31/07/2018

திமுக கருணாநிதியின் இதயத்தை பார்த்து வியந்த லண்டன் மருத்துவர்கள்...


திமுக தலைவர் கருணாநிதி முதுமை காரணமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் இதயம் சீராக இயங்கி வருகிறது. 95 வயதிலும் அவரது இதயம் சீராக இயங்கி வருவது மருத்துவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் திமுக தலைவர் கருணாநிதிக்கு காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து மருத்துவர்கள் வீட்டுக்கு வந்து பார்த்து, அவருக்கு சிறுநீர் தொற்று ஏற்பட்டதனால் காய்ச்சல் ஏற்பட்டதாக கண்டறிந்து அதற்குறிய சிகிச்சை அளித்தனர்.

முதுமை காரணமாக கருணநிதியின் உடல்நிலை சிகிச்சையினை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை. அவரது நினைவு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே இருந்துள்ளது. இதனையடுத்து லண்டனில் உள்ள நிபுணர்களுடன் காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கருணாநிதியின் மருத்துவ ஆவணங்களைக் காட்டி கருத்து கேட்டுள்ளனர். அதில் லண்டன் மருத்துவர்கள் 95 வயதிலும் கருணாநிதியின் இதயம் சீராக இயங்கிக் கொண்டிருப்பதை ஆச்சரியத்துடன் குறிப்பிட்டு வியப்படைந்துள்ளார்கள்.

நேற்று முன்தினம் கருணாநிதியின் இரத்த அழுத்தம் குறைந்த போது மருத்தவர்கள் ஹெவி டோஸ் மருந்து கொடுத்து அவரது இரத்த அழுத்தத்தை சீராக்கினர். பொதுவாக அந்த மருந்து கொடுத்தால் சீரான நிலைக்கு வர 2 மணி நேரமாவது ஆகும். ஆனால் கருணாநிதிக்கு 45 நிமிடங்களிலேயே இரத்த அழுத்தம் சீரான நிலைக்கு வந்ததை பார்த்து மருத்துவர்கள் ஆச்சரியப்பட்டுள்ளனர். அவருக்கு வில் பவர் அதிகம் என பேசிக்கொண்டனர்.

நன்றி .. நமது நியூஸ்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.