20/09/2017

ஆரியத்தைத் தழுவியதால் தான் , அதாவது சமஸ்கிருதத்தை தமிழில் கலக்க அனுமதித்ததால் தான் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற நீங்கள் பேசுகின்ற திராவிட மொழிகள் பிறந்தன...


ஆரியத்தை ஏற்றுக்கொண்டதால் தான் அம்மொழியினர் தங்களைத் திராவிடர்களாச் சொல்லிக் கொள்வதும் இல்லை..

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஆரியத்தை எதிர்துப் போராடியது தமிழினம் ஒன்று மட்டுமே.

தமிழர்கள் எந்தக் காலதிலும் தங்களைத் திராவிடர்கள் என்று சொல்லிக் கொண்டதே கிடையாது.

அப்படியிருக்கும் போது பெரியார் தமிழர்கள் தலையில் மிளகாய் அரைத்தார்.

தமிழர்களை என்றைக்குமே திராவிடர் என்ற மாயை உருவாக்கி ஆரியர்களிடம் அடிமையாக வைக்கவே திராவிடம், திராவிடர் என்ற நச்சு விடத்தை தமிழர்களிடம் விதைத்தார்..

இதனை தமிழர்கள் உணரத் தொடங்கியதால் திராவிடர்களுக்கு உச்சி முதல் உள்ளங்கால் வரை எரிகிறது.

சிலரை சில நாள் ஏமற்றலாம்,
பலரைப் பலநாள் ஏமாற்றலாம்.

ஆனால் எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது என்பதை திராவிடர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இல்லையேல் தமிழர்கள் நாங்களே புரிய வைப்போம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.