30/09/2017

திராவிடம் - 2...


தமிழர் அப்படி என்ன தவறு செய்தனர் என்று பார்ப்பதற்கு முன் இதையெல்லாம் ஏன் நான் பதிவிடுகிறேன் என்று கூறி விடுகிறன்...

இன்றைய திராவிடக் கட்சிகளில் உள்ள சிலர் திராவிடம் என்பது சரியானக் கோட்பாடு என்றும் இன்று முன்னணியில் உள்ள திராவிடக் கட்சிகள் பெயருக்கு திராவிடத்தை வைத்திருப்பதாகவும் அவைகள் உண்மையான திராவிடக் கொள்கைகளை பின்பற்றவில்லை என்றும் திராவிட வழிநடக்கும் கட்சிகளே தமிழருக்கு நன்மை பயக்கும் என்றும் கூறுகின்றனர்.

உண்மையில் திராவிடம் எனும் கோட்பாடு தமிழரைச் சுரண்டி அடக்கியாளவே பிறந்தது என்பதையும் அதன் விளைவுகள் இன்னும் மோசமாகும் முன் தடுக்க வேண்டிய அவசியத்தை தமிழருக்கு உணர்த்தி திராவிடத்தின் தோலுரிக்கவே இதை எழுதுகிறேன்...

இப்போது விடயத்திற்கு வருவோம்..

அன்றையத் தமிழர் செய்த தவறு என்னவென்றால் ஆங்கிலம் கட்டாயமாக்கப்பட ஆங்கிலம் கற்பது தவிர்க்க முடியாததாக இருந்தது.

ஆனால் மாநில மொழிகளில் எதை வேண்டுமானாலும் கற்கலாம் என்கிற வாய்ப்பு இருந்தது.

இந்நிலையில் தமிழர்களில் கனிசமானோர் குறிப்பாக பிராமணர்கள் சமசுக்கிருதத்தையும் இசுலாமியர் அரபி அல்லது உருது போன்ற மொழிகளையும் கற்கலாயினர்.

இன்றும் இவ்விரு வகைத் தமிழரிடமும் மேற்கண்ட மொழிகள் வேறூன்றி உள்ளன.

ஆனால் இதனால் சில நன்மையும் ஏற்பட்டது வெளிமாநிலங்களில் குடியேறியத் தமிழர்கள் தங்கள் தாய்மொழியைக் கற்க வழியேற்பட்டது.

ஆம், வெளிமாநிலத் தமிழர் தமிழைக் கற்க, மாநிலத்தமிழர் தங்கள் தாய்மொழியைப் புறக்கணித்து ஆங்கிலம் மட்டும், அல்லது அதோடு சேர்ந்து வேற்று மொழிகளைக் கற்கலாயினர்.

அத்தோடு தமிழகத்தின் எல்லைப் பகுதிகளில் அண்டை மாநிலத்தவர் வந்து குடியேறி குடியேறி தமது எண்ணிக்கை கிட்டத்தட்ட தமிழருக்கு இணையாக வர வழி செய்திருந்தனர்..

இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தன.

இவ்வந்தேறு குடிகளும் தம் தாய்மொழியையே கற்க தமிழரும் அவர்கள் மொழியைக் கற்கலாயினர்..

இதனால் நாயகர், செட்டியார் போன்ற தமது சாதிப் பெயரையும் மாற்றி...

தெலுங்கரின் நாய்க்கர், ரெட்டி போன்ற பெயர்களையும் சேர்த்துக் கொள்ளத் தொடங்கினர்..

தமிழகத்தின் 35% பூர்வீக மண் இலட்சக்கணக்கானத் தமிழரோடு அண்டை மாநிலங்களால் ஆக்கிரமிக்கப்பட அடிகோலினர்.

ஆனால் தமிழகத்தின் உட்பகுதியில் சில நூற்றாண்டுகளாக வாழ்ந்து வரும் வந்தேறு குடிகள் தமிழைக் கற்கலாயினர் என்பதையும் இங்கு கூறத்தான் வேண்டும்.

மற்ற எந்தவொரு மக்களைவிடவும் தங்கள் தாய்மொழியைப் புறக்கணித்தப் பெரும்பிழையைச் செய்தனர் தமிழ்மக்கள்.

இன்று ஈழப் பிரச்சனையின் ஆரம்பம் என்பது அக்காலத்தில் ஆங்கிலக் கல்வியை கற்று உயர்ந்த பதவிகள் பெற்று அதிகாரவர்க்கமாக மாறிய வடக்குப்பகுதித் தமிழர் மீது சிங்களவருக்கு ஏற்பட்ட வெறுப்பே ஆகும்.

தமிழர் ஆதிகாலத்திலிருந்தே இப்பிழையைச் செய்தே வந்துள்ளனர்.

தமிழரின் தனித்தன்மை  என்பது இனப்பற்று இல்லாமை ஆகும்.

அதனாலேயே ஆங்கிலேயர் மற்ற எவரையும் விடத் தமிழரையே ஆயிரக்கணக்கில் அடிமைகளாக கூலிகளாக தாங்கள் ஆளும் தேசமெல்லாம் கொண்டு செல்வது சுலபமானது.

அவர்கள் அனைவரும் தமது தாய்மண்ணின் ஆதரவு கிடைக்காமல் இன்றும் அதே நிலையில் உள்ளனர் என்பதே கசப்பான உண்மையாகும்.

காரணம் தமிழர் அனைவரும் வேற்றினத்தாரின் இரும்புப் பிடிக்குள் சிக்கியுள்ளனர்.

தமிழர் பெரும்பான்மையாக வாழும் தமிழகத்தலேயே மற்ற இனத்தவர் எப்படி நம்மை ஆளமுடிகிறது?

இதற்குக் காரணம் யார்?

இதில் திராவிடத்தின் பங்கு என்ன..?

நேதாஜியின் மரணத்திற்கு காரணம் ஜவஹர்லால் நேரு: இது சாமியின் 2வது குண்டு..


24 சனவரி 2015,

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மறைவுக்கு, இந்திய நாட்டின் முதல் பிரதமராக இருந்த நேருதான் முக்கிய காரணம் என்று பாராதீய ஜனதா கட்சியை சேர்ந்த சு.சாமி கூறியுள்ளார்.

உத்திரப்பிரதேசத்தின் மீரட் நகரில் 23.01.2015 அன்று நடைபெற்ற நேதாஜி சுபாஷ்சந்திர போஸின் பிறந்த நாள் நிகழ்வில் சுப்பிரமணியன் சுவாமி பேசியதாவது, 2வது உலகப் போர் முடிவடைந்த நிலையில் சுபாஷ் சந்திர போஸ் போர்க் குற்றவாளியாக தேடப்பட்டார்.

அப்போது சோவியத் ரஷ்யாவுடன் நட்புறவு கொண்டிருந்தார் நேதாஜி.

இதனால் சோவியத் ரஷ்யா தமக்கு அடைக்கலம் கொடுக்கும் என்றும் நேதாஜி முழுமையாக நம்பினார். இதனால் அவர் சோவியத் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த மன்சூரியா என்ற இடத்துக்கு சென்றடைந்தார்.

அதன் பின்னர், அப்போதைய ரஷ்யா அதிபர் ஸ்டாலினை நேதாஜி சந்தித்த போது கைதியாக சிறைபிடிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து 1945ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நேருவுக்கு ஸ்டாலின் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

அதில் தம்முடைய கஸ்டடியில் தான் நேதாஜி இருப்பதாகவும், அவரை என்ன செய்ய வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டிருந்தார்.

உடனடியாக 1945ஆம் ஆண்டு டிசம்பர் 26-ந் திகதி நேரு தம்முடைய ஸ்டெனோகிராபர் சியாம் லால் ஜெயின் என்பவரை அழைத்து இங்கிலாந்து பிரதமருக்கு ஒரு கடிதம் அனுப்ப உத்தரவிட்டார்.

இந்த உண்மைகளை 1970ஆம் ஆண்டு நேதாஜி மரணம் தொடர்பாக விசாரித்த கோசலா கமிஷன் முன்பு ஜெயின் கூறியுள்ளார்.

அதாவது ஜெயின் கூறியபடி, சோவியத் ரஷ்யாவில் நேதாஜி சிறையில் இருப்பதை பிரிட்டிஷ் பிரதமருக்கு நேரு தெரியப்படுத்தியிருக்கிறார்.

அதன் பின்னர் சோவியத் ரஷ்யாவுக்கு சென்ற பிரிட்டிஷ் அதிகாரிகள் நேதாஜியை கொல்ல உத்தரவிட்டிருக்க வேண்டும் என்ற யூகத்தில் சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார்...

4 ஆண்டுகளாக தினமும் பஸ்சில் சவாரி செய்த பூனை...



இங்கிலாந்து நாட்டில் பிளைமவுத் நகரை சேர்ந்தவர் சூசன் பின்டேன்.

இவர் கேஸ்பர் என்ற 12 வயது பூனையை வளர்த்து வந்தார்.

இந்த பூனை அந்த நகர மக்கள் அனைவருக்கும் செல்ல பிராணியாக இருந்தது.

இது தினமும் காலை 10 மணிக்கு வீட்டு அருகே வரும் பஸ்சில் ஏறி, இலவச பயணம் செய்யும்.

அந்த பஸ் நகரின் பல பகுதிகளுக்கு சென்று விட்டு ஒரு மணி நேரம் கழித்து வீட்டு அருகே திரும்ப வரும்.

அப்போது அது இறங்கிக் கொள்ளும்.

கிட்டத்தட்ட 15 கி.மீ. தூரத்துக்கு அது தினமும் இலவச பஸ் பயணம் செய்யும்.

பஸ் ஏறும்போது பஸ் நிறுத்தத்தில் கூட்டம் இருந்தால் அது வரிசையில் நின்று தான் பஸ்சில் ஏறும்.

வழக்கமாக கடைசி இருக்கையில் தான் அது உட்காரும்.

நாள் தவறாமல் கடந்த 4 ஆண்டுகளாக அது பஸ் பயணம் செய்து வந்தது.

சரியான பஸ் நிறுத்தத்தில் அது இறங்கி சென்று விடும்.

சம்பவத்தன்று அது பஸ்சில் இருந்து இறங்கி சாலையை கடக்க முயன்றபோது, வேகமாக வந்த கார் ஒன்று அதன் மீது மோதியது.

இதில் அடிபட்டு காயம் அடைந்த அந்த பூனை இறந்து போனது...

20.01.2010 அன்று இவ்வுலகை விட்டு சென்றது...

திமுக வில் பகுத்தறிவு பாடம் எடுத்த போது...


ஆயுத எழுத்தின் சிறப்பு....


கீழ்கண்டவாறு, தொல்காப்பியத்தில் எழுத்ததிகாரத்தில் காணப்படும் முதற்பாடலிலேயே ஆயுத எழுத்தின் பயன்பாடு அறியப்படுகிறது....

தொல்காப்பியத்தில் எழுத்ததிகாரம் நூன்மரபு சூத்திரம் -1

எழுத்துக்களின் வகை..

1. எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃதென்ப
சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே.
அவைதாம்,
குற்றியலிகரம் குற்றியலுகரம்
ஆய்தம் என்ற
முப்பாற்புள்ளியும் எழுத்து ஓரன்ன

குமரிக்கண்டத்தில் ஓடிய ஒரு மிகப்பெரிய ஆற்றின் பெயர் பஃறுளியாறு..

என்று சிலப்பதிகாரத்தில் சொல்லப்படுகிறது.

ஒரு போர் வீரனின் கேடயம் எஃகினால் செய்யப்பட்டு, வட்ட வடிவ அமைப்பில்  இருக்கும்.

அதன் பின் பக்கத்தில், பிடிப்பதற்கென ஒரு கைப்பிடி இருக்கும். முன்பக்கத்தில் மூன்று குமிழிகள் (ஃ) போன்ற வடிவமைப்பில் இருக்கும்.

போர் நடக்கும் சமயங்களில் இடக்கையில் உள்ள கேடயத்தால் பகைவனைத் தாக்கும் போது, அந்த மூன்று குமிழிகள் போன்ற கடும் பகுதிகள், பகைவனது மார்பின் மீது திரைப்படங்களில் வருவதைப் போல இடித்துத் தாக்கும்.

(அந்த நொடியில் அவன் தொண்டைக் குழியிலிருந்து "ஃ" என்ற முக்கல் ஒலி தானாக எழும் )

அந்த கேடயம் என்ற ஆய்தம் போன்ற வடிவத்தைப் பெற்றிருப்பதால், இந்த எழுத்தும்  ஆய்தம் எனப் பெயர் பெற்றது.

அந்தக் கேடயத்தால் எதிரியின் மார்பை இடித்து தாக்கும் போது, அவன் வாயிலிருந்து என்ன ஒலி எழுமோ, அதுவே அந்த எழுத்திற்கான உச்சரிப்பாகவும் இருப்பது வியப்பை அளிக்கிறது...

பிற எந்த மொழியிலும் இதற்க்கு இணையான உச்சரிப்பை கொண்ட எழுத்து கிடையாது என்பதும் இதன் சிறப்புகளில் ஒன்றாகும்...

ஆனாலும் சிலர், இந்த ஆயுத எழுத்தானது மிகவும் பிற்காலத்தில்தான் வழக்கிற்கு வந்தது ஆய்வு செய்து எழுதியும் இருக்கிறார்கள்...

அவர்கள் எதை ஆய்வு செய்தார்கள், எப்படி ஆய்வு செய்தார்கள்  என்பது புரியாத புதிராகவே இருக்கிறது...

(அப்படியே இருந்துவிட்டு போகட்டும்)

ஆயினும், தொல்காப்பியம் எழுதப்பட்டு பல்லாயிரம் ஆண்டுகள் ஆகிறது என்பதை நாம் அறிவோம்.

குமரிக்கண்டத்தை கடல்கொண்டு மேலும் பல்லாயிரம் ஆண்டுகள் ஆகிறது.

அங்கே ஆயுத எழுத்தை தனது பெயரில் கொண்டிருந்த பஃறுளி ஆறு அமைந்திருந்தது.

அப்படியானால், எந்தக் காலத்திளிருந்து வாளின் பயன்பாடும் கேடயத்தின் பயன்பாடும் தமிழர்கள் மத்தியில் பயன்பாட்டில் இருந்திருக்க கூடும் என்பதை எடுத்துக் கூறும் ஆயுதமாக இருப்பதே இந்த ஆயுத எழுத்தின் வியப்பிற்குரிய சிறப்பாகும்...

2800 ஆண்டுகள் பழமையான கொற்கை பானையோடு மறைக்கப்படுவது ஏன்?


தற்போது வரை (2016 AD) கிடைத்திருக்கும் தமிழி எழுத்தில் மிகப்பழைய எழுத்துப்பொறிப்பு கொற்கையில் கிடைத்த 'ஆதன்' என பெயர் பொறித்த பானையோடு ஆகும்.

கரிமநாட்காட்டி படி இதன் காலம் கி.மு. எட்டாம் நூற்றாண்டு (கி.மு. 755 ± 95).
இதை நடன காசிநாதன் போன்றோர் தன் நூல்களில் எடுத்துக்காட்டியுள்ளனர்.

ஆனால் இதை அதிகம் வெளிவர விடாமல் செய்வதற்கும் இதை பரவலான ஏற்பை பெறாமல் இருக்க செய்வதற்கும் மத்திய தொல்லியல் துறையினரால் உருவாக்கப்பட்ட வளர்த்தெடுக்கப்பட்ட தொல்லியல் ஆய்வாளர்கள் தான் கீழுள்ளவர்கள்.

இவர்கள் வெளியிடும் தமிழருக்கு எதிரான கருத்துக்களை கீழே கொடுத்துள்ளேன்.

