கோவை – வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் 150 ஏக்கர் நிலப்பரப்பில் விரிந்துள்ள பிரம்மாண்டமான ஈஷா யோகா மையம் தனியார்மய – தாராளமயத்தால் ஆதாயமடைந்துள்ள இந்து நடுத்தர வர்க்கத்தினரோ, வேலைப்பளுவால் ஏற்படும் மன உளைச்சலுக்குத் தீர்வாக யோகாசனம், தியானம் முதலானவற்றால் அமைதியும் நிம்மதியும் கிடைக்கும் என்று குருட்டுத்தனமாக நம்புகின்றனர்.
இத்தகைய சாமியார்களின் மையங்களில் தங்கள் பிள்ளைகளைச் சேர்த்து, அவர்கள் யோகா, தியானம் கற்றுக் கொள்வதில் பெருமை அடைகின்றனர். அதேசமயம், ஜக்கியின் ஆக்கிரமிப்புக்கும் சுற்றுச்சூழல் நாசத்துக்கும் எதிராக அப்பகுதிவாழ் மக்களும் சமூக ஆர்வலர்களும் போராடியபோதிலும், ஜக்கியின் யோகா மையத்தில் நடக்கும் கிரிமினல் மோசடிகள், கொலைகள், அட்டூழியங்களை பற்றி விரிவான ஆதாரங்களுடன் செய்திகள் வெளிவந்துள்ள போதிலும், இவர்கள் அவற்றைக் கண்டும்காணாததுபோல இருக்கின்றனர்.
முற்றும் துறந்த ஒரு சாமியாருக்கு எதற்காக இவ்வளவு பிரம்மாண்டமான சொத்துக்கள், இந்தச் சொத்துக்கள் எப்படி வந்தன – என்று இயல்பாக எழும் கேள்விகூட இவர்களது மனதில் எழுவதில்லை. இத்தகைய சாமியார்கள் பள்ளிகள், கல்லூரிகள் கட்டி கட்டணக் கொள்ளை நடத்துவதைப் பற்றி இவர்கள் கேள்வி எழுப்புவதுமில்லை. மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்ஜியத்தை இத்தகைய சாமியார்கள் நடத்திக் கொண்டிருப்பது இந்த வர்க்கத்தினருக்கு முரண்பாடாகத் தெரியவில்லை.
இந்துஸ்தான் லீவர்தான் போன்ற ஏகபோக நிறுவனங்கள்தான் தொழில் செய்ய வேண்டுமா, சாமியார்கள் செய்யக் கூடாதா என்று அவர்களின் கார்ப்பரேட் வர்த்தகத்தை இவர்கள் அங்கீகரித்து ஆதரிக்கவே செய்கின்றனர்.இப்போது தமிழக தனியார் மயமாக்கி வியாபாரம் செய்ய விளம்பரம் செய்து வருகிறார்கள். இவர்களை முதலில் தமிழக நிலத்தை விட்டு அகற்ற வேண்டும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.