காதல் திருவிழா...
இதில் எனக்கு பல முரண்பாடுகள் இருந்தாலும் பகிரி குழுமத்தில் காதல் ரசம் சொட்ட பண்டைய காலத்தில் உள்ள கதையை பற்றி நண்பர்கள் பேசிக் கொண்டு இருந்தனர்.
அப்போது தான் நியாபகம் வந்தது.
இந்திர விழா
காமன் விழா என்று
கலித்தொகை
மணிமேகலை போன்ற சங்க இலக்கியங்கள் கூறுகின்றது.
இதை பற்றி பார்போம்...
தொடித்தோட் செம்பியன் என்பவன் காதல் திருவிழாவை காதல் திங்கள் விழாவாக இருபத்தெட்டு நாட்கள் கொண்டாடினான் என்று சங்க இலக்கியம் கூறுகிறது
இது நடந்தது காவிரிபூம்பட்டிணம்..
தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன் என்றவனும் இதை கொண்டாடியதாக வரலாறு உண்டு.
கொண்டாடிய அவ்விழாவைப் பற்றி இளங்கோ அடிகள், 'இப்படி கூறுகிறார்..
வெள்ளிப் பெருமலையின் வடபுறத்தில், மது ஒழுகும் மலர்களை உடைய பூம்பொழிலில், தமது காதலியுடன உரையாடினான் என்று குறிப்பிடுகின்றார்.
அவ்விழா, இருபத்தெட்டு நாள் 'நாளேழ் நாளினு நன்கறிந்தீர் என'க் குறிப்படுவர்.
அவ்விழா விருந்தாட்டு விழா என்றும் குறிப்பிடப்படுகிறது.
ஆகையால் அதனை ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விழா என்றும் இதன் மூலம் கருத்து வருகிறது.
தமது கணவர்களுடன் தமது பெண்கள் வெளி முற்றத்தில் இளநிலாவை ரசித்து தமது கணவருடன் (காதலனுடன்) பேசிக் கொண்டு இருப்பதை தான் இது குறிக்கிறது.
காதல் விழாவின் போது நடைபெற்ற ஏற்பாடுகளை மணிமேகலை பட்டியலிட்டு காட்டுகிறது.
காதலர்கள் கூடிக் களிக்கும் பந்தல்களில் மணற் பரப்புங்கள், ஊரம்பலங்களை மரங்களினால் மூடி நிழல் பரப்புங்கள், விழா அரங்கங்களில் இன்பம் பொங்கும் நல்லுரை ஆற்றுங்கள், உரையாற்றும் வல்லமை கொண்டோரெல்லாம் உரையாற்றுங்கள்,
காதலர்களுக்கு விளக்கிக் கூறுங்கள், கருத்துகளுக்குக் கருத்துகளை எடுத்துக் கூறி வாதிடுங்கள், வாதத்தை வாதத்தால் வாதிட்டு வாதத்தைத் தீர்த்து வையுங்கள், பகைவர்களைக் கண்டால் அவர்களுடன் பகையும் பூசலும் கொள்ளாதீர்கள்,
அவர் இருக்கும் இடத்தை விட்டு அகன்று போய்விடுங்கள், வெண்மையான மணற் குன்றுகளில், மலர்ச் சோலைகளில், குளிர்ந்த மணலை உடைய ஆற்றங் கரையில், மரம் தாழ்ந்து நிழல் செய்திருக்கும் நீர்த்துறையில் கூடும் மக்கள் அனைவரும் தம்முள் பேதம் இன்றி ஒற்றுமையாகச் சேர்ந்து இருப்பதற்கு வேண்டிய காவல் ஏற்பாடுகளைச் செய்யுங்கள் என்று செம்பியன் ஆணை பிறப்பிக்கிறான்
இதில் இருந்து இத்திருவிழாவிற்கு இருந்த மதிப்பும் ஏற்பாடுகளும் தெரியவருகின்றன.
விழாவிற்குச் செல்லும் காதலர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்ட இடத்திற்குப் பொதுப்பெயராக, "மூதூர்ப் பொழில்" என்று பெயரிடப் பட்டிருந்தது. அவ்விடத்திற்கு, "இளவந்திகை" என்ற பெயரும் உண்டு.
இப்படிப்பட்ட காதல் ஆண்டை தான் நம் தமிழ் மக்கள் கொண்டாடியுள்ளனர்.
இப்போது ஒருத்தன் பிப்ரவரி 14 தேதி ஒன்றாக சுற்றி திரியும் காதலர்களை கண்டிக்கும் விதமாக பேசி வருவதை நாம் அறிவோம்..
அந்த குரூப் உங்கள் மத்தியில் வந்தால் ஏண்டா தமிழர்களுடைய கலாச்சாரத்தில் இது உள்ளது மூடிகொண்டு கிளம்பு என கூறிவிடவும்..
மீறினால் நீ ஆண்டி தமிழ் கலாச்சாரம் என கூறிவிடவும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.