1. அமர்நாத் ராம்கிருஷ்ணா -
கீழடி தொல்லியல் ஆய்வாளர்.
பாண்டிமுனி கோயிலை பௌத்த கோயில் என்றது.

கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வரை மண்ணடுக்கும் அதன் கீழ் ஆற்றுப்படுகையும் வருகின்ற மாதிரி இருக்கும் கீழடியை ஆய்வுக்கு தேர்ந்தெடுத்தவர்.

இதன் மூலம் அசோகருக்கு பின்னர் வந்த எழுத்துப்பொறிப்புகளை மட்டும் கிடைக்கும்படி பார்த்துக்கொண்டார்.

2. சுப்பராயலு - கல்லணையை கரிகாலன் கட்டவில்லை என்று சொன்னவர்.

மறைமுகமாக களப்பிரர் கட்டினர் என கதை விட்டவர்.

3. பத்மாவதி அணையப்பன் -
களப்பிரர் காலத்தில் பாலாறும் தேனாறும் ஓடியதாக தொடர்ந்து கதையளப்பவர்.

காஞ்சிபுர ஐயனார் கோயிலை பௌத்த கோயில்னு புழுகித்தள்ளியவர்.

4. ஐராவத மகாதேவா - அசோகப் பிராமிக்கு பின்னர் தமிழ் எழுத்துக்கள் வந்ததுன்னு தொடர்ந்து கதையளப்பவர்.

ஜைனர்களால் தமிழ் எழுத்துக்கள் கி.மு.இரண்டாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டதுன்னு கதைவிட்டதும் அல்லாமல் அதை உலகளவில் பிரபலம் அடையச்செய்தவர்.

நாலவதாக சொல்லப்பட்ட மகாதேவாவின் கருத்து எளிதாக அடிபட்டு விட்டது.

அதாவது கி.மு. இரண்டாம் நூற்றாண்டைவிட பழமையான எழுத்துக்கள் தமிழக்கதில் ஏற்கனவே கிடைத்திருந்தன.

நடனகாசிநாதன் மேற்கோள் காட்டிய கி.மு. எட்டாம் நூற்றாண்டு பானையோட்டை நோக்கி ஆய்வாளர்கள் திரும்பிவிடக்கூடாது என்பதற்காக தான் தமிழ் எழுத்துக்களை கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு பழமையோடு தடுத்து நிறுத்த உருவாக்கப்பட்ட வளர்த்தெடுக்கப்பட்டவர்களே மேலே நான் சொன்னவர்களும் இன்னும் பலரும்.

கி.மு. ஆறாம் நூற்றாண்டில் ஜைனம் பௌத்தம் போன்றவை வடக்கில் உருவாகி அவர்களே தமிழ்நாட்டுக்கு தமிழ் எழுத்துக்களை கொண்டு வந்தார்கள் என்ற கருத்தை நோக்கியே இதை வளர்த்துச் செல்வார்கள் இவர்கள்.

இவர்களிடம் நடனகாசிநாதன் மேற்கோள் காட்டிய கரிமநாட்காட்டி படி கி.மு. எட்டாம் நூற்றாண்டு அளவில் பழமையான கொற்கை பானையோட்டை பற்றி ஏன் நீங்கள் பேசுவதே இல்லை என கேட்டுப்பாருங்கள்.

இஞ்சி தின்ற குரங்குகள் போல விழிப்பார்கள்.

இல்லை சமாளிப்பு காரணங்கள் எதையாவது சொல்லி கடந்து விடுவார்கள்.

எதனால் அப்படி?

கி.மு. எட்டாம் நூற்றாண்டுனா மகாவீரா, புத்தா போன்றவர்களை விட பழமையான காலமாக தமிழ் வந்து விடும்.

அப்புறம் எப்படி ஜைனம் பௌத்தத்தை வைத்து தமிழ்நாட்டில் ஆரிய திராவிட தலித்திய நாரதப்பூச்சாண்டி அரசியலை செய்ய இயலும்?

அதனால் தான் கி.மு. எட்டாம் நூற்றாண்டு கொற்கை பானையோடு பற்றி அமர்நாதன்களும் பத்மாவதிகளும் பேச மாட்டார்கள்...

- தென்காசி சுப்பிரமணியன்

அமானுஷ்யம் : பாங்கார்ஹ் கோட்டை – ராஜஸ்தான்...


ராஜஸ்தான் மாநிலத்தின் ஆழ்வார் மாவட்டத்தில் உள்ளது பாங்கார்ஹ் நகரம். இங்குள்ள கோட்டைக்குள் சூரியன் மறைந்தபின் சென்றவர்கள் யாரும் என்னவாயிற்று என்றே தெரியாமல் காணாமல் போவதாக செய்திகள் உலாவுகிறது.

இது எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியன் ஆர்க்கியாலஜி டிபார்ட்மெண்ட் சார்பாக வைக்கப்பட்டிருக்கும் சூரியன் மறைந்த பின்னரும், சூரியன் உதிக்கும் முன்னரும் யாரும் உள்ளே போகக்கூடாது என்ற எச்சரிக்கை அறிவிப்பும் கோட்டையை விட்டு ஒரு மைல் தூரத்திற்கு அப்பால் வைக்கப்பட்டிருக்கும் ஆர்க்கியாலஜி டிபார்ட்மெண்ட் அலுவலகமும் ஆவிக்கதைகளுக்கு கூடுதல் வலு சேர்ப்பதாகவே இருக்கிறது...

அமானுஷ்யம் : 2900 ஆம் ஆண்டுகளுக்கு முன்பே ஆபரேஷன்...


முக மாற்று அறுவை சிகிச்சை, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, இதய மாற்று அறுவை சிகிச்சை என்று இன்று மருத்துவம் எட்டாத சிகரத்தை எட்டிவிட்டது என்பது நாம் எல்லாம் அறிந்த ஒன்றுதான்.

ஆனால், இந்த மருத்துவம் சில நூறு ஆண்டுகளுக்கு முன், எப்படி இருந்திருக்கும். இவ்வளவு நவீன வசதிகள் இல்லாத காலத்தில் முறையான மருத்துவக் கல்வியை பெற்றிறாத மக்கள் என்ன செய்திருப்பார்கள் என்று யோசித்துப் பாருங்கள்.

பாவம்.. அறுவை சிகிச்சை வசதியில்லாத அந்தக் காலத்தில் நோயாளிகள் இறந்துதான் போயிருப்பார்கள் என்பது தான் நம்மில் பலரின் நினைப்பாக இருக்கும். ஆனால், அதில் சற்றும் உண்மை இல்லை.

கி.மு. 715 ஆம் ஆண்டு. ரோமப் பேரரசின் முக்கியமான நாள் அது. அந்நாட்டு இளவரசி பிரசவ வேதனையால் துடித்தாள். வழக்கமாய் குழந்தை பிறப்பதை விட இளவரசிக்கு விளங்காத ஏதோ ஒரு பிரச்சினை இருப்பதாகவே அரண்மனை வைத்தியர் உணர்ந்தார். என்ன செய்வதென்று புரியவில்லை அவருக்கு. மன்னரின் அதிகாரம் ஒரு பக்கம். வயிற்றைக் கிழித்துத்தான் குழந்தையை எடுக்க வேண்டுமோ என்ற தடுமாற்றம் வைத்தியருக்கு. இளவரசிக்கு இதில் உயிருக்கு ஆபத்து நேர்ந்துவிடுமோ என்ற அச்சம் ஒருபுறம். வேறு வழியின்றி வயிற்றைக் கிழித்துத்தான் குழந்தை எடுக்கப்பட்டது. அந்த குழந்தைதான் ஜூலியஸ் சீசர். இந்தத் தகவல்கள் எல்லாம் அரண்மனையின் அறிக்கை ஏட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னொரு விஷயம் தெரியுமா? நாம் பயன்படுத்தும் சிசரியன் என்ற வார்த்தை கூட சீசர் பிறந்த பிறகுதான் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டதாம்.

கி.மு.320ஆம் ஆண்டு இந்தியாவில் மௌரியப் பேரரசு ஆண்டு வந்த காலம். சந்திரகுப்த மௌரியரின் மனைவிக்கு பிரசவ வலியால் துடித்தபோது, இயற்கையாக குழந்தை பிறக்கவில்லை. அறுவை சிகிச்சை மூலமே குழந்தை பிறந்தது. அந்த குழந்தைதான் மௌரியப் பேரரசின் மிக முக்கிய அரசரான பிந்துசாரர். ஆனால், எதிர்பாராத விதமாக இந்த சிகிச்சையில் அவரது தாயார் இறந்து போனார்.

அதேபோல இருபதாம் ஆண்டு தொடக்கத்தில் கூட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தைகள் சிசரியன் மூலமே குழந்தை பெற்றுள்ளார்கள். அந்த பிரசவத்தின் போது எந்த வித உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் மருத்துவ அறிக்கை கூறுகிறது.

அதேபோல 1998 ஆம் ஆண்டு திபெத் நாட்டின் கிங்காய் பகுதி அது. அகழ்வாராய்ச்சி ஆராய்ச்சியாளர்கள், அக்காலத்து மனித நாகரிகத்தை தெரிந்துகொள்வதற்கான தேடலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது ஆராய்ச்சியாளர்கள் ஒரு பகுதியை தோண்டும்போது நூற்றுக்கணக்கான மண்டை ஓடுகள். ஆராய்ச்சியாளர்களின் முகத்தில் ஏக மகிழ்ச்சி. ஏனெனில் அந்த மண்டை ஓடுகளின் வயதை கணக்கிடும்போது, அந்த மண்டை ஓடுகள் அனைத்தும் கிட்டத்தட்ட ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருந்தது. மனித நாகரிகத்தின் அரிச்சுவடியை நாம் இனி எளிதில் கண்டு பிடித்துவிடலாம் என்று ஆராய்ச்சியாளர்களுக்கு சொல்ல முடியாத உற்சாகம்.

ஆனால், கிடைத்த மண்டை ஓடுகளில் சில மற்றும் மற்ற மண்டை ஓடுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருந்தது. மண்டை ஓடு விரிந்து பிளக்கப்பட்டு இருந்தது. ஒரு வேளை யாராவது இவர்களை படுகொலை செய்திருக்கலாமோ? என்று ஆராய்ச்சியாளர்களுக்கு குழப்பம். சோதனைக் கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டன மண்டை ஓடுகள். சோதனையின் முடிவில் ஆராய்ச்சியாளர்களுக்கு பெருத்த ஆச்சர்யம். ஏனெனில் தலையில் அறுவை சிகிச்சை நடந்ததற்கான தடயங்கள் கிடைத்தது. மற்றொருவரின் மூளையை இன்னொருவருக்கு பயன்படுத்தியிருந்ததும், தலையில் ஏற்படும் ஏதோ சில பிரச்சினைகளுக்க அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்தார்கள்.

திபெத்தில் சொகைல் என்ற இந்தியர் திபெத்தில் வசித்து வந்தார். இவர் ஒரு மருத்துவர். இவருடைய திபெத்திய நண்பர் ஒருவருக்கு தீராத தலைவலி. என்னென்னமோ சிகிச்சைப் பெற்றிருக்கிறார். ஆனால், எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை தலைவலி. சொகைல் தனது நண்பரிடம் தலையில் சிறிய அறுவை சிகிச்சை செய்தால் சரியாய்ப்போகும் என்று சொல்லியிருக்கிறார். ஆனால், நண்பருக்கோ பயம். என்ன செய்வதென்று புரியவில்லை. ஆனால், அறுவை சிகிச்சை செய்யும்போது உயிருக்கு ஏதும் ஆபத்தும் நேரிடக்கூடும் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார். ஒருபுறம் சொகைல் மீதுள்ள நம்பிக்கை. மற்றொருபுறம் உயிர்மீதுள்ள பயம். அறுவை சிகிச்சை செய்யலாமா? வேண்டாமா? என்று பெரும் மனப் போராட்டத்திற்கு இடையில் தலைவலி இன்னும் அதிகரிக்கவே, உயிரைப் பற்றி கவலைப்படாது, அறுவை சிகிச்சைக்கு சம்மதித்தார் திபெத் நண்பர். சொகைல், திபெத் மருத்துவ நண்பர்களின் உதவியுடன் மூளை அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தார். அதற்குப் பிறகு அந்த நண்பருக்கு தலைவலி ஏதும் வரவில்லை. இந்த மாபெரும் அறுவை சிகிச்சை நடந்தது எப்போது தெரியுமா? கிட்டத்தட்ட 2900 ஆண்டுகளுக்கு முன்.
அதுமட்டுமல்லாமல், இந்த அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்பட்ட கத்தி போன்ற ஆயுதங்கள் அனைத்தையும், சொகைல் ஸ்டெர்லைஸ் செய்துதான் பயன்படுத்தியிருக்கிறார். ஏனெனில் அவருடைய மருத்துவக் குறிப்பு ஒன்றில் மருத்துவ உபகரணங்கள் பயன்படுத்துவதற்கு முன்பு ஸ்டெர்லைஸ் செய்வதன் முக்கியத்துவம் குறித்து மிக விரிவாக கூறியிருக்கிறார். அத்துடன் அதன் அவசியம் மிக முக்கியமானது என்றும் விளக்கியிருக்கிறார்.

திபெத் பல்கலைக்கழகத்தின் மொழி மற்றும் இலக்கிய ஆராய்ச்சிப் பிரிவு தலைவர் கர்மா த்ரிமோலி. இவர் மேற்கொண்ட ஆராய்ச்சியில்தான் இத்தகைய அபூர்வத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் திபெத்தியர்களின் அறுவை சிகிச்சை மிகவும் விசித்திரமானதும் நுட்பமானதும் ஆகும் என்று தனது குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். அவர்களின் அறுவை சிகிச்சை நுணுக்கங்கள் அனைத்தும் மிகப் பழமையான திரிபித்தகா என்ற தகவல் களஞ்சியத்தில் (என்சைக்ளோபீடியாவில்) விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது என்பதையும் கர்மா த்ரிமோலி குறிப்பிட்டுள்ளார்.

பண்டைய கால மனிதர்கள் நாகரிகம் அறியாதவர்கள், விஞ்ஞானம் கற்றறியாதவர்கள் என்ற ஆராய்ச்சியாளர்களின் கணிப்புகள் அனைத்தும் திபெத்தில் நடந்த அகழ்வாராய்ச்சி பொய்க்க வைத்தது. அப்படியானால், பண்டைய கால மனிதர்கள் நம்மைவிட நாகரிகத்தில் சிறந்தவர்களா? மருத்துவத்தில், தற்போதுவிட பல நுணுக்கங்களை கற்றறிந்தவர்களா? அப்படியானால், தலைவலியாலும், வயிற்று வலியாலும் சில நூறு ஆண்டுகளுக்கு வைத்திய வசதி இல்லாமல் இறந்துபோனதாக செய்திகள் கூறுகின்றனவே அப்படியானால், இந்த மருத்துவ நுணுக்கங்கள் அப்போது மட்டும் காணாமல் போயிருந்தது எப்படி என்பது போன்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கான பதிலைத்தான் ஆராய்ச்சியாளர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆச்சர்யங்கள் விரியும்...

எம்ஜிஆர் விழாவுக்கு பள்ளி, கல்லூரிகளின் வாகனங்களைக் கேட்டு மிரட்டுவதா எடப்பாடி அரசுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம்...


உயர்நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை கடும் கண்டனம் தெரிவித்தாலும் கூட தமிழகத்தில் நடைபெறும் பினாமி அரசு திருந்தாது போலிருக்கிறது. மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு  விழாவுக்காக முதலமைச்சரின் சொந்த மாவட்டத்தில் ஆட்சியாளர்களாலும், ஆளுங்கட்சியினராலும் கட்டவிழ்த்து விடப்படும் அத்துமீறல்களும், மிரட்டல்களும் இது திருந்தாத அரசு என்பது உறுதி செய்கின்றன.

சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலான எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா நாளை சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு சேலம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி விளையாட்டுத் திடலில் நடைபெறுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் சேலத்தில் நடைபெற்ற அரசு விழாவிற்கு கூட்டம் சேராததால், விழா அரங்கில் காலி இருக்கைகள் மட்டும் தான் காட்சியளித்தன. நாளைய விழாவிலும் அதே போன்ற நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத் தான் மாணவர்களையும், மாணவிகளையும் அழைத்துச் சென்று கூட்டத்தைக் காட்டி விடலாம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால், மாணவர்களை அழைத்து வருவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து விட்டது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவையும் நீதிபதிகள் நிராகரித்து விட்டனர்.

இதனால் சேலம் விழாவிற்கு கூட்டத்தைச் சேர்ப்பதற்காக தலையால் தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கும் ஆளுங்கட்சியினரும், அதிகாரிகளும் எல்லா சட்டவிரோத செயல்களையும் செய்து கொண்டிருக்கின்றனர். சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளின் நிர்வாகிகளை அழைத்துப் பேசிய அதிகாரிகள், நாளைய விழாவிற்காக பொது மக்களை அழைத்து வருவதற்காக வாகனங்களை எரிபொருள் நிரப்பிக் கொடுத்து விட வேண்டும் என்று ஆணையிட்டுள்ளனர். வாகனங்களை அனுப்ப மறுக்கும் கல்வி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அந்த வாகனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்று மிரட்டல் விடுக்கப்படுவதாக குற்றச்சாற்றுகள் எழுந்திருக்கின்றன.

அதுமட்டுமின்றி, சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு மாறாக சேலம் விழாவுக்கு அரசு பள்ளிகளின் மாணவர்களை சாதாரண உடையில் அழைத்து வரும்படி ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகள் கட்டாயப்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த மாதம் 30-ஆம் தேதி சென்னையை அடுத்த வண்டலூரில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக பள்ளி மாணவர்கள் கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்டதைக் கண்டித்தும், இந்த கலாச்சாரத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தேன். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநலவழக்கில் தான் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு மாணவர்களை அழைத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டது.

ஆனால்,  உயர்நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல், உயர்நீதிமன்றத்தை ஏமாற்றும் வகையில் எம்.ஜி.ஆர் விழாவுக்கு மாணவர்களை சாதாரண உடையில் அழைத்துச் செல்வது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற விழாக்களுக்கு மாணவர்களை அதிக அளவில் அழைத்துச் செல்லும் போது ஏற்படும்  ஆபத்துக்கள் குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் விரிவாக விளக்கியிருந்தனர். நீதிபதிகளின் அறிவுரைக்கு மாறாக, மாணவர்களின் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல் எம்ஜிஆர்  நூற்றாண்டு விழாவுக்கு மாணவர்களை அழைத்துச் செல்ல துடிப்பது நீதிமன்ற அவமதிப்பாகும்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சொந்த மாவட்டத்தில் இல்லாத செல்வாக்கை, இருப்பதைப் போன்று காட்டிக் கொள்வதற்காக இத்தகைய அத்துமீறல்கள் மற்றும் மிரட்டலில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். வாகனங்களை அனுப்பும்படியும், மாணவர்களை சாதாரண உடையில் அனுப்பும்படியும் பள்ளி, கல்லூரி நிர்வாகங்களை நிர்பந்திப்பதை ஆட்சியாளர்கள் கைவிட வேண்டும். மாறாக, திருந்த மறுக்கும் மனிதர்களாக நடந்து கொண்டால் நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளாக நேரிடும் என எச்சரிக்கிறேன்...

தமிழினம் விடுதலை பெற தமிழர்களுக்குள் மட்டுமே வணிகம் செய்து தமிழர்களை உயர்த்துவோம்...


பொருளாதார வலிமையடையாத எந்த ஒரு இனமும் ஒருபோதும் விடுதலை அடையாது..

தமிழினத்தின் அடிமை நிலையை உயர்த்த தமிழர்களுக்குள்ளேயே வணிகம் செய்ய வேண்டும் ..

மலையாளிகளாலும் மார்வாடிகளாலும் அவர்களுக்குள் வணிகம் செய்ய முடியும் போது தமிழர்களால் முடியாதா என்ன..

உதாரணமாக நாம் அனைவரும் தமிழர் கடைசியில் உள்ள சொந்தங்கள் அவரவர் செய்யும் சுயதொழில்களை இங்கு பதிவிடலாம்.. அதை பிற சொந்தங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்..

அலைபேசி கடை யாரேனும் வைத்திருந்தாலும் கூறுங்கள்..

உங்கள் வங்கி விவரங்களையும் பதிவிடுங்கள்.. தேவைப்படும் தோழர்கள் பயனடைவர்..

இங்கு  ஆளும் உரிமை தமிழர்களுக்கு மட்டுமே உண்டு...

லண்டன் டாக்டர் பீலேவும் விசாரிக்கப்படுவார் - அமைச்சர் சிவி சண்முகம் பரபரப்பு பேட்டி...


கேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை...


தலைப்பை படித்த உடன் நம்ப முடியவில்லை அல்லவா?

இது உண்மைதான் நம்புங்கள்..

ஆம்! கேன்சர் என்னும் புற்றுநோய் அரக்கனுக்கு மருந்தாகிறது எலுமிச்சை.

உலகம் முழுவதும் கேன்சருக்கு பலியாவோர் எண்ணிக்கை கொஞ்ச நஞ்சமல்ல.

இந்த கொடிய வியாதியை முற்றிலும் குணப்படுத்தும் மருந்து இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை.

தற்போதுள்ள மருத்துவ முறைகளில் ஆரம்ப கட்டத்தில் நோயை கண்டு பிடித்து விட்டால் மட்டுமே குணப்படுத்த முடியும்.

மற்றபடி நோய் பாதிப்பை தடுத்து வாழ்நாளை அதிகரிக்க மட்டுமே முடியும் என்ற நிலை உள்ளது.

உலக மருத்துவ விஞ்ஞானிகள் புற்று நோயை குணப்படுத்தும் மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

அப்படிப்பட்ட ஆராய்ச்சி ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது தான் இந்த செய்தியின் துவக்கத்தில் சொல்லப்பட்ட தகவல்.

அமெரிக்காவின் பால்டிமோரில் செயல்பட்டு வரும் ஒரு சுகாதார அமைப்பு தான் இந்த பெருமைக்குரிய கண்டுபிடிப்புக்கு சொந்தக்காரர்கள்.

தற்போது இந்த வியாதிக்கு உள்ள சிகிச்சைகளில் முக்கியமானது கீமோ தெரபி.

இந்த கீமோ தெரப்பியின் பக்க விளைவுகளையும் தாங்க முடியாத வேதனைகளையும் சொல்ல வேண்டியதில்லை.

இதற்கொரு வரப்பிரசாதமாக வந்துள்ளது தான் எலுமிச்சை.

உடலில் நல்ல செல்களுக்கு எந்த விதமான ஆபத்தையும் ஏற்படுத்தாமல், ஆபத்தான செல்கள் மற்றும் கேன்சராக மாறிவிடக்கூடிய கட்டிகளை மட்டுமே அழிக்கும் அபரிமிதமான ஆற்றல் பெற்றது எலுமிச்சை என்கிறது இந்த ஆராய்ச்சி.

கீமோ தெரப்பியைவிட 10 ஆயிரம் மடங்கு ஆற்றல் கொண்டது இந்த எலுமிச்சை என்பது விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ள ஆச்சரியமான உண்மை.

அதுமட்டுமா?

ஆபத்தான பாக்டீரியாக்கள், கிருமிகள் மற்றும் காளான்களையும் ஒரு கை பார்க்காமல் விடுவதில்லையாம் இந்த எலுமிச்சை.

இரத்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்துவது, மன அழுத்தங்களை கட்டுப்படுத்துவது, நரம்பு கோளாறுகளை சரி செய்வது என்று எலுமிச்சையின் மகிமை. பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

மார்பகம், ப்ராஸ்டேட், கல்லீரல் மற்றும் கணையம் என்று கேன்சர் எங்கிருந்தாலும் அவற்றை அழிக்கும் பணியை சிறப்பாக செய்ய முடியுமாம் எலுமிச்சையால். இத்தகைய சிறப்பு வாய்ந்த எலுமிச்சையின் மருத்துவ குணத்தை பயன்படுத்தி புற்று நோயை அழிக்கும் மருந்துகளை உருவாக்கும் முயற்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்த அரிய கண்டுபிடிப்பு மருத்துவ ரீதியாக வெளி வந்தால் புற்று நோய்க்கு சிக்கனமான, முற்றிலுமான தீர்வாக இருக்கும்.

எனவே, தற்போது இதற்கான மருந்துகளை தயார் செய்து கொள்ளை லாபம் ஈட்டி வரும் வர்த்தக நிறுவனங்களின் வயிற்றில் புளியை கரைத்து வருகிறது எலுமிச்சை...

தமிழ்நாடு...


தற்போதைய நிலையில் தமிழ்நாட்டில் 32 மாவட்டங்கள் உள்ளன. ஆனால் நாடு சுதந்திரம் அடையும் போது தமிழ்நாடு என்பது மெட்ராஸ் மாகாணமாக இருந்தது.

இப்போதைய கர்நாடகம், கேரளம், ஆந்திர மாநிலங்களின் பல்வேறு பகுதிகளும் அடங்கிய விரிந்த நிர்வாகப் பகுதியாக மெட்ராஸ் மாகாணம் இருந்தது.

1956 -ல் இந்திய பாராளுமன்றம் மாநில மறுசீரமைப்பு சட்டம் ஒன்றை இயற்றியது.

அதன்படி மெட்ராஸ் உள்பட 14 மாநிலங்களும், அந்தமான் நிகோபார், டெல்லி உள்பட 6 மத்திய ஆட்சி பகுதிகளும் உருவாக்கப்பட்டன.

மாநில மறுசீரமைப்பு பரிந்துரை மீது 1956 மார்ச்சில் சட்டமன்றத்தில் விவாதம் நடந்தது.

அப்போது மெட்ராஸ் மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் கோரி உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தவர் க.பெ.சங்கரலிங்கனார்.

1956 செப்டம்பரில் பாராளுமன்றத்தில் மாநில மறுசீரமைப்பு மசோதா மீதான விவாதம் நடைப்பெற்றது. அதனைத் தொடர்ந்து சட்டமானது.

நவம்பர் முதல் தேதியில் இருந்து இது அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.

நாஞ்சில் நாடான கன்னியாகுமரி மாவட்டமும், செங்கோட்டையும் திருவிதாங்கூர், கொச்சி சமஸ்தானத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தமிழகத்தோடு இணைக்கப்பட்டன.

கூடலூர் பகுதி நீலகிரி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.

இவ்வாறு தமிழ்பேசும் மாநிலமாக 1956 நவம்பர் முதல் தேதி புதிய மெட்ராஸ் மாநிலம் பிறந்தது.

பழைய மெட்ராஸ் மாகாணத்தில் தெற்கு கானரா, மலபார், நீலகிரி கோயமத்தூர், மதுரை திருநெல்வேலி, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருச்சி, சேலம், தென் ஆற்காடு, வடஆற்காடு, செங்கல்பட்டு, மெட்ராஸ், சித்தூர், கடப்பா, அனந்தபூர், பெல்லாரி, கர்னூல், நெல்லூர், குண்டூர், கிருஷ்ணா, மேற்கு கோதாவரி, கிழக்கு கோதாவரி, விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம் என்று 26 மாவட்டங்கள் இருந்தன.

இவற்றில் தமிழ் பேசும் பகுதி மட்டும் தனியாக பிரிக்கப்பட்டு புதிய மெட்ராஸ் மாநிலம் உருவாக்கப்பட்டது.

அதில் மெட்ராஸ், செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென் ஆற்காடு, சேலம், கோயம்புத்தூர், நீலகிரி, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி என்ற 13 மாவட்டங்கள் இருந்தன.

1967 ஜூலை 18 - ந்தேதி மெட்ராஸ் மாநிலத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யும் மசோதா சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

1969 ஜனவரி 14 -ந்தேதி தமிழ்நாடு என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அனைத்து ஆவணங்களிலும் தமிழ்நாடு என்ற பெயர் பயன்பாட்டுக்கு வந்தது...

ஒரு லட்சம் கோடி ரூபாயில் புல்லட் ரயில் விடும் தேசம் இந்தியா...


உ.பியின் இரண்டாவது பெரிய நகரம், அரசியல் தலைநகரம் அலகாபாத். அந்த அலகாபாத்தில் மாநகர பேருந்துகள் எதுவும் கிடையாது. ஆட்டோ, சைக்கிள் ரிக்க்ஷா, குதிரை வண்டிதான் மாநகர போக்குவரத்து சாதனங்கள்.

அலகாபாத் ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் குபீர்னு ஒரு கெட்ட நாத்தம் அடிக்கும். அது குதிரை சாணி நாத்தம்.

இதுதான் உத்திரபிரதேசத்திற்குள் வந்துவிட்ட அறிகுறி.

அப்புறம் தார் ரோட்டு ஓரமாவும், எதாவது சுவர் இருந்தா அதெல்லாம் திட்டு திட்டா சிவப்பு சிவப்பா இருக்கும். அதெல்லாம் பான்பராக் வாயனுக வரைந்த கோலம்.

ஆங்கிலத்தில் சொல்லும் அட்ரசை புரிந்து கொள்ளக்கூடிய ஆட்டோ டிரைவர் உங்களுக்கு கிடைத்தால் அது உங்க முன்னோர் செய்த புண்ணியமாத்தான் இருக்கும்.

ஓரமா நின்னு எதையாவது நீங்க வேடிக்கை பார்த்துட்டு இருக்கும்போது எதுவோ ஒன்னு உங்களை உரசிக்கிட்டு போவும். அதன் பெயர் குதிரை என அறிக.

உண்மையிலேயே நம்மை பொறுத்தவரை அது வேறவொரு உலகம்தான்.

நான் என் நண்பர்களோட தங்கியிருந்தது நகரின் முக்கியமான பகுதி. அலகாபாத் உயர்நீதிமன்றத்திலிருந்து 500 மீ தொலைவில்தான்.

அவ்ளோ லேசுல ஆட்டோ கிடைக்காது. அதனால ஒரு குதிரை வண்டி புடிச்சி அலகாபாத் பஸ் நிலையம் வந்தோம்.

மாநில அரசு பேருந்துகள் பெருசா இல்லை. தனியார் பேருந்துகள் அரசு அங்கீகாரம் பெற்ற பேருந்து சேவை என்ற பெயரில் ஸ்வராஜ் மஸ்தா நிறைய நிற்கும். அதெல்லாம் மீரட், வாரணாசி, ஆக்ரான்னு வெளியூருக்கு போகும் பேருந்துகள் ( வேன் மாதிரி).

அங்க போயி ஒரு டிராஃபிக் போலிஸ்கிட்ட 'லோக்கல் பஸ் எங்க நிக்கும்'னு கேட்டேன்.

'கியா'ன்னான்.

புரியலை போலருக்குனு நினைச்சி 'சிட்டி பஸ் எதுவும் இல்லையா?'னு கேட்டேன்.

சரி விளக்கமா சொல்லுவோம்னு நினைச்சி 'ஆனந்தபவன் போகனும் (நேரு , இந்திரா காந்தி பிறந்த வீடு) எந்த பஸ்சுன்னு கேட்டேன்.

