17/04/2017

Ghost Rider தமிழனின் சங்கிலி கருப்பன்...


Ghost Rider எனும் காமிக் கதாபாத்திரம் Ray Krank மற்றும் Dick Ayers எனும் இருவரால் 1949ல் உருவாக்கப்பட்டது.

இக்கதாபாத்திரம் முதலில் கருப்புக் குதிரையின் மீது கருப்பு ஆடையணிந்த நெருப்பு உடலைக் கொண்ட மாந்திரீக கலைகள் அறிந்த வீரனைப்போல வடிவமைக்கப்பட்டது.

இவன் கைகளில் சங்கிலியுடன் பேய்களை கட்டுப்படுத்துவதில் வல்லவன்.

பிரபமடைந்த இக்கதாபாத்திரம் பல காமிக்குகளில் இடம் பெற்றது.

பின்னர் காலமாற்றத்திற்கு ஏற்ப குதிரைக்குப் பதில் இருசக்கர வாகனத்தில் வருவதாக வடிவமைத்தனர்.

இதுவும் நல்ல பிரபலமடைந்தது, இக்கதாபாத்திரத்தை கொண்டு Ghost Rider சினிமாவும் எடுக்கப்பட்டது.

இவற்றில் நாம் கவனிக்க வேண்டியது முதலில் உருவாக்கப்பட்ட இக்கதாபாத்திர வடிவமைப்பை...


நம் ஊர்களில் வழிபடப்படும் சங்கிலிக்கருப்பன் எனும் கிராம தெய்வத்தின் வடிவமைப்புடன் அப்படியே ஒத்துப் போகிறது.

கருப்புக்குதிரையில் கையில் சங்கிலியுடன் கருப்பு உருவமாக இத்தெய்வம் வலம் வருமென கிராமங்களில் வாய்மொழிக்கதைகள் உண்டு.

எந்த ஒரு கற்பனைக் கதாபாத்திரத்திற்கும் ஒரு முன்னோடி இருந்தாக வேண்டும். எந்த மேற்கத்திய கலாச்சாரத்திலும் இப்படி ஒரு கடவுளோ, கதையோ இருந்ததாக கேள்வியில்லை.

நம் வரலாறும் கலாச்சாரமும் எப்படி நம்மிடமிருந்து கடத்தப்படுகிறது என்பதை ஆராய்வது முக்கிய கடமையாகும்.

இல்லையெனில் ஒருநாள் நம்மிடம் அடையாளம் எதுவும் இருக்காது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.