07/11/2020

இந்துக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் எந்த அரசியல் கட்சியும் முன் வருவதில்லையே ஏன் - எச்.ராசா...

மருத்துவக் கல்விக்கு இடம் கிடைக்கவில்லையே என தற்கொலை செய்து செத்துப் போன 12 உயிர்களும் இந்து தான்.

வேலை கிடைக்காமல் தினம் தினம் அவமானங்களைச் சந்திக்கும் இளைஞர்கள் பெரும்பான்மையோர் இந்து தான்.

கொத்து கொத்தாக தற்கொலை செய்த லட்சக்கணக்கான விவசாயிகள் இந்து தான்.

இளவரசன்,கோகுல்ராஜ், சங்கர் இந்து தான்.

மருத்துவம் இன்றி மருத்துவமனையில் மாண்டு போன பச்சிளம் குழந்தைகள் இந்து தான்.

ஒரு வேளை உணவின்றி படுக்கைக்குச் செல்லும் பல கோடி இந்தியர்கள் இந்து தான்.

சங்கராச்சாரியால் கொலை செய்யப்பட்ட சங்கர்ராமன் இந்து தான்.

ஒரு நிமிடத்திற்கு 12 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். அவர்களில் பெரும்பாலும் இந்து தான். பாலியல் வல்லுறவு செய்பவனும் இந்து தான்.

விலைவாசி உயர்வால் வாழ வழியின்றி வஞ்சிக்கப்படும் கோடிக்கணக்கான மக்கள் இந்துக்கள் தான்.

இந்து என்பது சிந்து நதி சார்ந்த சொல்.

நதி அனைவரையும் வாழ வைக்கும்.

நீ நாதியற்ற கூட்டம். மதவெறியைத் தூண்டி மடமை வளர்க்கும் கூட்டம்.

உங்களை தினமும் ஓட ஓட விரட்டுவதும் பெரும்பான்மை இந்துக்கள் தான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.