' 5 கி.மீ தூரம் போக உனக்கு பஸ்சு கேக்குதா? இப்படியே இந்த ரோட்டு மேலயே முக்கா மணி நேரம் நடந்து போனா ஆனந்தபவன் வரும்'னு சொல்லிட்டு சிரிக்கிறான்.

கர்மம்புடிச்சவனுகளா உங்க ஊர்ல 5 கி.மீ தூரத்தைக்கூட நடந்துதான் போவீங்களாடான்னு நினைச்சி ஆட்டோ பிடிச்சோம் நேரு வீட்டுக்கு போக.

அப்பதான் தெரியும் அந்த ஊர்ல மெட்ரோ பஸ் எதுவும் இல்லை. உள்ளூருக்குள்ள பஸ்சில் போகும் பழக்கம் அந்த மக்களுக்கு இல்லைனு.

பெரும்பாலும் மக்கள் கால்நடையாதான் போறாங்க. காசு இருப்பவன் சைக்கிள் ரிக்க்ஷா, ஆட்டோ. இவ்ளோதான் அவுங்க போக்குவரத்து.

ஒரு மாநகரத்துக்கே இந்த நிலைமைனா கிராமப்புற பகுதிகளை நினைத்து பாருங்க.

இங்க நாம சிட்டி பஸ்,டவுன் பஸ், மின்சார ரயில், பறக்கும் ரயில்,மெட்ரோ ரயில் என அனைத்தையும் தாண்டி சின்ன சின்ன குக் கிராமங்கள்வரை மினி பஸ்சால் இணைத்து வைத்திருக்கிறோம்.

தற்போதைய தமிழகம் இருக்கும் இந்த கட்டமைப்புகளை எட்டிப்பிடிக்க இன்னும் 30 ஆண்டுகளாவது தேவைப்படும் உத்திரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களுக்கு.

ஒரு பக்கம் நகர பேருந்துகள் என்றாலே என்ன என தெரியாத மக்கள், இன்னொரு பக்கம் லட்சம் கோடி ரூபாயில் புல்லட் ரயில்...

திருமுருகன் காந்தி மீண்டும் கைது...


அது அவர்களின் பங்காளிங்க சண்டை... நாம் நம் வேலையை பார்ப்போம்...

இந்தியா என்பது தேசியமா அல்லது ஒன்றியமா..?


1.  தேசியம் என்பது என்ன ?

 தேசம் குறித்த கருத்தியல் தேசியம் ஆகும்.

2.  தேசம் என்றால் என்ன ?

 சேர்ந்தாற் போன்ற நிலப்பகுதியில் ஒரு பொது மொழியும், பொதுப் பொருளாதார வாழ்வும், பொதுப்பண்பாடும், அப்பண்பாட்டில் உருவான உளவியல் உருவாக்கமும் கொண்டு வாழ்ந்து வரலாற்றில் நிலைத்துவிட்ட ஒரு சமூகமே ஒரு தேசம் என்றார் ஜே.வி.ஸ்டாலின்.

ஒரு தேசத்திற்கு முதல் தேவை தாயக மண், இரண்டாவது தேவை பொது மொழி, மூன்றாவது தேவை பொதுப் பொருளியல், நான்காவது தேவை பொதுப் பண்பாட்டில் உருவான 'நாம";, 'நம்மவர்" என்ற தேசிய இன ஒருமை உணர்வு.

ரசியப் புரட்சிக்குத் தலைமை தாங்கிய தலைவர்களில் ஒருவரான ஜே.வி.ஸ்டாலின் தேசம் குறித்துச் சொன்ன மேற்கண்ட வரையறைகள் பொதுவாக உலகு தழுவிய பொருத்தம் உடையது.

இதற்குச் சில விதிவிலக்குகளும் உண்டு.

பொது மொழி உருவாகாத நாகர்கள் தாயகம், பொருளியல், பண்பியல் அடிப்படையில் தேசிய இனமாகவும் நாகாலாந்து அவர்கள் தேசமாகவும் விளங்குகிறது. இது போன்ற சில விதிவிலக்குகளும் உண்டு.

3. தேசம் என்பதும் நாடு என்பதும் ஒன்றா ?

இல்லை. தேசம் (Nation) வேறு.

நாடு (Country) வேறு.

ஒரு தேசிய இனத்திற்குச் சொந்தமானது தேசம்.

ஒர் ஆட்சியின் கீழ் உள்ள நிலப்பகுதி நாடு.

ஒரு தேசம் ஒரு நாடும் ஆகும்.

ஏனெனில் ஒரு தேசத்திற்கோர் ஆட்சி இருக்கும் போது, அதற்குட்பட்ட நிலப்பகுதி நாடு ஆகிறது.

ஆனால் ஒரு நாடு ஒரு தேசமாகவும் இருக்கலாம்; பலதேசங்களைக் கொண்டு ஒர் ஆட்சியின் கீழ் உள்ள நிலப்பகுதியாகவும் இருக்கலாம்.

வரலாற்று நிர்பந்தத்தால் ஒரு தேசமே இருநாடுகளாகப் பிளவுபட்டும் இருக்கலாம். எ-டு: கொரியா.

தேசம் என்பதற்கு ஆக்ஸ்ஃபோர்டு அகரமுதலி (Compact Oxford Dictionary Thesaurus and Wordpower Guide- Indian Edition ) கூறும் விளக்கத்தைப் பார்ப்போம்.

ஒரே பண்பாடு, மொழி, வரலாறு ஆகியவற்றைப் பகிர்ந்து கொண்டு ஒர் அரசின் கீழ் அல்லது ஒரு நிலப்பகுதியில் வாழும் பெருந் தொகையான ஒரு மக்கள் கூட்டம்.

நாடு என்பதற்கு அந்த அகரமுதலி கூறும் விளக்கம்...

ஒரு குறிப்பிட்ட ஆட்சிப்பரப்பில் சொந்த அரசைக் கொண்டுள்ள தேசம்.

மேலும் அது கூறுகிறது..

பேரரசு, மன்னர் அரசு, நிலம், தேசம், அரசு, ஆட்சி எல்லை போன்றவை நாடு என்று அழைக்கப்படும்.

நாம் முன்னரே குறிப்பிட்டது போல், நாடு என்பது முதன்மையாக ஆட்சி நிலப்பரப்பைக் குறிக்கிறது. அந் நிலப்பரப்பில் ஒரு தேசம் இருக்கலாம்; சிதைக்கப்பட்ட ஒரு தேசமோ, பல தேசங்களோ இருக்கலாம்.

எடுத்துக்காட்டாக, பிரான்ஸ் ஒரு தேசம். பிரஞ்சு தேசிய இனத்திற்கு உரியது. அதே சமயம் பிரான்ஸ் ஒரு நாடும் ஆகும்.

சுவிட்சர்லாந்து ஒரு தேசமல்ல@ அது ஒரு நாடு. அதில் செர்மானிய, இத்தாலிய, பிரஞ்சு, ரொமான்ஷ்; தேசிய இனங்கள் இருக்கின்றன. இந்நாட்டின் அதிகாரப் பூர்வ பெயர் சுவிஸ் பெருங்கூட்டரசு ( Swiss confederation ) என்பதாகும்.

இந்தியா ஒரு நாடு ஆனால் இந்தியா ஒரு தேசமல்ல.

இந்தியாவில் பல தேசங்கள், பல தேசிய இனங்கள் இருக்கின்றன.

அதனால் இந்திய அரசமைப்புச் சட்ட முதல் விதி இந்தியாவை ஒரு தேசம் என்று குறிப்பிடாமல் ஒர் ஒன்றியம் என்று குறிப்பிடுகிறது.

(Article 1(1) India, that is Bharat shall be a Union of States )..

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை படியுங்கள் உண்மை புரியும்...

எலும்புச் சிதைவைத் தடுக்கும் மஞ்சள்...


நமது பாரம்பரியமான உணவுகளிலும், அழகுசாதனப் பொருட்களிலும் மருத்துவக்குணம் வாய்ந்த பல பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.

அவற்றின் சிறப்பை, மேலைநாட்டினர் அவ்வப்போது செய்யும் ஆய்வுகள் நிரூபித்து வருகின்றன.

புதிய கண்டுபிடிப்பாக, மஞ்சள் கிழங்கானது ஆஸ்டியோபோரசிஸை (எலும்புச் சிதைவு) தடுக்கும் என்று அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
 
அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழத்தின் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த ஜேனட் பங்க், மஞ்சளின் மருத்துவகுணங்களைத் தான் கண்டுபிடித்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

குறிப்பாக, எலும்புச் சிதைவு நோய்க்கு மஞ்சள், அணை போடும் என்று ஜேனட் தெரிவித்திருக்கிறார்.

மாதவிலக்கு நின்ற பெண்களை அதிகமாகப் பாதிப்பதாக 'ஆஸ்டியோபோரசிஸ்' உள்ளது.

இஞ்சி வகையைச் சேர்ந்த தாவரமான மஞ்சள், இந்தியச் சமையலில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

நமது ஆயுர்வேத மருத்துவத்தில் பல நூற்றாண்டு காலமாக இது பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. பல்வேறு வகையான உடல்நலக் குறைவுகள், வயிற்று வலி, மூட்டு வீக்கம் போன்றவற்றுக்கு மஞ்சள் கைகண்ட மருந்தாகக் கருதப்படுகிறது.

வர்த்தக ரீதியாக உற்பத்தி செய்யப்படும் மஞ்சளானது உணவு வகைகளில் ஒரு நறுமணப் பொருளாக அதிகளவில் சேர்க்கப்படுகிறது. எல்லா இடங்களிலும் தாராளமாகக் கிடைக்கிறது.

உடலியல் செயல்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கும் 'எண்டோக்ரைன் சுரப்பி' நிபுணரான ஜேனட், மஞ்சள் குறித்துப் பல ஆண்டுகள் ஆய்வு செய்திருக்கிறார்.

ஆய்வுக்கு என்றே பதப்படுத்தப்பட்ட மஞ்சளை கவனமாக, நுணுக்கமாக ஆராய்ந்து முடிவுக்கு வந்திருக்கிறார்.

அப்போது, எலும்புகளின் சிதைவைத் தடுப்பதன் மூலம், மூட்டுகளில் ஏற்படும் பாதிப்பை மஞ்சள் தடுக்கிறது என்று ஜேனட் கண்டறிந்தார். 'மெனோபாஸ்' ஆன பெண்களுக்கும் எலும்புச் சிதைவையும், எலும்பு இழப்பையும் மஞ்சள் கட்டுப்படுத்துகிறது என்று ஜேனட் பங்க் உறுதியாகக் கூறுகிறார்...

வேகமாக வளரும் இந்தியா வின் பொருளாதாரம் வளர்ச்சியை உலக நாடுகள் உற்று பார்க்கின்றனர் - பாஜக அருண் ஜெட்லி...


கொரிய மொழியில் 500 தமிழ் வார்த்தைகள்...


செம்மொழி ஆய்வரங்கத்தில் ஜுங் நம் கிம் எனும் கொரிய ஆராய்ச்சியாளர், கொரிய மொழியில் பயன்பட்டு வரும் 500 தமிழ் வார்த்தைகளை கண்டறிந்து 'கொரிய மற்றும் தமிழ் மொழிகளுக்கு இடையிலான ஒற்றுமைகள்' என்ற தலைப்பில் கட்டுரையாக சமர்பித்திருக்கிறார்.

கொரிய மொழியில் உள்ள தமிழ் வார்த்தைகளை கண்டறிந்தது குறித்து கூறியதாவது:-

கனடாவில் கொரிய மொழி ஆசிரியராக பணியாற்றி வரும் நான், ஆறு ஆண்டுகளுக்கு முன் டொரோண்டோ நகரில் ரயிலில் சென்று கொண்டிருந்தபோது ஒரு தமிழ் குடும்பத்தை சந்தித்தேன்.

அவர்கள் பேசிய தமிழ் வார்த்தைகளின் உச்சரிப்பு கொரிய மொழி போல இருப்பதைக் கேட்டு வியந்தேன்.

அவர்களிடம் விசாரித்தபோது, இந்தியாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று கூறினார்கள்.

அப்போதுதான் இரு மொழி வார்த்தைகளுகிடையே உள்ள ஒற்றுமைகளை உணர்ந்தேன்.

அதை தொடர்ந்து தமிழ் மொழியை கற்க ஆரம்பித்தேன்.

மேலும், இரு மொழி வார்த்தைகளுக்குமிடையே உள்ள உச்சரிப்பு ஒற்றுமை குறித்து ஆய்வு செய்யத் தொடங்கினேன்.

அப்போது கொரிய மொழியில் சுமார் 500 தமிழ் வார்த்தைகள் இருப்பதை கண்டறிந்தேன்.

 ஒரே உச்சரிப்பு மற்றும் ஒரே அர்த்தத்தை உடையவையாக அந்த வார்த்தைகள் இருந்தன.

அப்பாவை 'அபா' என்றும் வணக்கம் என்பதை 'வணக்காம்தா' என்று பாம்பு என்பதை 'பாயெம்' என்றும் சந்தோசம் என்பதை 'சந்துதம்' என்றும் ஏன் என்பதற்கு 'வேன்' என்றும் மனைவி என்பதை 'மனுரா' என்றும் கொரிய மொழியில் அழைக்கின்றனர்.

உரத்துக்கு 'உரம்' என்றும், கண்ணுக்கு 'நுகண்' என்றும், மூக்குக்கு 'கோ' என்றும், பல்லுக்கு 'இப்பல்', புல்லுக்கு 'புல்', கொஞ்சம் என்பதற்கு 'சொங்கும்' என கூறுகின்றனர்.

இதுபோல, உடலியல் செய்கைகளும் இரு மொழிகளுக்கிடையே ஒற்றுமையாக உள்ளன.

குழந்தைகளின் தலையை ஆட்டியபடி 'தோரி தோரி' என கூறுவதும் கைகளை தட்டிக் கொண்டு விளையாடுவதும் 'சா சா க்குங்' என குழந்தைகளை கொஞ்சுவதும் ஒரே மாதிரியாக இருக்கின்றன.

கொஞ்சுதல் என்ற வார்த்தை கூட 'கொஞ்சு' என்றே கொரிய மொழியில் உள்ளது.

வீட்டில் புதிதாக குழந்தை பிறந்தால், மாவிலைத் தோரணத்தால் அலங்காரம் செய்வது தமிழக பண்பாடு.

நோய் கிருமிகளை அண்டாமல் தடுக்கும் சக்தியாக மாவிலை கருதப்படுகிறது.

இதுபோல, கொரியாவில் ஆண் குழந்தை பிறந்தால் சிவப்பு மிளகாய் தோரணமும், பெண் குழந்தை பிறந்தால் விறகு கரி தோரணமும் தொங்கவிடுவது வழக்கம். கெட்ட ஆவிகளை தடுக்கும் சக்தியாக அவை கருதப்படுகின்றன.

கிருஸ்து பிறப்பதற்கு முன்னால், ரோமாபுரி பேரரசு மற்றும் தெற்கு சீனாவுக்கு தமிழர்கள் வந்திருக்க கூடும்.

ஏனெனில், தென்னிந்தியா மற்றும் இலங்கை போன்ற பகுதிகள் அப்போதைய வர்த்தக மையங்களாக விளங்கின.

மேற்கு மற்றும் கிழக்கு நாடுகளுக்கு இடையிலான பாலமாகவும் அவை விளங்கின.

எனவே, கிழக்கு மார்க்கமாக தெற்கு சீனா, கொரிய தீபகற்பம், ஜப்பானிய தீவுகள் போன்ற நாடுகளுக்கு தமிழர்கள் வந்துள்ளனர்.

