அது என்ன என்பதை அறியாதவர்களுக்காக .....
Tunguska event...
1908 ஆம் ஆண்டு ஜூன் 30 தேதி .. சைபிரியாவின் ஒரு தொலைவான காட்டு பகுதி அது. அங்கே tunguska நதியின் அருகே இருந்த காட்டு பகுதியில் ஒரு மர்ம நிகழ்வு ஒன்று நடந்தது. 100 ஆண்டுகள் கழிந்தும் இன்றும் அது tunguska event என்ற விளக்க முடியாத மர்ம நிகழ்வாக திகழ்கிறது.
அன்றைய தினம் அந்த காட்டு பகுதிக்கு மேலே இருந்த வானம் திடீரென வெடித்தது. ஒரு பெரிய நெருப்பு கோளமாக அது ஒரு மகா வெடிப்பாக வெடித்து சிதறியது. அந்த நெருப்பு கோளத்தின் அளவு கிட்ட தட்ட 300 அடிகள் அகலம் . அதன் சக்தி ஆச்சர்ய பட தக்க வகையில் ஹிரோஷிமாவில் போட பட்ட சக்திவாய்ந்த அணுகுண்டை போல கிட்ட தட்ட 380 மடங்கு அதிக சக்தி
கொண்டதாக இருந்தது. அது வெடித்த போது அங்கே இருந்து 35 கிலோ மீட்டர் தள்ளி இருந்த இடத்தில் வீடுகளின் கண்ணாடி ஜன்னல்கள் வெடித்து சிதறின. அந்த காட்டில் 2000 சதுர கிலோ மீட்டருக்கு சுத்தமாக பஸ்பமாக்கி இருந்தது அந்த மர்ம நெருப்பு பந்து. மேலும், அத்துடன் அந்த காட்டின் எட்டு கோடி மரங்களை பிரமாண்டமாக அது அழித்து இருந்தது.
இவ்வளவு சக்தி வாய்ந்த ஒரு வெடிப்பை நாம் வானத்தில் பார்த்தது மிக சொற்பமே… அந்தளவு ஒரு சக்தியோடு அன்று வெடித்தது என்ன என்பது தான் இன்று வரை புரியாத மர்மம். பலர் அது ஒரு வின் கல் ..பூமியில் மோதும் முன்பே வெடித்து விட்டது என்றார்கள். பலர் அது ஒரு ஏலியன் ஷிப் ஆக்சிடெண்ட் என்றார்கள். அந்த மோதல் அரிசோனா வில் உள்ள ஏரிகல் விழுந்த இடத்தில உண்டான பள்ளம் போல் ஏன் பள்ளத்தை உண்டாக்க வில்லை என்பது இன்னொரு புரியாத புதிர்.
20 ஆண்டுகள் கழித்து Leonid kuli என்பவர் தலைமையில் ஒரு ரஷ்ய குழு அங்கே ஆய்வு செய்த போது 20 ஆண்டுகள் கழித்து அங்கே மரங்கள் நொறுங்கி கிடந்ததை கண்டார்கள். அவைகள் விசித்திரமான ஒரு பெரிய பட்டாம் பூச்சி வடிவில் நொறுங்கி சிதைக்க பட்டிருபதை கண்டார்கள்.
இது பூமி சாராத ஏதோ ஒன்றால் தான் நடந்துள்ளது என்று கருத்தை சொன்னார்கள்.
சிலர் அதை மேட்டர் ஆண்டி மேட்டர் களின் இணைவு என்றார்கள் (இயற்கையில் மேட்டருக்கு எதிரான ஒரு அதே போல பொருள் தான் ஆண்டி மேட்டர். இரண்டும் ஒன்று சேர்ந்து விட்டால் அளப்பரிய சத்தியுடன் ஒன்றை ஒன்று அழிக்க கூடியவை. ஆரம்ப கால பிரபஞ்சத்தில் ஒவ்வொரு ஆண்ட்டி மேட்டருடன் மேட்டர் மோதி அழிந்து மிஞ்சி இருபது தான் இன்றைய நாம் காணும் பிரபஞ்சம். மேல் சொன்ன அளவு வெடிப்பு சம்பவம் நடக்க ஒரு கோலி குண்டு அளவு மேட்டர் ஆண்ட்டி மேட்டர் மோதினால் போதுமானது)
அன்று என்ன பொருள் வெடித்தது என கருத்துக்கள் பல இருந்தாலும் tanguska சம்பவம் ஒரு விளக்க முடியாத மர்ம சம்பவமாகவே இருக்கிறது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.