20/09/2017

நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த தயாராகிறது தமிழக சட்டசபை...


நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் அனைத்தும், தமிழக சட்டசபை வளாகத்தில் நடைபெற்று வருகிறது. நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்துவதற்கான அறிவிப்புக்கள் எந்த நேரத்திலும் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

செப்.,21 ம் தேதி தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளதாகவும், அன்றைய தினம் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

கவர்னர் வித்யாசாகர் ராவ் சென்னை வந்ததும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்பட்டது.

இந்நிலையில் எப்போது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த உத்தரவிட்டாலும் உடனடியாக நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் சட்டசபை வளாகத்தில் செய்யப்பட்டு வருகிறது.

சட்டசபை வளாகத்தில் ஒலிப்பெருக்கி சோதனை உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.