கி.பி.முதலாம் நூற்றாண்டு வரையிலும் கொரியாவுக்கு திராவிட இனத்துக்கும் (குறிப்பாக தமிழர்கள்) இடையே தொடர்பு இருந்துள்ளது.

வெப்பமான சூழ்நிலை காரணமாக, வெள்ளை நிற ஆடை அணிவதை தமிழர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

ஆனால், குளிர் சூழ்நிலை இருந்த போதிலும் கொரிய மக்களும் வெள்ளை நிற ஆடைகள் அணிவதில் ஆர்வமாக இருக்கின்றனர்.

இவ்வாறு ஜூங் நம் கிம் தெரிவித்துள்ளார்...

பாஜக திமிழிசை கலாட்டா...


சித்தர் ஆவது எப்படி - 5...


சிவமான சத்திய சித்தரின் பண்புகள்
இந்த தலைப்பில் வரும் தகவல்கள் மிகவும் சிக்கலானதும், திகைப்பினை தரக்கூடியதுமானது... ஆனாலும் இந்த உண்மையினை ஏற்றுக் கொண்டால் மட்டுமே சுலபமாக சித்தராக முடியும்....

முதலில் சித்தர்கள் தரிசனத்தை காண விரும்புவர்கள், அவரை எப்படி காண விரும்புகிறார்கள்.. தூல தேகத்திலா அல்லது சூட்சும தேகத்திலா ?..

இன்றைய கால கட்டத்தில் பலர் சித்தர்களை போல இருந்தாலும், அவர்களிடம் எதிர் பார்த்து, எதிர்பார்த்து, ஏமாந்து போனதினால், சித்தர்களை சூட்சும தேகத்திலே காண விரும்புகிறார்கள்.. அப்படி காண்பது ஒன்றே நம்ப தகுந்தாக உள்ளது...

முகநூல் பக்கங்களில் சித்தரை கண்டவர்கள் எல்லாம் அவர்களின் ஒளி தேகத்தை மட்டுமே படம் பிடித்து பதிவு செய்வார்கள்... சித்தரை பற்றி அறியாதவர்கள், வேறு உருவங்களை
படம் பிடித்து அவைகளை ஆவி என்று அநேக படங்களை வெளியிட்டு இருக்கிறார்கள்..

இப்படி சித்தரா அல்லது ஆவியா என்ற குழப்பத்தில் பலர் இருந்து இருக்கிறார்கள்..

அவர்கள் சித்தரை பற்றி அறை குறையாக அறிந்தவர்களே..

இறைவன் தரிசனத்தை கண்டவர்கள், தங்கள் இஷ்ட தெய்வத்தையே சூட்சும தேக வடிவில் சற்று மங்கலான ஒளி வடிவில் கண்டு இருக்கிறார்கள்...

இப்படியாக கண்டு கண்டு களித்த மனிதர்கள் பரவசத்தில் ஆழ்ந்து போனார்கள்..

ஆனால் நேரடியாக எந்த உபதேசத்தையும், ஏதாவது பொருட்களையும் பெற்றதாக தெரிய வில்லை.. சிலருக்கு அப்படி நடந்து இருந்தாலும் அது மிகை படுத்திய ஒன்றாகவே முடிவில் இருந்து இருக்கிறது..

சிலருக்கு சித்தர் பழம் கொடுத்தார் என வைத்துக் கொள்ளுங்கள்.. அது எங்கும் கிடைக்கக் கூடிய ஒன்று தானே.. அதில் பரவசம் அடைய என்ன காரணம் ?

ஒரு விசித்திரமான பழமாக, உதாரணத்திற்கு பழத்தின் ஒரு பக்கம் ஆப்பிளாகவும் மறு பக்கம் ஆரஞ்சு ஆகாவும் விஞ்ஞானிகள் வியக்கும் வண்ணம் கொடுத்து இருந்தால், ஏதாவது அர்த்தம் இருக்கிறது...

ஆனால் அது போல் எதுவும் நடந்ததில்லை... இனியும் நடக்குமா என்பதிலும் ஐயமே உள்ளது..

மற்றொன்று, சித்தரின் விசித்திரத்தை கண்டவர்கள் அனைவரும் தனி தனியாகத் தான் கண்டார்களே தவிர கூட்டாக யாரும் காணவில்லை.. ஒருவர் அனுபவித்த அனுபவத்தை வேறு ஒருவர் உடன் இருந்து சாட்சியாக இருந்ததில்லை..

இந்த நிலையில் மிகவும் கவனிக்க வேண்டிய ஒன்று உண்டு...

அவர் இஷ்டப்பட்டு வரும் நேரத்தில் மட்டுமே பக்தன் கவனிக்க முடியுமே தவிர தான் நினைத்த நேரத்தில், ஏங்கும் நேரத்தில், ஒரு நாளும் தரிசனத்தை கண்டு களித்ததாக செய்திகள் எதுவும் இல்லை..

காலத்தால் செய்த நன்றி சிறிது எனினும் அது உலத்தை விட பெரியது என்றார் வள்ளுவர்.. காலத்தில் காட்சி தராத, உதவாத சித்தரால் என்ன பயன் என்று மனித குலம் சிந்திப்பது இல்லை...

ஏதோ நம்பிக்கையிலே மனித குலத்தின் காலம் ஓடிக் கொண்டு இருக்கிறது; அதை ஏன் கெடுக்க முயற்சிக்க வேண்டும் என கேட்கலாம்..

மனிதனின் தவறான மீள முடியாத சிக்கி கொண்ட நிலையிலிருந்து மீள சில உண்மைகளை வெளிப் படுத்தும் பொழுது, சிக்குண்டதில் ஒடுங்கி போன நிலையில் இருந்து மனித குலம் மீள, சரியான வழி கிடைக்கலாம்...

உண்மைக்கு புறம்பான செய்திகளில் சிக்குண்ட இந்த மனித குலம் இதுவரை இந்த சித்தர்களிடமிருந்து என்ன பெற்றது ?..

ஞானத்தையா அல்லது அசாதாரமான பலத்தையா?...

முடிவில் மரணத்தை தவிர, அதையும் சமாதி என்ற கௌரவமான பட்டத்தை தவிர வேறு என்ன கிடைத்தது ?..

தனிப் பட்ட மனிதனுக்கு கிடைத்ததாக கேள்வி பட்டு இருக்கிறோமே தவிர ஒட்டு மொத்த மனித குலத்திற்கு என்ன செய்ய முடிந்தது ?..

காரணம் சித்தர்களை பற்றி தவறாக புரிந்து கொண்டு உள்ள மனிதகுலம் அத்தகைய மன கட்டமைப்பில் உள்ளவர்களையே அதாவது உடல் தோரணைகளில், உலக குடும்ப பந்தங்களில் இருந்து விலகி அன்பு என்பதையே என்னவென்று தெரியாதவர்களையே நம்மில் பெரும் பாலும் நம்பிக்கொண்டு இருக்கிறோம்..

அத்தகைய வேசதாரிகளிடம் இருப்பது, சோம்பலும், ஒழுக்கமின்னையும், போதை பொருள்களில் சிக்குண்டவர்களாய் ஆற்றல் அற்று ஆனால் மிக பெரிய ஆற்றல் உடையவர்கள் போன்ற நடிப்பும், நடமாடும் தூல தேக நடை பிணங்களாய், தங்கள் பிழைப்பு ஓட்ட பயமுறுத்தி வாழ்வதுமே நாம் கண்டு கொண்டு வருகிறோம்..

பயமுறுத்தல் என்பது மிக பெரிய ஆயுதமாக கையாண்டு, தங்கள் நிலையை தக்க வைத்துக் கொள்கிறார்கள்.. இது இன்றைய நிலை...

பின் சித்தர்கள் என்பவர்கள் எவ்வாறு இருக்கவேண்டும் என்ற கேள்வி எழலாம் ? பேரண்ட பேராற்றலை பெற்ற காரணத்தினால், ஆற்றல் மிக்கவர்களாய், எதையும் சாதிக்க கூடிய நிலையில் உள்ளவர்கள்..

பொருள் உதவிக்காக யாரையும் சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை..

யாருக்காகவும் தன் இயல் நடை உடை பாவனைகளை மாற்றி கொள்ளவேண்டிய அவசியம் இல்லை...

ஆற்றல் மிக்கவர்களாதலால் அன்பு என்ற மகா சக்தி உடையவர்களாதலால் உலக குடும்ப தொடர்புகளிலிருந்து ஓடி ஒளிந்து கொள்ளும் அவநிலை அவர்களுக்கு இல்லை..

உலகம் எத்தனை வஞ்சனைகள் செய்தாலும், எத்தனை தீங்குகள் செய்தாலும், தாய் உள்ளத்தோடு பொறுத்துக் கொண்டு, வேண்டியவர்களுக்கும் வேண்டாதவர்களுக்கும், பாராபட்சமின்றி, வேண்டிய நேரத்தில் உதவக் கூடியவர்கள்..

இவர்கள் தன்னை தன் செயல்களை மறைத்துக் கொண்டு உலகிற்கு பலன் தரக்கூடியவர்கள்..

அரசாங்க பணத்தையே அள்ளி அள்ளி கொடுத்து தான் கொடுத்ததாக காட்டிக் கொள்ளும் விளம்பரதாரர்கள் அல்ல..

அன்பே உருவான இவர்களை அடையாளம் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு மிக மிக எளிமையானவர்கள்...

அதனால் தான் அப்படி இன்றும் வாழும் இவர்களை அடையாளம் காண முடியாமல், விளம்பர புகழ்ச்சி உலகில் சிக்கி கொண்ட மனிதன் தவிக்கிறான்...

உண்மையான சித்தர் பண்புகளை அறிந்து கொண்ட இன்றைய எந்த மனிதனும், சித்தராக விரும்பமாட்டான்..

காரணம் எங்கும் எதிலும் ஆதாயம் தேடும் நிலையிலேயே மனிதன் உள்ளதால் சத்திய சித்தராக விரும்புவதே இல்லை..

ஆனால் சத்திய சித்தர் பண்புகளே அந்த சித்தர்க்கு பிரபஞ்சம் பேரண்டம் தன் பேராற்றலை வழங்கும் என்ற இரகசியத்தை மனிதன் அறிவதில்லை..

அதனால் தான் அன்பின் ஆற்றலே எழுந்த மனிதன் மட்டுமே சித்தராக முடியும் என்ற பெரும் பதிவினை மனதில் கொண்டு, அன்பே சிவம் என்ற சத்திய வார்த்தையில் சிவமாகி நின்ற சத்திய சித்தர் வழிமுறைகளை ஆராய்ந்து சித்தராக முனைவோம்..

தூலதேகத்திலும் சித்தராக இருப்பவரே சூட்சும தேகத்திலும் இருக்கும் வல்லமையை, பேரண்ட பேரறிவின் துணையால் பெற்ற காரணத்தினால், கண்டம் விட்டு கண்டம் நகரும் ஆற்றலும் உடையவராக இருப்பார்...

அவர் ஒருவரே வேண்டிய நேரத்தில் துணையாய் வந்து நிற்பார்..

முதலையிடம் சிக்கிய யானை ஆதி மூலமே என்று அலறிய அக்கணமே வந்து உதவிய இறைவனை போன்று உதவும் வல்லமை உடையவராகவும் இருப்பார்..

வெறும் காட்சிகளை மட்டும் அளித்து காணாமல் போகும் மாயா தோற்றங்கள் கொண்ட சித்தரை போல் இல்லாமல், சத்திய சித்தராய் தேகம் உருவிலும், கண்டம் விட்டு கண்டம் இயங்கக் கூடிய சூட்சும சக்தியிலும் இருப்பவரே உண்மை சித்தர் ஆவார்..

இத்தகைய சித்தர் ஆகும் உளவுகள் உலகிற்கு நன்மை தரும் என்பதை மறக்காமல் இனி வரும் பகுதிகளை உற்று கவனிப்போமாக...

முதலில் கண்ட சித்தர் பிம்பங்கள் அனைத்தும் தனி பட்ட மனிதனின் மாயா மன தோற்றங்கள்.. இவைகளை முதன்முதலில் கண்டு ஏமாந்த மனிதன் இன்று வரை ஏமாந்து கொண்டே இருக்கிறான்..

கண்டேன் கண்டேன் என பரவச புலம்பலை தவிர வேறு ஒரு பலனை பெற இயலாதவனாய் இருக்கிறான்...

இவைகள் எல்லாம் நெருப்பு என்ற பூதத்திலிருந்து பிரிந்து வந்த வெளிச்சம் என்ற கழிவால் ஆனது...

ஆனால் நெருப்பு என்ற பூதத்தை முறையாக பயன் படுத்தி கனல் என்ற உயிர் ஆற்றலை பெறும் போது மட்டுமே சத்திய சித்தர் உருவாகிறார்.. அதற்கு சிவ கலப்பே உகந்த வழி..

சிவ கலப்பு என்பது ஒரு மதத்தை சார்ந்த சொல் அல்ல... அது ஒரு பயிற்சி..

புத்தி அறிவும் இணைந்து செயலாற்றும் உன்னத பயிற்சி.. இனி வரும் பகுதிகளில் அதில் கவனம் செலுத்தி காண்போமாக....

அகத்தியர், போகர், வள்ளலார், திருமூலர் சிவ வாக்கியர் அருணகிரி நாதர் போன்ற மகான்களை நாம் சித்தர்களாக போற்றி வணங்குகிறோம்...

இப்போது நாம் அவர்களை மேலே குறிப்பிட்ட சித்தர் கருத்தோடு பொருத்தி பார்க்க வேண்டாம் என கேட்டுக் கொண்டு, அவர்களை பற்றி தெளிவான கருத்தினை பின்னால் பார்ப்போமாக...

வள்ளுவர் கோட்டம்...


வள்ளுவர் கோட்டம், திருவள்ளுவருக்காக கட்டப்பட்டுள்ள ஒரு நினைவகம் ஆகும்.

இந்நினைவகம், சென்னையில் 1976 ஏப்ரல் 15 ஆம் தேதி அமைக்கப்பட்டது..

இங்கு பலரையும் கவர்வது திருவாரூர்க் கோயில் தேரின் மாதிரியில் கட்டப்பட்டுள்ள சிற்பத் தேர் அமைப்பு ஆகும்.

இதன் அடிப்பகுதி 25 x 25 அடி அளவு கொண்ட பளிங்குக் கல்லால் ஆனது. இது 128 அடி (39 மீட்டர்) உயரம் கொண்டது.

7 அடி (2.1 மீட்டர்) உயரமான இரண்டு யானைகள் இத்தேரை இழுப்பது போல அமைக்கப்பட்டுள்ளது.

தேரின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொன்றும் தனிக்கல்லில் செதுக்கப்பட்ட நான்கு சக்கரங்கள் காணப்படுகின்றன.

கரைகளில் உள்ள சக்கரங்கள் பெரியவை. ஒவ்வொன்றும் 11.25 அடி (3,43 மீட்டர்) குறுக்களவும், 2.5 அடி (0.76 மீட்டர்) தடிப்பும் கொண்டவை.

நடுவில் அமைந்துள்ள இரு சக்கரங்களும் சிறியவை.

இத்தேரில் திருவள்ளுவரின் சிலை வைக்கப்பட்டுள்ளது.

இச்சிலை வைக்கப்பட்டுள்ள கருவறை நில மட்டத்திலிருந்து 30 அடி (9 மீட்டர்) உயரத்தில் அமைந்துள்ளது.

எண்கோண வடிவில் அமைந்துள்ள இக் கருவறை 40 அடி (12 மீட்டர்) அகலமானது.

