20/09/2017

கியூபாவின் மருத்துவ சாதனை சில...



தனியார் பள்ளி, கல்லூரிகளே இல்லாத நாடு கியூபா.

கிடத்தட்ட 100% கல்வியறிவை பெற்ற நாடு கியூபா.

தனியார் மருத்துவமனைகளே இல்லாத நாடு கியூபா.

இலவச மருத்துவ வசதி கொண்ட நாடு கியூபா.

ஏழை மாணவர்கள் மற்றும் வெளிநாட்டு மாணவர்கள் அதிகம் பயிலும் நாடு கியூபா.

உலக வங்கியின் கணிப்பில் கல்விக்கு செய்யும் முதலீட்டில் உலக நாடுகள் அனைத்திலும் கியூபா முதலிடம்.

நாட்டின் மொத்த ஜிடிபியில் 13% த்தை சுகரத்திர்காக செலவிடும் நாடு கியூபா . இந்த பட்டியலில் டென்மார்க் 8.7%, அமெரிக்கா 5.4%, இந்தியா 2.5%.

உலகின் மிகச் சிறந்த மருத்துவ சேவை வழங்கும் நாடு கியூபா என பிபிசி 2006-இல் அறிவித்தது.

மகப்பேற்றின் போது தாய்மார்களின் இறப்பு விகிதம் உலகிலேயே மிகக்குறைவு கியூபாவில் தான்.

உலகிலேயே எச்ஐவி பாதித்த நோயாளிகள் குறைவாக இருப்பதும் கியூபாவில் தான்.

வளமான ஜி8 நாடுகளை அதிகமான மருத்துவர்களை உருவாக்கும் தேசம் கியூபா.

உலகில் குறைவான ஊதியத்தில் மனிதநேய அடிப்படையில் பணி புரியும் மருத்துவர்கள் வாழும் நாடு கியூபா.

1958-ல் கியூபாவின் 1,050 பேருக்கு ஒரு மருத்துவர். அதே 2009-ஆம் ஆண்டில் ஒவ்வொரு 150 பேருக்கும் ஒரு மருத்துவர். மேற்கு ஐரோப்பாவில் மருத்துவர் விகிதம் 330:1 ஆகவும், அமெரிக்காவில் இந்த விகிதம் 417:1 ஆகவும் இந்தியா 2000:1 ஆகவும் உள்ளது.

1984-ஆம் ஆண்டில் பிடல் காஸ்ட்ரோ ஆற்றிய ஓர் உரையில் 2000-ஆம் ஆண்டில் கியூபா 75,000 மருத்துவர்களை உருவாக்கும் என்று கூறியிருந்தார். 2009-ல் மொத்தம் 74,880 மருத்துவர்கள் உருவாகி இருந்தனர்.

1961-2008-க்கு இடைப்பட்ட காலத்தில் 1,85,000 மருத்துவ நிபுணர்களை உலகின் 103 நாடுகளில் சேவை செய்யக் கியூபா அனுப்பியுள்ளது.

இன்னும் பல..

ஆனால் .. உலகம் கியூபாவிற்கு கொடுத்தது பொருளாதார தடையை..

உலக ரவுடி அமேரிக்கா உலக நாடுகளுக்கு கொடுத்தது அழிவை ..

ஆனால் கியூபா உலகிற்கு கொடுத்தது மனித நேயத்தை..

அனால் அமெரிக்கக் உள்ளிட்ட அதிகார வர்க்கங்களின் பார்வையில் கியூபா தடை செய்யப்பட வேண்டிய நாடாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.