலேயே கிடைத்து விடும். அல்லது நாம் இப்பிறவியில் செய்யும் நல்லவை, தீயவையைக் கொண்டு உண்டாகும்.

தெய்வீக ஞானத்தின் அடுத்த நிலை தான் ஆத்மா ஞானம் அல்லது பிரம்ம ஞானம், ஆத்ம ஞானம் அல்லது பிரம்ம ஞானம் பெற கட்டாயம் குருவின் அருள் அல்லது துணை தேவை. குருவருள் இன்றி நாம் பிரம்ம ஞானத்தின் வாசலில் தான் நிற்க வேண்டும்.

குருவருள் எப்படி கிடைக்கும்?

நாம் குருவை தேட வேண்டாம், எப்படி நாம் கடவுளை (பரபிரம்மத்தை) தேடுகின்றோமோ அதே போல கடவுளும் தன்னுடைய குழந்தையை மீட்டு தன்னிடம் அழைத்துச் செல்ல ஆசைப்படுகிறது.

அப்படி அழைத்துச் செல்ல பிரம்மம் நேராக வருவதில்லை தனக்கு பதிலாக குருவை அனுப்பி வைகின்றார்கள். நமது செயலும், நமது என்னமும், நமது பூர்வ புண்ணிய கா்மாவும் சரியாக இருந்தால் குரு நம்மை தேடி வருகின்றனர்.

அப்படி வந்த அல்லது கிடைத்த குருவை சிறிதும் ஐயம் இன்றி ஆத்மார்த்தமாக நாம் ஏற்றுக் கொண்டு அவர் வழி நடந்தால் பிரம்ம ஞானம் அல்லது ஆத்ம ஞானத்தின் கதவுகள் திறக்க படும்.

அப்படி திறக்கப்பட்ட பின்பு நம் ஆத்மவானது பரமாத்மாவை (நமது உண்மையான பெற்றோர்களை) சென்று அடைகிறது.

சரியான குரு இவர் தானா என்பதை எப்படி தெரிந்து கொள்ள முடியும், என்ற கேள்வி எழுவது சகஜம் தான், நீங்கள் அதைப் பற்றிய கவலை கொள்ள வேண்டியது இல்லை பிரம்மம் (நமது உண்மையான பெற்றோர்கள்) பார்த்து கொள்ளும்.

நாம் வணங்கும் கடவுளின் மீது முழு நம்பிக்கை வைத்து குருவின் வழி சென்றால் நிச்சயம் இறவா நிலை மீண்டும் பிறவா நிலையை அடைவோம்.

தக்க சமயத்தில் உங்களுக்கு கொடுக்க வேண்டியதை உங்கள் குருவானவர் தருவார் அதை விட்டு விட்டு நம் உடலை காயகல்பம் ஆக்க வேண்டும், அப்படி செய்தால் தான் பிரம்மத்தை அடைய முடியும் என்று நினைக்க வேண்டாம்.

எது எப்போது எப்படி எங்கே நடக்க வேண்டுமோ அது நடந்தே தீரும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.