இக்கருவறை வாயிலில் திராவிடக் கட்டிடக்கலைப் பாணியில் அமைந்த தூண்கள் அழகுற அமைந்துள்ளன.

இத்தேரின் முன்னுள்ள அரங்கத்தின் கூரைத் தளத்திலிருந்து இச்சிலை வைக்கப்பட்டுள்ள கருவறைப் பகுதியை அணுக முடியும்.

இத்தேர் அமைப்பின் கீழ்ப்பகுதி, திருக்குறளிலுள்ள கருத்துக்களை விளக்கும் புடைப்புச் சிற்பங்களால் அழகூட்டப் பட்டுள்ளது.

அரங்கம்..

220 அடி (67 மீட்டர்) நீளமும், 100 அடி (30.5 மீட்டர்) அகலமும் கொண்ட இங்குள்ள அரங்கம் 4000 மக்களைக் கொள்ளக்கூடியது என்று கூறப்படுகின்றது.

இவ்வரங்கத்தின் வெளிப்புறமாக 20 அடி (6 மீட்டர்) அகலம் கொண்ட தாழ்வாரங்கள் உள்ளன.

இவ்வரங்கத்தின் ஒரு பகுதியில் மேற் தளம் அமைக்கப்பட்டுள்ளது இது குறள் மணிமாடம் எனப் பெயரிட்டு அழைக்கப்படுகின்றது, திருக்குறளில் உள்ள 1330 குறட்பாக்களும் கற்பலகைகளில் செதுக்கிப் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இவற்றுள் அறத்துப்பாலைச் சேர்ந்த குறள்கள் கருநிறப் பளிங்குக் கற்களிலும், பொருட்பால், காமத்துப் பால் என்பவற்றுக்குரிய பாடல்கள் முறையே வெள்ளை, செந்நிறப் பளிங்குக் கற்களிலும் பொறிக்கப்பட்டுள்ளன.

இவற்றுடன், குறள்களில் உள்ள கருத்துக்களைத் தழுவி வரையப்பட்ட, நவீன, மரபுவழி ஓவியங்களும் உள்ளன.

அரங்கத்தின் கூரைத்தளம் வேயாமாடம் எனப்படுகின்றது. இவ்வேயாமாடத்துக்குச் செல்வதற்கு அரங்கத்தில் வாயிலுக்கு அருகில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இத்தளத்திலிருந்து, கருவறையை அணுக முடியும். இங்கேயிருந்து சில படிகள் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையையும் பார்க்கலாம்.

இத் தளத்திலிருந்து கருவறை மேல் அமைந்த கோபுரத்தையும் கலசத்தையும் அண்மையிலிருந்து பார்ப்பதற்கு இத்தளம் வசதியாக உள்ளது. அத்துடன், கட்டிடத்தைச் சுற்றியுள்ள பூங்காவின் அழகையும் இங்கிருந்து பார்த்து ரசிக்க முடியும்...

பாஜக மோடியும் டூபாக்கூர் அரசியலும்....


கல்வியும் தாழ்த்தப்பட்டதா?


1922-25 வாக்கில் (மெக்காலே கல்விமுறை புகுத்தப்பட்ட பிறகும்) அதை விடுத்து மதராஸ் (சென்னை) மாகாணத்தில் பாரம்பரியக் கல்விமுறை பற்றிய விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது 11,575 பள்ளிகளும் 1,094 உயர் கல்வி மையங்களும் இருந்துள்ளன.

தமிழ்நாட்டில் மொத்த மாணவர்களில் 70-80 சதவிகிதம் பேர் (இன்றைய) பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்துள்ளனர்.

(அதாவது இன்றைய சூழலில் SC, ST என்று குறிக்கப்படுவோர்)

அதாவது ஆங்கில ஆண்டைகளின் திராவிட அடிபொடிகள் கூறுவது போல பல நூறு ஆண்டுகளாக பார்ப்பனரே கல்வி பெற முடிந்தது.

ஈ.வே.ரா வந்துதான் எல்லாருக்கும் கல்வி கிடைத்தது என்பது வடிகட்டிய பொய்.

அவர்கள் காட்டும் புள்ளி விபரங்கள் பிரிட்டிஷ் அரசு நடத்திய ஆங்கிலவழிக் கல்வி நிறுவனங்களில் பார்ப்பனர் நிறைந்திருந்தது பற்றியது தான்.

ஆங்கிலேய அரசு அங்கீகரிக்காத நாட்டுப்புற பள்ளிக் கூடங்களிலும் பாரம்பரியக் கல்வி நிலையங்களிலும் கல்வி கற்க சாதி ரீதியாக எந்த தடையும் இருந்திருக்கவில்லை.

ஆங்கிலேயர் வரும் முன்பு மக்கள் முட்டாளாக இருந்திருந்தார்கள் என்றும் சொல்வதற்கில்லை.

ஐரோப்பாவை விடவும் இங்கே வேளாண்மையும், வானியலும், கணிதமும், கலையும், கட்டுமானங்களும் சிறப்பாக இருந்தன.

தகவல்: பிரிட்டிஷ் ஆவண ஆராய்ச்சியாளர் ராம்பால் அவர்களின் பேட்டி..

விரிவான பதிவு
www. tamilpaper. net/? p=4580

ஆதார் கார்டும் திருட்டு தினமும்...


புற்றுநோயின் எதிரி பப்பாளி...


எல்லோரும் விரும்பிச் சாப்பிடும் பழவகையில் ஒன்று பப்பாளி.

இதில் புற்றுநோய்களுக்கான எதிர்ப்பு மருந்து இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்கள் கணிசமான அளவில் இருக்கிறார்கள்.

வாய், தொண்டை, கல்லீரல், நுரையீரல், இரப்பை, மூளை என பல உறுப்புகளையும் பாதிக்கும் வெவ்வெறு வகை புற்றுநோய்கள் இருக்கின்றன.

மருத்துவர்களுக்கு சவாலான வியாதிகளில் புற்றுநோயும் ஒன்று.

இதற்கு சாதாரண பப்பாளி இலைச் சாற்றில் எதிர்ப்பு மருந்து இருப்பது தற்போது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.

பப்பாளி இலையில் புற்றுநோய் வைரஸ்களை எதிர்க்கும் டி.எச்.1 டைப் சைடோகின்ஸ் என்னும் மூலக்கூறுகள் உள்ளன.

இது நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவித்து புற்று நோய் தீவிரத்தை கட்டுக்குள் வைக்கிறது.

புளோரிடா பல்கலைக்கழக ஆய்வுக்குழு வெளியிட்டுள்ள கட்டுரையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது...

திராவிடம் பகுதி-1...


இந்தியா- பல்வேறு இனங்கள் வாழும் பரந்த நிலப்பிரப்பு...

ஆங்கிலேயரால் ஒருங்கிணைக்கப்பட்டு,
ஆங்கில மொழியால் ஆளப்பட்டு,
மொழிவாரி இன உணர்வைவிட தேசிய ஒருமைப்பாட்டு உணர்வு மேலோங்கி,அதனால் விடுதலை அடைந்து..

அதன்பிறகு மதவழியாக இரண்டு துண்டாடப்பட்டு, மதவழி தேசியம் எனும் போலி தேசியத்தை இனவழி தேசியம் தோற்கடித்ததால் மூன்று துண்டானது.

இனவழி தேசியத்தின் முதல் வெற்றியானது திரு.பசல் அலி அவர்கள் தலைமையில் அமைந்த கமிசன் பரிந்துரையின்படி 1956 நவம்பர் ஒன்றில் காந்தி, நேரு, காமராசர் மற்றும் பலரின் எதிர்ப்பையும் மீறி மொழிவாரி மாநிலங்களை அமைத்ததாகும்.

அன்றைய எழுச்சி பெற்ற இனங்கள் தங்கள் நிலப்பரப்பை தக்கவைக்க கிளர்ந்தெழுந்தன.

அதுவரை மூன்று மாநிலங்களே இருந்தன.

கல்கத்தாவை தலைநகராகக் கொண்ட வங்காளம், ஓரிசா, பீகார், அசாம் மற்றும் மத்திரபிரதேசம் ஆகியவையும்...

பம்பாயை தலைநகராகக் கொண்டு பஞ்சாப், சிந்து, மகாராட்டிரம் மற்றும் குசராத் ஆகியவையும்...

சென்னையை (மதராசப்பட்டிணம்) தலைநகராகக் கொண்டு தமிழகம், ஆந்திரா, கன்னடம் மற்றும் கேரளா ஆகியவையும் ஒருங்கிணைக்கப்பட்டு சுமார் நூறு ஆண்டுகள் ஆளப்பட்டன.

மொழிக்கான முக்கியத்துவம் இல்லாததால் ஆங்கிலம் படித்த எவரும் எந்த இனமக்களையும் அதிகாரம் செலுத்த வழி ஏற்பட்டது.

இனவுணர்வை மழுங்கடிக்க ஆங்கிலம் கட்டாயமாக்கப்பட மாநில மொழிகள் கற்கவேண்டிய கட்டாயம் எதுவும் இல்லாமல் ஆக்கப்பட்டது.

இந்த நிலையில்தான் மற்ற மொழியினரை விட தமிழர் ஒரு மாபெரும் பிழை செய்தனர்.

அன்றைய தமிழர் செய்த பிழைக்கான தண்டனையை இன்றைய இளந் தலைமுறையினர் இன்றும் அனுபவித்து வருகின்றனர்...

ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது ஆந்திராவில் புதிய விதி, அமலுக்கு வந்தது...


ஆந்திராவில் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டுகிறவர்களுக்கு பெட்ரோல் வழங்கக்கூடாது என்ற புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த விதிமுறை நேற்று அமலுக்கு வந்தது.

இந்த உத்தரவை அமல்படுத்துவதில் மாநிலத்தில் உள்ள பெட்ரோல் பங்க் டீலர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

இந்த புதிய உத்தரவினால் மாநிலம் முழுவதும் இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இருசக்கர வாகன விபத்துகளை குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாலை பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு புதிய சாதனங்கள் வாங்குவதற்கு முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, ரூ.10 கோடி அனுமதித்துள்ளார்.

கடமைகளை சரி வர செய்யாத அரசு அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய தயங்க மாட்டேன் என அவர் எச்சரித்துள்ளார். இருசக்கர வாகனங்களை ஓட்டுகிறவர்கள் ஹெல்மெட் அணியவும், 4 சக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் சீட் பெல்ட் அணியவும் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்...

டெல்லியில் பரபரப்பு...


மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து தற்கொலைக்கு முயன்ற தமிழக விவசாயிகளை தடுத்து, டெல்லி போலீசார் கைது செய்தனர்.

மீடியாக்களால் மறைக்கப்படுகிறது...

மகாபாரதக் கதைகள் தமிழகத்தில் நிகழ்ந்தவைகளா?


மகாபாரதப் போர் நிகழ்ந்ததற்கான வரலாற்று ஆதாரங்களும், இலக்கிய ஆதாரங்களும், பழங்கால சிற்ப ஆதாரங்களும் வேறு எந்த இடத்தைக் காட்டிலும் தமிழகத்திலேயே அதிகமாக உள்ளது.

அதற்கான காரிய காரணங்களை ஆராய்ந்து வெளியிடும் முயற்சியில் தமிழ் பேரறிஞர்கள் ஈடுபட்டுள்ள நிலையில் இந்து மதத்தினர் உண்மையான உள்ளத்துடன் இதற்கு ஆதரவு தருவார்கள் என்பதில் சந்தேகமில்லை..

மகாபாரதக் கதைகள் தமிழகத்தில் ஏழாம் நூற்றாண்டிற்குப் பிறகே வழக்கிற்கு வந்தது எனலாம்....

ஆனால், அதற்கும் முற்பட்ட காலத்திலேயே, பஞ்சபாண்டவர் இரதங்களுடன் சேர்த்து, ஏழு இரதங்கள் மகாபலிபுரத்தில் அமைக்கப்பட்டுள்ளது....

அவற்றுள், இரண்டு இரதங்கள் கடற்கோளினால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது..

முழ்கிய பகுதிகளில் கடைசங்க காலத்தைச் சேர்ந்த  பகுதிகளும் உள்ளதாக ஆய்வாளர்களின் முடிபுகள் கூறுகிறது.

ஆனால், கடந்த இருபத்து மூன்று ஆண்டுகளாக முனைவர். சு.சௌந்திரபாண்டியன் அவர்களால் ஆய்வு செய்யப்பட்டு "புராண உண்மைகள் " என்ற புத்தகமானது வெளிவரப்போவதாக இருக்கும் நிலையில்,  ''பஞ்சபாண்டவர்களின் பெயர்களிட்டு அழைக்கப்பட்டாலும், இவை அவர்களுக்குரிய கோயில்களோ அல்லது இரதங்களோ அல்ல'' என்கிற பரப்புரையானது, எவ்விதமான ஆதாரமும் இன்றி விக்கிபீடியா போன்ற இணையதளங்களில் பதிவேற்றப்படுகிறது..

மகாபாரதப் போர் என்பது தமிழர்களின் ஆதியில் கடைபிடித்து வந்த போர் நெறிமுறைகளுக்கு உட்பட்டு நடந்த போராகும் என்பதை அதன் உயரிய போர் நெறிமுறைகளைக் கொண்டு அறியலாம்..

போர்க்களத்தின் எல்லைக்கு அப்பால் யாருமே தனியாக ஒருவரையும் தாக்கவில்லை.

பெண்களோ, குழந்தைகளையோ, முதியவர்களையோ, சம்பந்தமில்லாத பொது மக்களையோ தாக்குவதும், புறமுதுகிடுதலும், முதுகில் அம்பை எய்தலும், கேவலமானதாக கருதப்பட்டது.

உயரிய போர் நெறிமுறையானது, அறியப்படுகிற வரலாற்றுக் காலத்திற்கும் முன்பிருந்தே தமிழர் மத்தியில் வழக்கில் இருந்து வருகிறது.

இத்தகைய ஒழுக்கமானது தமிழரைத்தவிர வேறு எந்த இனத்தாரிடத்திலும் இருந்ததாக வரலாறு கிடையாது.

ஆனால், மூலக்கதையில் வரும் போர்க்களமும், நதிகளும், சில காட்சிகளும் கடற்கோளால் மூழ்கடிப்பட்டும் இருக்கலாம்.

வனவாச காலத்தில், பாண்டவர்கள் கொல்லி மலையில் முனிவர்கள் (சித்தர்கள்) ஆதரவுடன் தங்கியிருந்தாக சொல்லப்படுகிறது.

இத்தகவல்கள் அங்கு வாழும் மக்கள் தமது அடுத்த தலைமுறைக்கு வாழையடி வாழையாக கூறிவரும் தகவலாகும்.

அவ்வாறு கூறப்பட்டுவரும் உண்மையான அதிசயமான தகவல்கள் ஆயிரம் தலைமுறைகள் கடந்து சென்றாலும்  நிலைத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை...

கொல்லி மலையில், பெரியண்ணசாமி கோவில் என்று அழைக்கப்படுவது பஞ்சபாண்டவர்களில் பெரியவராக இருந்த தருமருடைய கோவிலே ஆகும்..

கொல்லிப்பாவையாக இருப்பது திரௌபதியே ஆகும்.

அந்த இடங்களுக்கு நேரில் சென்ற போது, இவ்விவரங்கள் எனக்கு கிடைத்தது..

அங்குள்ள திரௌபதி அம்மன். துகிலுரியப்பட்டு இருக்கும். அதனால் முகத்தை மட்டும் பார்க்கும்படியாக திரை கட்டப்பட்டிருக்கும்.

அங்கு யாரும் பலி கொடுக்கவோ, அசைவம் புசிக்கவோ அனுமதி இல்லை. காரணம், அத்தேவதையானவள் விரதத்தை கடைபிடிப்பவள்.

