17/04/2017

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியாவின் சாதனை...


இந்தியா போன்ற ஏழை நாடுகளில் வணிகம் தேவையில்லை - ஸ்நாப்சாட் சி.இ.ஓ...

கூகுள், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், அமேசான், மைக்ரோசாஃப்ட் என டெக்கீஸ்கள், இந்திய சந்தைகளில், கல்லா கட்ட பார்க்கின்றன. ஆனால், ஸ்நாப்சாட் சி.இ.ஓ இவான் ஸ்பீகல், இந்தியா, ஸ்பெயின் போன்ற ஏழை நாடுகளில் வணிகத்தை விரிவுபடுத்த விரும்பவில்லை என்று கூறியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இது குறித்து ஸ்நாப்சாட் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஆண்டனி என்பவர், கடந்த 2015-ம் ஆண்டு ஸ்நாப்சாட் வளர்ச்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். அந்தக் கூட்டத்தில் தான், ஸ்பீகல், ஸ்நாப்சாட் பணக்காரர்களுக்கான ஆப். இதன் வணிகத்தை, இந்தியா, ஸ்பெயின் போன்ற ஏழை நாடுகளுக்கு விரிவுபடுத்த விரும்பவில்லை என்று கூறியுள்ளதாக, ஆண்டனி தெரிவித்துள்ளார்.

மேலும், நிறுவனத்தை முதலீட்டாளர்கள் தவறாக வழி நடத்தியதாகவும், ஆப்பின் பயனாளர்கள் குறித்து வெளியிட்டுள்ள டேட்டாக்கள் ஆகியவற்றுக்காக நிறுவனத்தின் மீது ஆண்டனி வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதாவது, 2015 சம்மரில், 95 மில்லியன் பயனாளர்கள் இருந்த போது, தினசரி 100 மில்லியன் பயனாளர்கள் இருப்பதாக நிறுவனம் காண்பித்ததாக ஆண்டனி குற்றம் சாட்டியுள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.