07/11/2020

மனம் மதிப்பீடு...

 


ஒரு  முறை  மனம் மதிப்பீடு செய்யும் தந்திரத்தைக் கற்றுக் கொண்டு விட்டதானால் அது தொடர்கிறது.

அப்புறம்  நீங்கள்  தொடர்ந்து  உள்ளுக்குள் மதிப்பீடு  செய்து  கொண்டே இருக்கிறீர்கள். 

இது நல்லது இது கெட்டது, பின்னர்  நல்ல பக்கத்தை மட்டுமே எப்போதும்  காட்டிக் கொண்டே கெட்ட  பக்கத்தை உங்களுக்குள்ளே வைத்துக்  கொள்கிறார்கள்.

மிக மிக மெதுவாக, நல்ல பக்கம்  அதிகமாக வெளிக்காட்டப்பட்டு அனைவரும்  அதில் சலிப்படைந்து  விடுகிறார்கள். 

நீங்களே அதில்  சலிப்படைந்து  விடுகிறீர்கள். 

கெட்ட பக்கத்தை உங்களால் காட்ட முடியாது. 

ஏனென்றால் அது கெட்டது.

உங்கள்  முழுமையும் காட்டுங்கள்.

உங்களது  நல்ல பக்கம் மட்டுமே நிச்சயம்  சலிப்பூட்டச் செய்யும், மிகவும்  உப்புச் சப்பின்றி இருக்கும்.

உங்களது  கருமையான பக்கங்களுடன் அது ருசிகரமாக, மேலும்  அதிக ஆர்வமூட்டுவதாக இருக்கும்.

ஒரு நல்ல மனிதனுக்கு  வாழ்க்கையில்லை என்று  சொல்லப்படுகிறது. நான்  இந்தக் கூற்றை ஒப்புக் கொள்கிறேன். 

இதை யார் சொல்லியிருந்தாலும் சரி, ஒரு  நல்ல மனிதனுக்கு  என்ன  இருக்க முடியும்? 

ஒரு  கெட்ட மனிதனுக்கு  ஒரு  வாழ்க்கை  இருக்கிறது..

நீங்கள்  முழுமையாக  இருந்தால், உங்களது வெளிப்பாடுகள் அதிக உயிரோட்டமுள்ளதாக இருக்கும்.

உப்புச் சப்பற்று சலிப்பூட்டுவதாக இருக்காது. எப்போதுமே ஆச்சரியமான விஷயங்களைக் கொண்டு  இருக்கும். 

மற்றவர்களை மட்டும்  ஆச்சரியப்படுத்தாமல் உங்களையும் கூட வியப்பில் ஆழ்த்தும்.

கடவுளே, என்னாலா இதைச் செய்ய  முடிந்தது?

வாழ்க்கை  என்பது  எவ்வளவு முழுமையுடன் வாழப்பட முடியுமோ அவ்வளவு  முழுமையுடன் வாழப்பட வேண்டும். 

அப்படி வாழ்வதும், அன்பு செலுத்துவதும், இறுதியில்  நன்றாகச் சிரிப்பதும் தான் ஒரே வழி. 

எது சரி, எது தவறு என்று  கவலைப்படாதீர்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.