வனவாசம் முடியும் காலத்தில், ஓராண்டு காலம் யார் கண்ணிலுமே படாமல் வாழவேண்டும் என்ற ஆணை இருந்தது.

அப்போது வெள்ளியங்கிரி மலையிலுள்ள பாண்டவர் குகைகள் என்று அழைக்கப்படும் இரகசிய குகைகளில் வாழ்ந்திருக்கலாம் என்று கருதுவதற்கு எதுவாக அதன் அமைப்பு உள்ளது.

திரவ்பதி அம்மனது கோவில்கள்...

திரவ்பதி அம்மனுக்காக அமைக்கப்பட்டுள்ள மிகப் பழமையான கோவில்கள் அனைத்தும் தமிழ்நாடு, முன்னாளில் தமிழர்கள் வாழ்ந்ததாக கூறப்படும் தென்னிந்திய பகுதிகள் மற்றும் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகள் போன்ற  இடங்களில் மட்டுமே அதிகமாக உள்ளது.

(கதை நடந்ததாக கூறப்படும் இடங்களில் மிகவும் பிற்காலத்தில் மட்டுமே ஒன்றிரண்டு நினைவிடங்கள் அமைக்கப்பட்டு உள்ளது)

சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன்..

சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் முற்காலச் சேர அரசர்களுள் ஒருவன்.

இவனைப் போற்றி முரஞ்சியூர் முடிநாகனார் என்னும் புலவர் பாடியுள்ளார்.

இவ்வரசன் பாரதப் போர் நிகழ்ந்ததாகக் கருத்தப்படும் கி.மு. 1200 ஆண்டு வாக்கில் வாழ்ந்தவர் என கருத இடமுண்டு என்று சில வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்.

புறநானூற்றில் கூறப்படும் “ஈரைம்பதின்மரும் பொருது களத்தொழிய பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்”
என வரும் பகுதியும், இறையனார் அகப்பொருள் உரையில் கூறப்படும் தலைச்சங்கப் புலவருள் முரஞ்சியூர் முடிநாகனார் என்பார் ஒருவர் என்று கூறி இருப்பதாலும், இவன் முற்கால சேரர்களுள் ஒருவன் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இளங்கோ அடிகள் தன் சிலப்பதிகாரத்திலும் ஓரைவர் ஈரைம்பதின்மருடனெழுந்த போரில் பெருஞ்சோறு போற்றாது தானளித்த சேரன் என கூறுகின்றார்.

பாரதப் பெரும்போரில், இருபடைகளுக்கும் சோறுகொடுத்த சேரமன்னன், உதியஞ்சேரலாதனைப் பற்றிய குறிப்புகள், புறநானுறிலும், சிலப்பதிகாரத்திலும் உள்ளது. சோற்றை எவ்வளவு தூரம் கொண்டு சென்று கொடுக்கமுடியும் என்பதை நீங்களே யூகம் செய்து கொள்ளவும்.


திரு.முருகேசன் தனபால் அவர்களால் எழுதப்படும் "புராண உண்மைகள்" நூல் விமர்சனம்.

முனைவர் சு.சௌந்திரபாண்டியன் அவர்கள் எழுதிய "புராண உண்மைகள்"என்ற புத்தகத்தில் இருந்து..

கண்ணன் என்றும், கிருஷ்ணன் என்றும், கிருஷ்ணபகவான் என்றும், கிருஷ்ண பக்தி என்றும், ' அரே ராமா அரே கிருஷ்ணா ' என்று கூறி உலகெங்கும் பேசப்பபடுகிறாரே கிருட்டிணன் , அந்த கிருட்டிணன் ஒரு தமிழன்..

கிருட்டிணன் என்பவனின் மூலத் தமிழ் பெயர் கருப்பையா அல்லது கருப்பசாமி என இருத்தல் வேண்டும்.

கறுப்பு என்பதற்கான வடசொல்தான் கிருஷ்ணம்.

தமிழிலிருந்து பிரிந்த வடமொழி, தமிழன் வரலாறாகிய கிருட்டிணன் வரலாற்றை எழுதி வைத்த நூல்தான் அரியவம்சம்.

மகாபாரதம் கூறும் இக் கிருட்டிணன், ஒரு தமிழன்..

இதற்கு ஐயமே வேண்டாம்..

இதற்கு சான்று?

கிருட்டிணன் வரும் இடங்களை எல்லாம் உற்று நோக்குங்கள்.

உங்களுக்கே தெரியும், அவை எல்லாம் தமிழ் மண்ணில் நடந்தவையே என்று.

ஸ்ரீமத் பாகவதத்தை தமிழில் மொழி பெயர்த்த கடலங்குடி நடேசசாத்திரி அவர்கள், மதுரா என்று வட மொழியில் எழுதபட்ட இடங்களை எல்லாம், மதுரை என்று தான் மொழி பெயர்த்துள்ளார்.

அவர் தமிழ் நாட்டு மதுரையைக் குறிக்கவில்லையாயினும், உண்மையில வடமொழி நூல்கள் கூறும் ' மதுரா ' தமிழ் நாட்டு நம் மதுரை தான். இதை நம்புவது கடினமாகத்தான் இருக்கும்.

ஆனால் பேருண்மை இது.
மிக பெரிய புராண உண்மை இது.

தமிழ் மக்கள் வரலாறே புத்துணர்ச்சி பெறும் உண்மை இது..

இத்தனை ஆண்டுகளாக மறைந்து போய்க்கிடத்த மாபெரும் வரலாற்று உண்மை இன்று தமிழகத்தில் மலர்ந்துள்ளது.

எனது 23 ஆண்டுகால ஆய்வின் பலன் என்று அடக்கத்தோடு கூற விரும்புகிறேன் இதை..

அதாவது, தமிழகத்து மதுரையில் தான் வாசுதேவருக்கும் தேவகிக்கும் கண்ணன் பிறந்தான்.

இதே நம் மதுரையில்தான் கம்சனின் அரன்மனை இருந்தது.

தமிழகத்தில், கஞ்சன் என்று சில தமிழ் நூற்களில் வருபவன் இதே தமிழனாகிய கம்சன் தான்.

அப்படியானால், யமுனைக் கரையில் கோகுலத்தில் வளர்ந்தான் கண்ணன் என்பது ?

அது உண்மை தான்.. ஆம்..

தமிழகத்து வைகை இருக்கிறதே , அதன் வடமொழிப் பெயர் தான் யமுனா.

இந்த சொல் மாற்றம் தான் தமிழகத்து வரலாற்றைத் தமிழர்களிடமிருந்து பறித்தது.

இனிமேல் வட மொழி நூல் எந்த நூலை எடுத்துக்கொண்டு பார்த்தாலும் சரி, அதில் யமுனா நதி என்று வந்தால், அது தமிழகத்து வைகை என்று எடுத்துக் கொள்ளுங்கள். தமிழக வரலாறு இனிமையாகத் துலங்கக் காண்பீர்கள்.

தமிழக வரலாறு என்றுகூடக் கூற வேண்டாம் உண்மை வரலாறு என்று கூறலாம்.

வை - நூனி
வைக்கோல் - கதிரின் நுனி
வை + கை = வைகை

யமுனை என்ற சொல்லை பாருங்கள்..
ய + முனை = யமுனை ; முனை = நுனி..
இப்போது விளங்குகிறதா ?

வைகைதான் யமுனை என்று ?

இதை ஏதோ சொல்லாராய்ச்சி என எண்ணி விட வேண்டாம்.

நமது ஆய்வு சொல்லாராய்ச்சி மீது உட்கார்ந்து கொண்டிருக்கவில்லை.

நமது ஆய்வு நிலவியல் (Geography) உள்பட பல்வேறு கூறுகளின் மீது உட்கார்த்துள்ளது.

வைகை கரையில் தான் கண்ணன் விளையாடியது.

பலராமனுடன் கண்ணன் விளையாடிய கோகுலம் எது ?

நமது திருப்பூவனம் என்ற ஊர்தான்.. ஆம்..

வடமொழி நூற்களில் விரஜா என்று குறிப்பிடடும் இந்த ஊர் நந்தகோகுலம், தமிழகத்துத் திருப்பூவணம் என்ற ஊர்தான்.

மதுரையை ஒட்டி அமைத்துள்ளது. வைகைக் கரையில் உள்ளது.

இத் திருப்பூவணமே யமுனை கரையில் உள்ள நத்தகோகுலம் என்று சித்திரிக்கபட்டுள்ளது வடமொழி நூல்களில்.

எந்த வடமொழி நூல்களில் ?

மகாபாரதம், அரியவம்சம், விஷ்ணு புராணம், ஸ்ரீமத் பாகவதம் முதலிய வடமொழி நூல்களில்..

எனவே, இந்த வடமொழி நூற்கள் விவவரிக்கும் கண்ணன் வரலாறு , தமிழக வரலாறே , கற்பனை கதை இல்லை..

நத்தகோகுல வருணனைகளைப் படித்துப் பாருங்கள்.. அப்படியே நமது வட்டாரத்திற்கு பொருந்தி வரும்.

திருப்பூவணத்துக் கடம்ப மரங்கள் எல்லாம் கூட அப்படி வடமொழி நூற்களில் அச்சுக் குலையயாமல் வருணிக்கப்படுகின்றன.

நான் இங்கு ஒன்றைக் கேட்கிறேன்..

எந்த வடமொழி நூலிலாவது, 'மதுரா' 'கோகுலம்' முதலியன வடநாட்டில் இருப்பனவாக எழுதப்பட்டுள்ளதா? இல்லையே..

அப்படி இருக்கும் போது, இவற்றை ஏன் வடநாட்டுக்குத் தள்ள வேண்டும்..

யமுனை ஒன்றுதான் இதுவரை கண்ணன் வரலாற்றை வடநாட்டுக்கு தள்ளிக் கொண்டிருந்ததுது.

அந்த இரகசியம் இன்று விடுபட்டு விட்டது.

தமிழக வைகை தான் யமுனை என்று தெளிவான பின்.

வேறு எதை வைத்து கண்ணன் வரலாற்றை வடநாட்டுக்கு தள்ள முடியும்?

தமிழகத்து வைகைக்கு 'யமுனை ' என்று பெயரிட்டவர்களும் தமிழர்களே..

பழந்தமிழர்கள் வடநாடு பரவிய போது, அங்கே இருந்த ஒரு பெரிய நதிக்கு யமுனை என்று பெயரிட்டார்கள். அதுவே யமுனை எனப்பட்டது..

வடநாட்டு யமுனா, தமிழகத்து வைகையைவிடச் சிறப்பாக, வளமாக இருந்ததால் 'யமுனா' என்றாலே அது வடநாட்டு யமுனாதான் என்ற நிலை ஏற்ட்டது..

யமுனையின் இரகசியம் இன்று வெளிப்பட்டு விட்டதால் எத்தனையோ வரலாற்றுக் கருத்துகள் இனி தமிழர் பக்கம் ஒதுங்கும். இந்த அதிசயத்தை இனித் தமிழகம் துய்க்கும், தமிழர்கள் நிச்சயமாக ஏற்றம் பெறுவர்..


கண்ணனை ஒரு கடவுளாக வணங்குவது வேறு, அவனை ஒரு பழந்தமிழ் அரசனாகக் கணக்கில் எடுத்துக் கொள்வது வேறு..

கண்ணன் எனும் ஆற்றல் வாய்ந்த தமிழக அரசனின் வரலாறு மிக பெரிய தமிழக வரலாறு.

இதை நம் இளைய சமுதாயத்திற்குக் கூற வேண்டியது கடமை நமக்கு உள்ளது.

இந்த வரலாறு தமிழர்களின் சொத்து.

இதை இழந்தால், தமிழர்களைப் போல் ஏமாளிகள் எருவம் இருக்க மாட்டார்கள்.

கடவுள் பக்தி இல்லாதவர்களும், தமிழக வரலாற்றை வெளிப்படுத்தலாம், பக்தியில் பரவவசபட்டுத் தான் கண்ணன் வரலாற்றை பேச வேண்டும் என்பதில்லை.

சுற்றுலாத் துறையினர் இங்கு விழித்துக் கொள்ள வேண்டும்..

மதுரையில் "இது தான் கண்ணன் பிறந்த ஊர். மதுரா என்பது இது தான்." என்று எழுதி வைக்க வேண்டும். உலக மக்களைத் தமிழகத்திற்குத் திருப்ப வேண்டும்.

தமிழகம் அப்போது ஒரு மெக்கா ஆக, ஒரு வாடிகன் ஆக ஆகும்.

திருப்பூவணத்தில், "இதுதான் கண்ணன் விளையாடிய கோகுலம்" என்று ஒரு விளம்பர பலகை எழுதி வைக்க வேண்டும், அப்போது அவ்வூரே செழுமையாகும்.

என்னினிய தமிழர்களின் வாழ்வு பூத்து குலுங்கும்.

கண்ணன் கையில் உள்ள புல்லாங்குழல், அதுவே தமிழகத்து இசைக் கருவி அல்லவா..

ஏழு சுரங்களை கண்டறிந்த இனம் தமிழினம் அல்லவா?

இப்படி எத்தனையோ கருத்துகளை அடுக்கி கொண்டே போகலாம்.

கண்ணன் தமிழன் என்றால் அவரை ஒட்டிய எத்தனையோ வரலாறுகள் உள்ளனவே.

அவை எல்லாம் தமிழர்களின் வரலாறுகள் தான். இதில் ஐயம் இல்லை.

இவை பற்றிய எனது விரிவான ஆய்வு பின்னர் வெளிவரும், அதுவரை பொறுத்தருள்வீர்...

29/09/2017

கல்விக்கு அதிபதியான சரஸ்வதிக்கு தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் தான் தனிக்கோவில் உள்ளது. இதன் வரலாற்றை விரிவாக பார்க்கலாம்...


ஆயக்கலைகள் அறுபத்தி நான்கையும், கற்றுணர்ந்த சரஸ்வதி ஒரு முறை தவம் செய்ய நினைத்தார். இதற்காக பூவுலகில் அமைதியும், அழகும், நிறைந்த கூத்தனூரை தேர்ந்தெடுத்தாள். அம்பாளே இங்கு தவம் புரிந்ததால் இந்த ஊர் ‘அம்பாள் புரி’ எனவும் அழைக்கப்படுகிறது.

கவிபாடும் திறன் வேண்டி கலைமகளை பூஜிக்க நினைத்தார் ஒட்டக்கூத்தர். கூத்தனூரில் பூந்தோட்டம் ஒன்றை அமைத்து தட்சிணாவாகினியாய் ஓடும் அரிசொல் மாநதியின் நீரால் அபிஷேகம் செய்து நாள்தோறும் அம்பிகையை வழிபட்டு வந்தார்.

ஒட்டக்கூத்தரின் தொண்டில் மகிழ்ந்த நாமகள் தன் வாய் மணமாம் தாம்பூலத்தை அவருக்கு கொடுத்து வரகவி ஆக்கினாள் என்பர். தனக்கு பேரருள் புரிந்த கூத்தனூர் சரஸ்வதியை ஆற்றுக்கரை சொற்கிழத்தி வாழிய என்று பரணி பாடியுள்ளார் ஒட்டக்கூத்தர்.

தலவரலாறு...

சத்தியலோகத்தில் ஒரு முறை சரஸ்வதிக்கும், பிரம்மனுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கல்விக்கு அரசியான தன்னால் தான் சத்தியலோகம் பெருமை அடைகிறது என்று சரஸ்வதியும், தன் படைப்புத்தொழிலால் தான் சத்தியலோகம் பெருமை அடைகிறது என்று பிரம்மனும் வாதிட்டனர். வாதம் முற்றி, ஒருவரையொருவர் சபித்துக்கொண்டனர்.

