நாம் சிறந்த மனிதர்களின் அடிசுவட்டில் நடக்க விரும்பாத போது...
அவர்களைப் போல ஆக நினைக்காத போது..
அவர்களைத் தெய்வமாக்கிக் கோவில்களிலே பிரதிஷ்டை செய்து விடுகிறோம்..
அவர்களின் சிறப்பியல்புகளை நாம் பாராட்டுவோமே தவிர..
அவர்களைப் போல நடந்து கொள்ள விரும்ப மாட்டோம்..
நாம் மனிதனைத் தெய்வமாகச் சித்தரிக்க முயன்றால் அவனது இயற்கையான மனித உருவம் மறைந்துவிடும்...
அதற்குப் பதிலாக ஒரு செயற்கையான, அருவெறுக்கத்தக்க உருவம் வெளியாகும்..
அவ்விக்கிரகம் எவ்வாறாக இருந்தாலும் செயற்கையானதாகவே இருக்கும்..
அதை நாம் மனப்பூர்வமாக ஆராதிக்க முடியாது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.