03/04/2021

நடிகர் கமல் தமிழினத்தின் எதிரியே...

தெனாலியில் ஈழத் தமிழனை பயந்தாங்கொள்ளியாக காட்டி சந்தோஷப்பட்ட கமல்,

மன்மதன் அம்புவில் அவனை செருப்பால் அடித்திருக்கிறார். அதுவும் ஒரு நடிகையின் கையால்.

ஏர்போர்ட்டில் வந்திறங்கும் த்ரிஷாவை ஈழத் தமிழரான டாக்சி டிரைவர் ஒருவர் சந்திக்கிறார்.

மேடம்! உங்க கால் செருப்பாகக்கூட நடிக்கத் தயாராக இருக்கேன் என்று வாலண்ட்ரியாக முன் வந்து தன்னை இழிவுபடுத்திக் கொள்கிறார்.

படத்தின் இறுதியில் வரும் இதே ஈழத் தமிழர், த்ரிஷாவிடம் செருப்படியும் வாங்குகிறார்.

அப்போது, மேடம் உங்க செருப்பாகூட நடிக்கத் தயார்னுதான் சொன்னேன். செருப்படி வாங்கறேன்னு சொல்லலை என்று மீண்டும் தன்னை அசிங்கப்படுத்திக்கொள்கிறார்.

இதற்கு முன்பாக, இதே நபர் டோப்பா(விக்) தலையுடன் வந்து அதுவும் கழற்றப்பட்டு அவமானப்படுகிறார்.

ஈழத் தமிழனுக்கு சூடு, சொரனை இருந்தால் அவர்கள் வாழும் நாடுகளில் இந்தப் பேடிப்பயல் படத்தை திரையிட விடக்கூடாது. செய்வார்களா?

தமிழா சிந்தி...

நம் இனத்தை எப்படி எல்லாம் கேவலப்படுத்த முடியுமோ அதை சரியாக செய்கிறது இந்த நடிப்புத் துறை... அதையும் காத்திருந்து பணம் செலவழித்து பார்த்து கை தட்டி சிரிக்கிறாய் நீ...

வருங்காலத் தமிழினத்தின் தலைவிதி இளைஞர்களிடம் தான் உள்ளது...

ஆனால் நம் தமிழினமோ திரை கூத்தாடி பின்னால் சூடு சூரனை இன்றி அலைகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.