ஆந்திராவில் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டுகிறவர்களுக்கு பெட்ரோல் வழங்கக்கூடாது என்ற புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த விதிமுறை நேற்று அமலுக்கு வந்தது.
இந்த உத்தரவை அமல்படுத்துவதில் மாநிலத்தில் உள்ள பெட்ரோல் பங்க் டீலர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
இந்த புதிய உத்தரவினால் மாநிலம் முழுவதும் இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இருசக்கர வாகன விபத்துகளை குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாலை பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு புதிய சாதனங்கள் வாங்குவதற்கு முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, ரூ.10 கோடி அனுமதித்துள்ளார்.
கடமைகளை சரி வர செய்யாத அரசு அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய தயங்க மாட்டேன் என அவர் எச்சரித்துள்ளார். இருசக்கர வாகனங்களை ஓட்டுகிறவர்கள் ஹெல்மெட் அணியவும், 4 சக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் சீட் பெல்ட் அணியவும் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.