31/07/2018

வரலாற்றைப் புரட்டிப் போட்ட சம்பவம் - 3...


பாபா சாகேப் அம்பேத்கர் தீண்டாமைக்கு எதிராக மிகப்பெரிய அளவில் நடத்திய மாநாடு சம்பந்தமாக நாம் போன இரண்டு பாகத்தில் படித்தோம்.

அதன் தொடராக இதை படியுங்கள்.

அம்பேத்கர் தமது தோழர்களோடு மஹத்தில் உள்ள குளத்தில் தண்ணீர் குடித்தார் ஒதுக்கப்பட்டவர்கள் என்றழைக்கப்பட்ட அத்துனை நபர்களும் அவரை பின்தொடர்ந்து தாகம் தீர தண்ணீர் அருந்தினர்.

இதன் மூலம் நாங்களும் மனிதர்கள் தான் எங்களுக்கும் இங்கு தண்ணீர்  குடிக்க உரிமை உள்ளது என்று நிலைநாட்டினர்.. எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்த சாதியவாதிகள்.

இப்போது ஒரு பிரச்சினையை கிளப்பினர்.

தீண்டதகாதவர்கள் நம்மை தாண்டி  குளத்தில் தண்ணீர் குடித்து அசுத்தப்படுத்திவிட்டனர்

அடுத்து கும்பலாக சூத்திரர்கள் எல்லோரும் வீரேஸ்வர் புனித கோவிலுக்குள் நுழைய திட்டம் தீட்டி உள்ளனர் என்று உள்ளூர் மக்கள் மத்தியில் வதந்தியை பரப்பி விட்டனர்.

நமது இந்து மதம் அபாயத்தில் உள்ளது.

அப்படி நமது கோவிலுக்குள் இவர்கள் வந்தால் தெய்வம் தீட்டுப்பட்டுவிடும்.

(அக்காலத்தில் பேஷ்வா சட்டம் என்று அந்த ஊர் பார்பனர்கள் ஒரு சட்டத்தை வைத்து இருந்துள்ளனர்.

அது என்னவென்றால் பார்பனர்கள் தெருவில் நடமாட ஒரு நேரத்தை வைத்துள்ளனர்.

அந்த நேரத்தில் சூத்திரர்கள் யாரும் அந்த தெருவில் வரக்கூடாது மீறி வரவேண்டும் என நிற்பந்தம் ஏற்பட்டால் பானைகளை கழுத்தில் தொங்கப் போட்டு கொண்டு தான் செல்ல வேண்டும்).

இப்படி இருந்த அக்ரஹாரத்தில் சாரை சாரையாக குளத்தை நோக்கி மக்கள் செல்வது சரியோ.

 உடனடியாக ஏதாவது செய்தாக வேண்டும் இல்லையென்றால் சூத்திரர்களுக்கு பயம் அற்றுப் போய் விடும் என்று ஊர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிளம்பியது அப்பாவி இளைஞர்கள்
கைகளில் கோடாலியும் மூங்கிற்கம்புமாக.

தெரு ஓரங்களில்  ஆங்காங்கே கும்பல்கள் காத்துக்கொண்டு இருந்தது ஆயுதங்களுடன்.

மாநாடு முடித்த மக்கள் பிரிந்து தமது ஊர்களுக்கு மூட்டை முடிச்சுகளுடன் கால்நடை பிரயாணமாக கிளம்பி கொண்டு உள்ளனர்.

மாநாட்டிற்கு வருகை தந்த பெரும் பிரதிநிதிகள் சென்றுவிட்டனர் என்று உறுதி செய்துக்கொண்ட ரவுடி கும்பல்கள்.

முதலில் தூரத்தில் இருந்து  கால்நடையாக வந்துள்ள மக்கள் பொழுது சாய்ந்ததும் கிளம்பலாம் அதுவரை உறங்குவோம் என்று தூங்கி கொண்டு இருந்தவர்களை தாக்கியது அவர்களுடைய உணவுகளை கீழே கொட்டி துவம்சம் செய்து அட்டூழியம் செய்தது.

மாநாட்டு திடலில் இருந்து கதறும் சப்தத்தை கண்ட மக்கள் பீதியுடன் ஓடி சென்றார்கள் எல்லாவற்றையும் ஓடிச்சென்று தாக்கியது கும்பல்.

கூச்சல் குழப்பம் சப்தம் மரண ஓலம் என்று புரிந்துக்கொள்ளமுடியாத நிலையில் உயிரை பிடித்துக்கொண்டு ஓடியது மக்கள் கூட்டம் .

தெருவில் யார் ஓடினாலும் கால்கள் வெட்டப்பட்டது இதனால் மக்கள் அங்கேயுள்ள வீடுகளில் தஞ்சம் புகுந்தனர்.

வரலாற்றில் தெளிவாக உள்ளது இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த மக்கள் அங்குள்ள முஸ்லீம்கள்.

இதற்கு ஆதாரம்...

(அம்பேத்கர் பேச்சும் எழுத்தும்  தொகுதி 35
அம்பேத்கர் கைப்பட எழுதிய நூல்
பாவை பிரிண்ட்
சென்னை 14 பக்கம் 12 . )

சில மக்கள் சென்றுக்கொண்டு இருந்த அம்பேத்கரை போய் இரத்தம் வடிய சந்தித்தனர்.

அவர் கூறுகையில் பிரச்சினை செய்வது உள்ளூர் மக்கள் தான் அவர்களை முதலில் கட்டுப்படுத்துங்கள்.

என் மக்களை நான் சமாதானம் செய்கிறேன் என்று உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்குவிரைந்து செல்கிறார்...

மாநாட்டு திடலுக்கு வரும் அம்பேத்கர் வாகனத்தை பார்த்த கும்பல் ஓடி வருகிறது வாகனத்தின் மீது கல் வீச்சு நடக்கிறது.

அமைதியாக கீழே இறங்கி அம்பேத்கர் கூறுகிறார்.

எங்களுக்கு உங்கள் கோவிலுக்குள் நுழைவது சம்பந்தமாக எந்த திட்டமும் இல்லை இது உறுதி என்று உரக்க சப்தமாக கூறுகிறார். ரவுடி கும்பல் அமைதியாகிறது.

அம்பேத்கர் கூடவே காவலர்கள் நிற்பதை கவனித்த கூட்டம் வெளியூரில் இருந்து வந்த அப்பாவி மக்களின் மீது தாக்குதல் நடத்த கிளம்பியது.

அம்பேத்கர் செல்லும் வழியில் கிட்டத்தட்ட  20 க்கும் மேற்பட்ட தலித்துகள் தாக்கப்பட்டு கால்களை இழந்தும் கைகளை இழந்தும் கண்களை இழந்தும் வேதனை தாளாமல் அழுது புலம்பி கொண்டு இருந்ததை கண்டார்.

அந்த மக்கள் அம்பேத்கரை நோக்கி கூறிய ஒரு வார்த்தை..

ஆழம் தெரியாமல் எங்களை கால விட வைத்துவிட்டீர்களே..

பார்தீர்களா எங்கள் நிலையை என்று ஒப்பாரி வைத்தனர்..

இதையெல்லாம் கவனித்த தலித் இளைஞர்கள் கோபம் கொப்பளிக்க கிட்டத்தட்ட  100 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பதில் தாக்குதல் கொடுக்க தயாராக உள்ளனர்..

என்ற தகவல் அம்பேத்கருக்கு தெரிய வருகிறது.

இந்த நிலையில் அம்பேத்கர் என்ன முடிவெடுத்தார்.

பேசுவோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.