இதனால் பூலோகத்தில் சோழ நாட்டில் புண்ணிய கீர்த்தி, சோபனை என்ற தம்பதியினருக்கு பகுகாந்தன் என்ற பெயரில் மகனாகவும், சிரத்தை என்ற பெயரில் மகளாகவும் பிறந்தனர்.

அவர்களுக்கு திருமண வயது வந்ததும் பெற்றோர்கள் வரன் தேட தொடங்கினர். அப்போது இவர்கள் இருவருக்கும் தாங்கள் யார் என்பது நினைவுக்கு வந்தது. சகோதர நிலையில் உள்ள நீங்கள் திருமணம் செய்து கொண்டால் உலகம் பழிக்கும். இது இயலாத காரியம். பெற்றோருக்கு இந்த விஷயம் தெரிய வர அவர்கள் இந்த பிரச்சினைக்கு தீர்வு வேண்டி சிவபெருமானை பிரார்த்தனை செய்தனர். சிவபெருமான் அவர்கள் முன் தோன்றி சகோதர நிலையில் உள்ள நீங்கள் திருமணம் செய்து கொள்வது இயலாத காரியம் என்று கூறி, சரஸ்வதியிடம் நீ மட்டும் இங்கே தனியாக கோவில் கொண்டு பக்தர்களுக்கு கல்விச்செல்வத்தை வழங்குவாய் என்று கூறி அருள்பாலித்தார். அதன்படி சரஸ்வதி தேவி, கூத்தனூரில் தனியாக கோவில் கொண்டு, தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு கல்வி செல்வத்தை வாரி வழங்கி வருகிறார்.

சரஸ்வதி தேவியை தேடி சரஸ்வதி நதி இங்கே வந்தது. இரண்டும் இணைந்து குப்த கங்கையாக காட்சி அளிக்கிறது.

குழந்தைகளுக்கு கல்வி தோஷம் போக்கி ஞானப்பால் ஊட்ட, திருவுளம் கொண்ட சரஸ்வதி அமைதியே தவழும் வடிவம் கொண்டாள். வெள்ளை நிற ஆடை தரித்து, வெண் தாமரையில் பத்மாசனத்தில் வீற்றிருக்கிறாள். கீழ் வலது கையில் சின்முத்திரை, கீழே இடது கையில் புத்தகமும், வலது மேல் கரத்தில் அட்சர மாலையும், இடது மேல் கரத்தில் கலசமும் தாங்கி காட்சி தருகிறாள்.

ஜடாமுடியுடன் கருணை புரியும் விழிகளும், ஞானசஷஸ் என்ற மூன்றாவது திருக்கண்ணும், புன்னகை தவளும் திருவாயுமாக கிழக்கு முகமாக அருளாட்சி புரிகிறாள்.

சிவன் கோவிலில் மகா துர்க்கையும், பெருமாள் தலத்தில் மகாலட்சுமியும் தனிக்கோவில் கொண்டு, கூடவே சரஸ்வதியும் விளங்குவதால் இங்கு நவக்கிரகங்கள் இல்லை.

பூஜைகள், திருவிழாக்கள்...

கூத்தனூர் சரஸ்வதி கோவிலில் வசந்த ராத்திரியும், புரட்டாசி மாதத்தில் சாரதா நவராத்திரியும் சிறப்பாக கொண்டாடப்படும். சாரதா நவராத்திரி 12 நாட்களும், அடுத்த 10 நாட்கள் ஊஞ்சல் உற்சவமும் நடைபெறும். இந்த நாட்களில் சந்தனக்காப்பு, மஞ்சள் காப்பு, மலர் அலங்காரம் என பல்வேறு கோலங்களில் அம்பாள் காட்சி தருவாள். சரஸ்வதி பூஜை அன்று அம்பிகையின் பாதங்களில் பக்தர்கள் மலரிட்டு அர்ச்சனை செய்யலாம்.

விஜயதசமியன்று காலை ருத்ராபிஷேகம் நடைபெறும். இரவு அன்னவாகனத்தில் அம்பாள் வீதி உலா நடைபெறும். அன்று நூற்றுக்கணக்கான கார், வேன்களுக்கு ஆயுதபூஜை செய்வார்கள்.

அன்னைக்கு சிறப்பு அபிஷேகமும் நடக்கும். அதன்பிறகு விடையாற்றி விழாவும், 10 நாட்கள் ஊஞ்சல் உற்சவமும் நடைபெறும். அந்த நாட்களில் அம்பாளை ஊஞ்சலில் வைத்து ஒவ்வொரு நாளும் ஒரு அலங்காரம் செய்வர்.

சித்திரை மாதம் முதல் தேதியில் தொடங்கி 45 நாட்கள் லட்சார்ச்சனை நடைபெறும். இவை தவிர ஆடி, தை வெள்ளிக்கிழமைகளில் சந்தனக்காப்பு, மஞ்சள் காப்பு அலங்காரமும் உண்டு. மாதந்தோறும் கலைமகளுக்கு பவுர்ணமி அன்று மாலையில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகளும், மூல நட்சத்திரம் அன்று சிறப்பு அபிஷேகம் உண்டு.

கும்பாபிஷேகம் நடத்த ஆனி மாதம் மக நட்சத்திரத்தன்று ஸமவித்ஸரா அபிஷேகம் நடை பெறும்.

நவராத்திரி 10 நாட்களும் காலை, மாலை என 2 வேளைகளிலும் விநாயகரின் வீதி உலா நடைபெறும். இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ளது.

அம்பாள் கோவிலில் காலை, மாலை, அர்த்த ஜாமம் என 3 கால பூஜைகள் நடைபெறுகின்றன. பெருமாள், சிவன், கோவில்களில் காலை, மாலை என இருகால பூஜைகள் உண்டு. பிரம்மபுரீஸ்வரருக்கு மகா சிவராத்திரி அன்று விசேஷ அபிஷேக அலங்காரம் நடக்கும்.

அமைவிடம் :

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் சுமார் 22 கிலோ மீட்டர் தொலைவில் பூந்தோட்டம் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள பஸ் நிலையத்தில் இறங்கினால் 5 நிமிட நடைபயணத்தில் கோவிலை அடையலாம். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து காரைக்காலுக்கு பூந்தோட்டம் வழியாக செல்லும் பஸ்சிலும் வரலாம்.

திருவாரூரில் இருந்து மயிலாடுதுறையில் செல்லும் பஸ்சில் ஏறி 25 கிலோ மீட்டர் பயணித்தால் கோவிலை சென்று அடையலாம்...

ஆங்கில மொழியின் வரலாறு...


ஆங்கிலம் உலகில் உயர் செல்வாக்கும் வளர்ச்சியும் பெற்ற மொழியாக உள்ளது இன்று.

இம்மொழியை உலகில் 1.8 பில்லியன் மக்கள் அல்லது உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் பேசுகின்றனர்.

மொத்தம் 53 நாடுகளில் அரச அலுவல் மொழியாக இது உள்ளது.

அறிவியல், வணிகம், தொடர்பாடல் (ஊடகம்), அரசியல் என எல்லாத் துறைகளிலும் இம்மொழியின் தாக்கம் பெரிதாக உள்ளது.

ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்தில் வாழ்ந்த ஆங்கிலோ - சாக்சன்  என்ற சிறு மக்கள் குழுவின் மொழியான ஆங்கிலம் இன்று ஓர் உலக மொழியாக இருக்கிறது.

பழங்கால ஆங்கிலம் (400 -1100)
கிபி 5 ம் நூற்றாண்டளவில் பிரட்டனை மூன்று ஜெர்மன் குழுக்கள் (ஆங்கில்சு, சாக்சன், யூட்) இன்றைய ஜெர்மன் / டென்மார்க் நிலப்பரப்பில் இருந்து ஆக்கிரமித்தன.

இந்தக் குழுக்கள் தம்மிடையே புரிந்துக் கொள்ளக் கூடிய ஒத்த மொழிகளைப் பேசின.

அப்போது அங்கு பேசப்பட்டு வந்த கெல்டிக் மொழிக் குழுக்கள் வடக்கேயும் மேற்கேயும் தள்ளப்பட்டன. "ஆங்கிலோ இனத்தவர்கள் “ஆங்லோ-லாந்து” எனும் பகுதியில் இருந்தே வந்தனர்.
இவர்கள் பேசிய மொழி "இங்கிலிசுக்" எனும் ஜெர்மன்மனிய மொழிக் குடும்பத்து மொழியாகும்.

இப்பெயர்களே இன்று மருவி இங்கிலாந்து - இங்கிலிசு என்றானது."இக்காலத்திப் பேசப்பட்ட ஆங்கிலம் பழம் ஆங்கிலம் எனப்படுகிறது.

ஏழாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சில ஆக்கங்கள் மட்டுமே இப்போது கிடைக்கின்றன.

தற்கால ஆங்கிலத்தின் பெரிதும் புழங்கும் 50 விழுக்காடு சொற்களுக்கு பழ ஆங்கில வேர்கள் உண்டு.

இடைக்கால ஆங்கிலம் (1100 - 1500)
பிரான்சின் நோர்மண்டி சிற்றரசின் மன்னன் வில்லியம் இங்கிலாந்தை 1066 கைப்பெற்றினான். இந்த புதிய ஆக்கிரமிப்பாளர்கள் நோர்மன் எனப்பட்டனர்.

இவர்கள் ஒரு வகை பிரான்சிய மொழியைப் பேசினர். அரச அவையிலும், வணிகத்திலும் பிரான்சிய மொழியே செல்வாக்கு பெற்றது. ஆட்சித் தொடர்புடைய உயர் பிரிவு மக்கள் பிரான்சிய மொழியையும், பொது மக்கள் அல்லது கீழ்ப் பிரிவு மக்கள் ஆங்கிலத்தையும் பேசினர்.

இக்காலத்தில் பல பிரான்சிய சொற்கள் ஆங்கிலத்துடன் கலந்தன.

இடைக்கால ஆங்கிலத்தில் எழுதப்பட்ட முக்கிய இலக்கியம் 'த கான்ட்டர்பர்ரி கதைகள் '(The Canterbury Tales) ஆகும். நோர்மன் ஆக்கிரமிப்புக்கு பின்பு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட முதல் அரச ஆவணம் 'ப்ரோவிஷன்ஸ் ஆஃப் ஆக்சுபோர்டு' (1258) (Provisions of Oxford ) ஆகும்.

1362 ஆம் ஆண்டு எட்வர்ட்-3 என்னும் அரசன் முதன் முதலில் ஆங்கிலத்தில் நாடுளுமன்றத்தில் பேசினான். ஆங்கிலத்தின் வளர்ச்சியில் இது ஒரு முக்கிய திருப்புமுனை ஆகும்.

முன் தற்கால ஆங்கிலம் (1500 - 1800) 15 நூற்றாண்டின் இறுதியில் பெரும் உயிரெழுத்து மாற்றம் நிகழ்ந்தது.

முதல் ஆங்கில அகராதி 1604 ஆண்டில் வெளியிடப்பட்டது.

இக்காலப்பகுதிக்கு சற்று முன்பு கண்டுபிடிக்கப்பட்ட அச்சுத் தொழில் நுட்பத்தால் (1476) பல்வேறு நூல்கள் ஆங்கிலத்தில் வெளிவர தொடங்கின.

பெரும்பான்மையான பதிப்பகங்கள் இருந்த இலண்டனின் வட்டார வழக்கு, தரப்படுத்தப்பட்ட ஆங்கிலமாக மருவியது.

இக்காலத்தில் வாழ்ந்த ஷேக்ஸ்பியர் (1564-1616) ஆங்கிலத்தின் 30 மேற்பட்ட நாடகங்களை இயற்றினார். இவை ஆங்கிலத்தின் உயர்ந்த இலக்கியமாக இன்றுவரை கருதப்படுகிறது.

1702 முதல் ஆங்கில நாளிதழ் 'த டெய்லி கூரான் '(The Daily Courant) இலண்டனில் வெளியிடப்பட்டது.

பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் 1768 - 1771 முதலில் வெளியிடப்பட்டது.

தற்கால ஆங்கிலம் (1800 - 2010)
1800களில் தொழிற்புரட்சி இடம் பெற்றது. பிரிட்டன் உலகின் பெரும்பாகத்தை தனது ஆளுமைக்குள் உட்படுத்தியது.

அரசியல் பொருளாதார ஆளுமை இங்கிலாந்தின் ஒரு சிறு மக்கள் குழுவின் மொழியை உலக மொழியாக மாறியது.

பல்லாயிரக்கணக்கான அறிவியல் தொழில்நுட்ப சொற்கள் ஆங்கிலத்தில் உருவாகின.

1922 பிபிசி ஒலிபரப்புச்சேவை தொடங்கி, ஆங்கிலத்தை பொதுமக்களிடம் எடுத்துசெல்ல உதவியது.

மேலும் ஆங்கிலேயர் ஆட்சி செய்த நாடுகளில் மட்டுமன்றி வர்த்தக, இராணுவ மற்றும் பல்வேறு தொடர்புகளை வைத்திருந்த நாடுகளில் பேசப்பட்ட வெவ்வேறு மொழிகளில் இருந்தும் பல சொற்களை ஆங்கிலம் உள்வாங்கிக் கொண்டது.

ஒரு கணிப்பின் படி 146 மொழிகளில் இருந்து சொற்களை ஆங்கிலம் தம்மொழிக்குள் உள்வாங்கிக்கொண்டுள்ளது. தமிழில் இருந்தும் பலசொற்களை ஆங்கிலம் தம்மொழிக்குள் உள்வாங்கிக்கொண்டுள்ளது.

வானொலி, தொலைகாட்சி, இயங்குபடம், வரைகதை, இணையம் என பல்வேறு ஊடக தொழில்நுட்பங்கள் ஆங்கில உலகிலேயே முதலில் கண்டு பிடிக்கப்பட்டன.

இவற்றின் ஊடாக ஆங்கிலம் தன்னை மேலும் வேரூன்றிக் கொண்டது..

எ.கா - இணையம் இயங்கும் பல்வேறு நெறிமுறைகள் (Protocols), வலைத்தளங்கள் கட்டமைக்கப்படும் குறியீட்டு மொழிகள் (markup languagues), நிரல் மொழிகள் ஆகியவை ஆங்கிலத்திலேயே உள்ளன.

வரலாற்றில் வெவ்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு மொழிகள் அறிவியலின் மொழியாக இருந்து வந்துள்ளன.

தொடக்கத்தில் இலத்தின், பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளும் பின்னர் ஆங்கிலமும் ரஷிய மொழியும் அறிவியல் மொழிகளாக இருந்தன.

இன்று ஆங்கிலமே தனிப் பெரும் அறிவியல் மொழியாக இருக்கின்றது.

உலக அரசியலும், வணிகமும் இன்று பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே நடைபெறுகிறது...

பழனிசாமியிடம் சேகுவேராவை காண்கிறேன்... பஸ் ஸ்டாண்ட் ஊழல் புகழ் அமைச்சர் வேலுமணி...


உங்களை எல்லாம் தினகரன் புலிகேசி என்று சொன்னதில் எந்த தவறும் இல்லை...

பாஜக மோடியின் வளர்ச்சி சாதனை...


குருஸ்திஸ்களும் தமிழர்களும்...


யார் இவர்கள்?, இவர்கள் தமிழர்களின் சொந்தக்காரர்கள்...

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் நாட்டில் இருந்து விரிவடைந்த தமிழர்களில் தேசமான நாகரீகமான, சுமேரிய நாகரீகத்தின் சொந்தக்காரர்கள்.


அவர்கள் மொழியில் தமிழ் இன்றும் வாழ்கிறது...