29/11/2017

ஜி.எஸ்.டி.வரிக்கு எதிர்ப்பு நெசவாளர்கள் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம்...


வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் நெசவு தொழில் முக்கிய பங்குபெற்றுள்ளது, இந்த நிலையில் நெசவு தொழிலுக்கும் அதனை சார்ந்துள்ள மூலப்பொருட்களான நூல், சாயமருந்து, நெசவாளர் கூலி, லுங்கி என தனித்தனியே ஜி.எஸ்.டி.வரி விதிப்பு மிகவும் கண்டிக்கத்தக்கது எனவும் நலிவடைந்துள்ள நெசவு தொழிலுக்கு மேலும் மேலும் தனி தனியே வரிவிதிப்பு  மிகவும் ஆபத்தானது எனவும் அதனால் நெசவு தொழில் மீது தனி.தனியே சுமத்தப்பட்டுள்ள ஜி.எஸ்.டி வரியை முழுமையாக நீக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தும் தற்போதைய நிலைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்து குடியாத்தம் பகுதியில் உள்ள நெசவாளர்கள் ஆண்கள், பெண்கள் என குடும்பமாக ஒன்றுகூடி குடியாத்தம் தொலைபேசி அலுவலகம் முன்னர் சுமார் 300, க்கும் மேற்ப்பட்டோர் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் ஆர்ப்பாட்டத்திற்க்கு  கட்சி பாகுபாடு இன்றி  சில  அரசியல் கட்சியினரும் கலந்து கொண்டனர், ஆர்ப்பாட்டத்தின் போது  மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரிக்கு  எதிர்ப்பு  தெரிவித்து  கண்டன  கோஷ்ம் போட்டனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.