31/07/2018

வரலாற்றை புரட்டிப் போட்ட சம்பவம் - 2...


இந்தியாவே அதிர்ந்த தகவலை அம்பேத்கர் சொன்னார் என்று போன பதிவில் கூறியிருந்தேன்..

அதன் தொடராக இதை படியுங்கள்.

அவர் கூறிய தகவல்..

இந்திய இராணுவத்தில் பணிபுரிந்து வந்த தலித்துகள்  கொஞ்சம் கொஞ்சமாக பணியில் இருந்து வெவ்வேறு காரணங்களை கூறி வெளியேற்றப்பட்டு விட்டார்கள்.

என்ற பெரிய அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.

இந்திய இராணுவத்திலும்  பார்பனியம் ஊடுருவி உள்ளதாக அறிவித்தார்.

 பொதுவாகவே இராணுவ வீரர்கள் என்றால் மரியாதை அதிகம். அதே போன்று இராணுவ வீரர் தப்பு என்றால் பயம் இல்லாமல் எதிர்த்து விடுவார்.

சொந்த ஊருக்கு வரும் போது தீண்டாமை கொடுமை நடந்தால் எதிர்த்து பேசும் முதல் ஆளாக அவர் இருப்பார்.

மற்றும் இராணுவ பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களாகவும் பல தலித்துகள் இருந்துள்ளனர்.

இராணுவ முகாம்களில் கட்டாய கல்வியும் அப்போது இருந்தது.

இப்படியாக தமது மகனை இராணுவ வீரர்கள் பள்ளியில் சேர்ப்பதும் வீரமாக எதிர்ப்பதையும் விட்டுவிட்டால் நம்ம என்ன செய்வது என்ற பதபதைப்புத்தான் பிரிட்டீஷ் ஆட்சியாளனிடம் கூறி தீண்டதகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்ட மக்களை பதவியில் இருந்து நீக்கவும் புதிதாக இராணுவத்தில் சேர்பவர்களை தலித்துகள் அல்லாத பிற உயர்ந்த குடிகளை எடுக்கவேண்டும் என கேட்டது பார்பன கும்பல்.

இனி உத்வேகம் மூட்டும் தொனியில் அம்பேத்கர் பேசியதை அப்படியே தருகிறேன்.

மும்முனை சுத்திகரிப்பு வேள்வியில் நம்மை நாம் ஈடுபடுத்தி கொண்டாலொழிய எத்தகைய முன்னேற்றத்தையும் நாம் எய்த முடியாது.

நமது செயல்பாட்டில் பொதுப்பாங்கை மேம்படுத்தி கொள்ளவேண்டும் நமது உச்சரிப்புகளுக்கு உயிர்த் துடிப்பு அளிக்க வேண்டும்.

நமது எண்ணங்களுக்கும் சிந்தனைகளுக்கும் உரமூட்ட வேண்டும்.

அழுகிய பிணத்தை திண்ணமாட்டோம் என உறுதி பூணும்படி உங்களை கேட்டுக்கொள்கிறேன்.

உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற பாசி படிந்த கருத்துக்களை நம் மனதில் இருந்து அறவே அகற்ற இதுவே தக்க தருணமாகும்.

வீசியெறிந்த அப்பத் துண்டுகளை இனி தின்ன மாட்டோம் என்று எத்தகைய தயக்கமும் இன்றி உறுதி கூறுங்கள்.
நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ள முடியும் என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும்.

நாம் தாழ்த்தப்பட்ட மக்கள் இல்லை
நம்மை நாமே உயர்த்திக் கொள்ள முடியும் என்பதை மறந்து விடாதீர்கள்.

அரசு பணிகளிலும் கல்வியிலும் நாம் போராடியே பெற்றாக வேண்டும் எனவும் இந்த மஹர் நகரத்து குளம் பிரச்சினையை பற்றி பேசும் போது..

சில ரொட்டிதுண்டுக்கு உங்கள் மனித உரிமையை விற்பது முற்றிலும் அவமானமானது என
சுட்டிக்காட்டினார் .

கொத்தடிமைகளாக நீங்க இருத்தல் கூடாது நிலப்பிரபுகளிடம் தான் வேளாண்மை செய்ய வேண்டும் என அவசியமில்லை.

கேட்பாரற்று கிடக்கும் காட்டு நிலங்களை வேளாண்மை செய்ய எடுத்துக் கொள்ளுங்கள்.

யாருக்கும் கை கட்டி நிற்காதீர்கள்
உங்களை சக மனிதனாக மதிப்பவனை நீங்கள் மதியுங்கள் என்று கூறிவிட்டு கடைசியில்.

உள்ளத்தை உருக்கும் தொனியில் இப்படி கூறுகிறார்.

தங்களை விட தங்கள் குழந்தைகள் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்று விரும்பாத பெற்றோர்கள் இருப்பார்களானால்.

அவர்களுக்கும் மிருகங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

பின்னர்  மாநாட்டில் சில தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அதோடு பிரச்சினை முடியவில்லை.

பிரச்சினை உள்ள குளத்தில் நானே முதல் நீர் குடித்து துவக்கி வைக்கிறேன் என்று சாரை சாரையாக மக்களை அழைத்துக்கொண்டு அந்த குளத்திற்கு வந்துவிட்டார்.

பின்னர் தான் பெரிய சூழ்ச்சி காத்திருந்தது இவர்களுக்கு பின்னர் நடக்க இருக்கும் கொடூரம் தெரியாமல் அம்பேத்கரை பின்தொடந்து சென்றது மக்கள் கூட்டம்...

பேசுவோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.